குறட்டையொலி கேட்டு நாம் ஏன் எழுவதில்லை? - மிஸ்டர் ரோனி பதில்கள்








Child, Sleeping, Car Seat, Girl, Baby, Childhood





மிஸ்டர் ரோனி

விலங்குகளுக்கு மதம் உண்டா?

மனிதர்கள் தவிர்த்த விலங்குகளுக்கு மதம் கிடையாது. ஆனால் அவை தம் இனம் சார்ந்த விலங்குகளுக்கு ஆபத்து நேரும் போது குறிப்பிட்ட முறையில் அதனை எதிர்கொள்கின்றன. இதில் முக்கியமானது, யானை. தன் இனத்தைச் சேர்ந்த யானை விபத்தில் பலியானால் தம் கூட்டத்தை கூட்டி அஞ்சலி செலுத்தும். ஆர்கா திமிங்கலம் தனது குட்டி ஒன்றை பறிகொடுத்துவிட்டது. இறந்துபோன அதன் உடல் அருகே இரு வாரங்கள் சுற்றி வந்துவிட்டு பின்னரே சென்றது.

விலங்குகள் தங்களுடைய மகிழ்ச்சியை, வேதனையை பல்வேறுவிதமாக வெளிப்படுத்துகின்றன. அவற்றின் மூளையை நெருக்கமாக ஆராய்ந்தால்தான் இதற்கு என்ன பதில் என்று கண்டறிய முடியும்.

நாம் குறட்டை விடும்  ஒலி நமக்கே கேட்பதில்லையே ஏன்?

காரணம், நாம் விடும் குறட்டை ஒலி நம் காதுகளுக்கு கேட்டாலும் அதனை தீவிரமாக உணராதபடி மூளை செயல்பட்டுக்கொண்டிருக்கும். நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது உங்கள் பெயர் அல்லது வேறு ஏதாவது பெயரைக் கேட்டால் நீங்கள் உறக்கம் கலைந்து எழுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ஒலி கூட மூளைக்கு குறைவாக கேட்கும். இதனால் வேறுபுறம் திரும்பி படுப்பது நடக்கும். குறட்டை விடுபவர்கள் பெரும்பாலும் அதனை காலையில் மறந்துவிடுவார்கள்.

டைனோசர்கள் வாழும் காலத்தில் நாம் இருந்திருந்தால், அவை நம்மை கொன்று தின்றிருக்கும் அல்லவா?

66 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நாம் வாழ்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? டைனோசரஸ் ரெக்ஸ் நிச்சயமாக நம்மை வேட்டையாடி இருக்கும். அதோடு, நாம் மட்டுமல்ல பிற விலங்குகளுக்கும் நம்மோடு சேர்ந்த உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடியிருக்கும். இதன் காரணமாக நம் இனம் முழுக்க இறுதிக்கு வந்துவிடும் என்று நினைக்கவேண்டியதில்லை. காரணம், புலி, சிங்கம் இன்று வாழ்ந்தாலும் கூட நாம் முழுக்க அழிந்துவிடவில்லை. காரணம் நாம் பிழைத்திருப்பதற்கான வழியைக் கண்டுபிடித்துவிட்டோம்.


கருத்துகள்