முக கவசத்தோடு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்கவேண்டும் - பூனம் கேத்தர்வால் சிங்,WHO






haters love GIF




மொழிபெயர்ப்பு நேர்காணல்

மருத்துவர் பூனம் கேத்தர்வால் சிங், தெற்காசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர்

நோய்த்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள எந்த முக கவசத்தை அணியலாம்? இதில் நிறைய குழப்பங்கள் நிலவுகிறதே?

மருத்துவர்கள் அணியும் முக கவசம், என்95 முக கவசம் என இரண்டுமே கொரோனா வைரஸ் தொற்றுவதை பெருமளவு குறைக்கின்றன. ஆர்சிடி ஆய்வுகளின் படி தெரியவந்துள்ளன உண்மை இது. எனவே நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகள், சிகிச்சைகளை செய்து வரும் மருத்துவப்பணியாளர்கள் இந்த முக கவசங்களை அணியலாம். இதன் மூலம் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைகிறது..

இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

அடிப்படையில் முக கவசங்களை அணிவது தொற்றுநோய்களை குறைக்கிறது என்பது உண்மை. ஆனால் அதன் கூடவே தனிப்பட்ட சுகாதார விஷயங்களையும் கடைபிடிப்பது அவசியம்.

மக்கள் எந்த விதமான முக கவசங்களை அணியவேண்டும் என நினைக்கிறீர்கள்?

மக்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் அணியும் முக கவசங்களை அணிய அவசியமில்லை. நோய்த்தொற்றை குறைக்கும் துணியிலான முக கவசங்களை அணிந்தால் போதுமானது. சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாதபோது, அங்கு முக கவசங்களைப் பயன்படுத்துவது அவசியம்.

கடந்த பிப்ரவரியில் உலக சுகாதார நிறுவனத்தில் இதுபற்றிய ஆராய்ச்சி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் முக கவசங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட நிறுவனம் தன் கருத்துகளை வெளியிட்டது. பாலிபுரப்பலீன், பாலீஸ்டர் கொண்ட பல்வேறு அடுக்குகளை கொண்ட முக கவசங்கள் நோய்க்கிருமிகளை தடுப்பதோடு, உள்ளடுக்கில் உள்ள பருத்தி நம்மை பாதுகாக்கிறது. இது நாம் பேசுவதையும் தெளிவாக கேட்கவைக்கிறது என்று கூறியது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இந்நிலையில் என்ன செய்வது?

கோவிட் -19 பெருந்தொற்று வேகமாக உலக நாடுகளில் இன்றுவரை பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. இந்த நேரத்தில் அரசு பொது மருத்துவ கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவேண்டும். அது ஒன்றே நோய்த்தொற்றுக்கான சிகிச்சை, தனிமைப்படுத்தல், ஆகிய வசதிகளை வழங்க  உதவும். இதனை அனைத்து நாடுகளும் ஒன்றாக சேர்ந்து இணைந்தே எதிர்க்க முடியும். இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. பெரும்பாலானோர்க்கு குறைந்த பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன. இருபது சதவீதம் பேருக்கு மட்டுமே தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டுளன.

நோய்த்தொற்று அதிகரிக்கும்போது பொதுமுடக்கம் உதவுமா?

பொதுமுடக்கம் என்பது அரசு நோயாளிகளை பராமரிப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளைசெய்வதற்கான காலம். நோய்த்தொற்றை குறைக்க தனிமைப்படுத்துதல், சிகிச்சை, சமூக இடைவெளியை கடைபிடித்தல், பாதுகாப்பு நடைமுறைகளை அனுசரிப்பது என பல்வேறு விஷயங்களை கடைபிடிக்க வேண்டியுள்ளது.

நோயாளிகளை கண்டுபிடித்து தனிமைப்படுத்த இன்னும் அதிக சோதனைகளை செய்யவேண்டுமா?

கண்டிப்பாக. சோதனைகளை அதிகம் செய்தால்தான் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிய முடியும். அப்போதுதான் அவர்களுக்கு சிகிச்சை அளித்து தனிமைப்படுத்த முடியும். பிசிஆர் சோதனைகள் இதற்கு சிறந்த பலனைக் கொடுக்கலாம். உலக சுகாதார நிறுவனம், ஆன்டிபாடி தொடர்பான சிகிச்சைகளை பரிந்துரைக்கவில்லை.

இந்துஸ்தான் டைம்ஸ்

சஞ்சிதா சர்மா


கருத்துகள்