கணினிகளுக்கு ஆன்டி வைரஸ் மென்பொருள் தேவையா? -விண்டோஸ், ஐஓஎஸ், கூகுள் எது தேறுகிறது?
ஆன்டி
வைரஸூக்கு செலவு செய்யவேண்டுமா ?
விண்டோஸ்
இயக்குமுறைமையை பொறுத்தவரை அதிலுள்ள பாதுகாப்பு என்பது, தகவல்களைப் பாதுகாக்க போதுமானது
அல்ல. எனவே, வேறுவகையான இலவசமான அல்லது கட்டணம் செலுத்திப் பெறும் ஆன்டி வைரஸ் மென்பொருட்களை
இன்ஸ்டால் செய்வது அவசியம். விண்டோஸ் டிஃபென்டர் சேவை பெரியளவுக்கு உங்கள் தகவல்களை
பாதுகாக்காது என்பதே உண்மை. அதேபோல ஆண்ட்ராய்டு மென்பொருட்களை கைபேசியில் பயன்படுத்துபவர்களும்
கண்டிப்பாக ஆன்டிவைரஸ் மென்பொருட்களை இன்ஸ்டால் செய்துகொள்வது அவசியம்.
கணினிகளைப்
பொறுத்தவரை ஐஓஎஸ்களுக்கு ஆன்டி வைரஸ் பாதுகாப்பு இதுவரையில் இல்லை. காரணம், அக்கணினிகளை
ஆப்பிள் நிறுவனம் மட்டுமே தயாரிக்கிறது. விண்டோஸ் என்பது இயக்கமுறைமையாக மட்டுமே இருக்க,
பல்வேறு நாட்டு கணினி வன்பொருள் நிறுவனங்கள் கணினிகளை அதற்காக தயாரிக்கின்றன. இதுதான்
விண்டோஸின் பலமும், பலவீனமும் கூட. அனைவரின் வீடுகளிலும் கணினி இருக்கவேண்டுமென பில்கேட்ஸ்
நினைத்தார். அதனை சாதித்தார். ஆனால் ஆப்பிள் போல பாதுகாப்பாக சிறப்பாக இயங்கும் என்ற
வாக்குறுதியை அவரால் தர முடியவில்லை. எனவே, எப்போதும் வைரஸ் சார்ந்த தாக்குதல்கள் விண்டோஸ்
கணினியில் அதிகம் இருக்கும்.
ஆப்பிள்
ஓஎஸ்களில் ஆன்டி வைரஸ்கள் நிறுவப்படுவதில்லை என்று சொன்னேன் அல்லவா? இப்போது அதன் இறுக்கமான
மூடிய தன்மையை டெக் வல்லுநர்கள் உடைத்து வருகின்றனர். இதன்மூலம் ஐபோனை அடுத்தடுத்த
வெர்ஷன்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும். முழுமையாக மாற்றுவது சிரமம் என்றாலும் பகுதியளவு
விஷயங்களை மாற்ற முடியும். பொதுவாக வைரஸ்கள், மால்வேர்கள் கணினியில் நுழைந்தால் அதன்
நினைவகப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும். ஆனால் மேக் கணினிகள் இது நிகழ்வதில்லை.
இதற்கு காரணம் அதிலுள்ள டி2 சிப்கள். குறிப்பிட்ட புரோகிராம் தனக்கான நினைவகத்தை மட்டுமே
எடுத்துக்கொள்ள முடியும். பிற புரோகிராம்களின் நினைவகத்தை தொட முயன்றால், அச்செயல்பாடு
தடுத்து நிறுத்தப்படும். இதன் காரணமாகவே, ஆப்பிளின் போன்களில் இன்ஸ்டால் செய்யப்படும்
செயலிகள் கூட ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பெறப்பட்டவையாகவே இருக்கும். வேறு நிறுவனங்களின்
செயலிகளை இயக்கினால்தானே வைரஸ், மால்வேர் பிரச்னைகள் ஏற்படும்.
விண்டோஸ் நிறுவனம், 1993ஆம் ஆண்டு டாஸ் இயக்குமுறைமையிலிருந்து
ஆன்டி வைரஸ் சேவையை அளித்து வருகிறது. சைமன்டெக்கின் நார்டன் ஆன்டி வைரஸ் உள்பட பல்வேறு
நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. தற்போது, மைக்ரோசாப்ட் விண்டோஸ் டிஃபெண்ட்ர்
செக்யூரிட்டி சென்டர் கணினிகளுக்கு பாதுகாப்பை அளிக்கிறது. இதுவும் கூட பெரிய பாதுகாப்பு
கிடையாது. இணையத்தில் நீங்கள் மைக்ரோசாப்டின் எட்ஜ் போன்ற ப்ரௌசர்களைப் பயன்படுத்தினால்
மட்டுமே உங்களுக்கு மால்வேர்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இன்றைய காலத்தில்
யார் மைக்ரோசாப்டின் ப்ரௌசர்களை பயன்படுத்துகிறார்கள்? கூகுள் குரோம், ஃபயர்பாக்ஸ்
அல்லது இன்ன பிற ப்ரௌசர்களை பயன்படுத்தினால் விண்டோஸ் உங்களுக்கு பாதுகாப்பை வழங்காது.
இதனால்
விண்டோஸ் கணினிகளில் தனிப்பட்ட ஆன்டி வைரஸ்களை பயன்படுத்தினால் மட்டுமே பாதுகாப்பு
நிச்சயம். இலவசம் என்பதோடு காசு கொடுத்து வாங்கினால் நிறைய வசதிகள் கிடைக்கின்றன.
பிசிகேம்.
காம்.
நீல்
ரூபன்கிங்
கருத்துகள்
கருத்துரையிடுக