மகனை விடுவிக்க காவல்துறையோடு மோதும் தந்தையின் கதை! - ஃபர்ஸ்ட் கில் -2017








Amazon.com: First Kill [DVD]: Movies & TV






ஃபர்ஸ்ட் கில்

இயக்கம்  ஸ்டீவன் சி மில்லர்

கதை - நிக் கார்டன்

ஒளிப்பதிவு பிராண்டன் காக்ஸ்

இசை  ரியான் ஃபிரான்க்ஸ், ஸ்காட் நிக்கோலெய்



அமெரிக்காவில் பங்குச்சந்தையில் வேலை செய்துவரும் வில் பீமன் குடும்பஸ்தர், மருத்துவராக உள்ள தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு தான் பிறந்து வளர்ந்த ஊருக்குச் செல்கிறார். அங்கு வங்கி கொள்ளையடிக்கப்ப்பட்ட கும்பலால் பாதிக்கப்படுகிறார். இதனால் காவல்துறைக்கும், கொள்ளைக் கும்பலுக்கும் இடையில் குடும்பஸ்தர் சிக்கிக்கொண்டு தப்பிக்க முடியாமல் திண்டாடுகிறார். கொள்ளை கும்பலிடம் உள்ள தன் மகனை மீட்கவேண்டும். அதற்கு அவர்கள் சொன்ன இடத்திலுள்ள பணத்தை கொண்டு வந்து தரவேண்டும். இதனை எப்படி அவர் செய்தார், அவர் மகனை மீட்டாரா என்பதுதான் கதை. 

வில், தன் தொழில் வாழ்க்கையைத் தாண்டி பள்ளியில் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டு அடி உதைகளை வாங்கி வரும் மகனுக்கு தைரியம் கொடுக்க முயற்சி செய்கிறார். இதற்காக தனது குடும்ப பெருமையான தாத்தாவின் துப்பாக்கியை சுடப் பழக்குகிறார். இப்பயிற்சிக்காக ஓரிடத்திற்கு செல்லும்போது, வங்கிக்கொள்ளை பற்றிய விவகாரம் தெரியவருகிறது. இதில் தனது மகன் டேனியை காப்பாக்க துப்பாக்கியை தூக்குகிறார் வில். இறுதிவரை அந்த துப்பாக்கியை கீழே வைக்கவிடாமல் சூழ்நிலைகள் அவரை துரத்துகின்றன. அவர் காயம்பட்ட குற்றவாளியை பிழைக்க வைக்கிறார். ஆனால் அவன் பணத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு மகனை கூட்டிக்கிட்டு போ என மகனை பிணைக்கைதியாக பிடித்துக்கொள்கிறான். வில் என்ன முயற்சி செய்கிறான் என நகர ஷெரீப் மார்வின் ஹோவெல் கவனித்துக்கொண்டே பின்பதொடருகிறார். இதற்கு இடையே வில்லின் அப்பா போலீசில் எப்படி கொல்லப்பட்டார் என்ற உண்மையில் தெரியவருகிறது. 

இறுதியில் குற்றவாளிகளை காவல்துறை பிடித்ததா, டேனி தைரியமான பையனாக மாறினானா, வில்லின் அப்பா உண்மையில் எப்படி இறந்தார் என்ற உண்மைகளை அறிந்தால் படம் கிளைமேக்சுக்கு வந்துவிட்டது என்று பொருள். 

படத்தில் மகனைக் காப்பாற்ற வில் பீமன் செய்யும் சேசிங் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன. இறுதிக்காட்சியில் காட்டுக்குள் வரும் துப்பாக்கிசூடு ஒளிப்பதிவின் தரத்திற்கு சாட்சி. மார்வின் கோவெல்லின் தந்திரமான வில்லத்தனத்திற்கு காட்சிகள் அதிகம் இல்லை. இறுதியில் அவர் யார் என்று தெரியும்போது நமக்கு பெரிய ஆச்சரியம் ஏற்படுவதில்லை. அப்படியா என்று  தோன்றுகிறது. அவ்வளவே. 

போஸ்டரில் போட்டிருப்பது போல அவ்வளவு பரபரப்பாக இல்லை. அதுதான் பலவீனமாகிவிட்டது. 

கோமாளிமேடை டீம் 



கருத்துகள்