சீனத்துக்கு கடத்தப்படும் அத்திமலைத்தேவன்! - பல்லவர்களின் வீழ்ச்சி



Amazon.in: Buy ATHIMALAI DEVAN (PART-2) / அத்திமலைத் ...
அமேஸான்



அத்திமலைத்தேவன் -2

காலச்சக்கரம் நரசிம்மா

வானதி

ப.496


இந்த பாகத்தில் முழுக்க சமுத்திர குப்தனின் எழுச்சி, பல்லவர்களின் படிப்படியான வீழ்ச்சி பௌத்த துறவிகள் மூலமாக எப்படி நடைபெறுகிறது என காட்டியுள்ளார். 

நாவலில் பெரும்பாலான சண்டைக்காட்சிகள் நடக்குமோ என நினைக்கும் இடத்தில் எல்லாம் நோக்குவர்மம், வர்மக்கலை ஆகியவைதான் இடம்பெறுவதால்,சற்று விரக்தி தோன்றுகிறது. 

இந்த நாவலும் முழுக்க அரசு குடும்பம், அங்கு நடைபெறும் சூழ்ச்சி, அதை எப்படி முறியடிக்கின்றனர் என்பதை மட்டுமே பேசுகிறது. வேறு விஷயங்கள் இதில் பேசப்படவில்லை. 

பல்லவர்களுக்கும், சோழர்களுக்கும் அருள் பாலித்த காஞ்சி வரதர் இம்முறை பல்லவ மன்னனால் கைப்பற்றப்பட்டு சீனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதுதான் கதை  குப்த வம்சத்தில் பிறக்கும் ஆர்யன், விவேகன், சுவேதன் ஆகியோரில் யார் சமுத்திர குப்தன் என்பதை அறியும் சோதனை, அறிந்தபிறகு அவனுக்கு மகுடம் சூட்டும் விழா, சமுத்திர குப்தனை கொல்ல  நினைக்கும் சகோதரர்கள், அவர்களுக்கு உதவம் துரோகிகள் என வாசிக்க நிறைய திருப்பங்கள் உள்ளன. பரபரப்பான பல்வேறு சம்பவங்களை நிறைத்துள்ளதால படிக்கும்போது சோர்வோ அயற்சியோ தோன்றுவதில்லை. 

அத்திவரதனை கைப்பற்ற இம்முறை பல்லவ குடும்பம், சீனர்கள், ஸ்வேதஜூனர்கள்  தொடங்கி சமுத்திர குப்தன் வரை நிறைய ஆட்கள் நாவல் முழுக்க திரிகிறார்கள். எனவே, எங்கே சதி இருக்கிறது, இல்லை, யாருக்கு யார் நண்பர் என்பதெல்லாம் கதையில் பார்க்காதீர்கள். படிக்க படிக்கவே உங்களுக்கு சூழல் என்னவென்று புரிபடும். கதையை ரசிக்கத் தொடங்குவீர்கள். கதையில் நிறைய கல்வெட்டுகள், வரலாற்று சம்பவங்களை படித்து ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் விளக்கம் தருகிறார் ஆசிரியர். அன்றைக்கு நடந்த சம்பவத்தை இன்றைக்கு எந்த இடத்தில் பொருத்துவது என வாசகர்கள் தடுமாறுவார்கள் அல்லவா?  அதற்காகத்தான் இந்த உத்தி. நூல் நிறைய வரலாற்றுத் தகவல்களை தருகிறது. 


கோமாளிமேடை டீம். 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்