டிஜிட்டலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்வதும் சரியானது! - இயக்குநர் சூஜித் சிர்கார்
ஆனந்த்பஜார் |
இயக்குநர் சூஜித் சிர்கார்,
இந்தி திரைப்பட இயக்குநர்
குலாப் சித்தாபோ படம் அதன் வகை அடிப்படையில் வித்தியாசமாக
இருக்கிறது. எப்படி இந்த கதையைப் பிடித்தீர்கள்.
நான் படத்தின் எழுத்தாளர்
ஜூகி சதுர்வேதியோடு அமர்ந்து யோசித்தபோது இந்த கதை பிடிபட்டது. நான் இந்த நையாண்டி
வகை சினிமாவை எடுத்தது இல்லை என்பதால் உங்களுக்கு படத்தின் தன்மை புதிதாக இருக்கிறது.
லக்னோவில் உள்ள நில உரிமையாளர், அவரது கட்டடத்தில் குடியிருப்பவர்கள், அவர்களது பிரச்னைகள்,
அவர்களது சிந்தனை என பல்வேறு விஷயங்கள் படத்தில் பேசப்படுகிறது.
பிகு படத்திற்கு பிறகு அமிதாப் இந்த படத்தில் நடிக்கிறார்
அல்லவா?
நாங்கள் இந்தப்படத்தின்
கதையை உருவாக்கும்போது அவரை அணுகிவிட்டோம். கதையைக் கேட்டதும் அவர் நடிக்க சம்மதித்துவிட்டார்.
அவர் இயக்குநரின் கதை, அவரது பார்வையை மதிப்பவர். மேலும் பிற நடிகர்களோடு இணைந்து நடிப்பதில்
அவருக்கு நிகர் யாருமில்லை. கதாபாத்திரம், அதன் தோற்றம், உடல்மொழி என அனைத்திற்கும்
மெனக்கெடும் தன்மை என்னை பிரமிக்க வைக்கிறது.
டிஜிட்டல் வெளியீடு பற்றி எப்படி முடிவெடுத்தீர்கள்?
ஏப்ரல் 17ஆம் தேதி படத்தை
தியேட்டரில் வெளியிட நினைத்தோம். ஆனால் தியேட்டர்கள் திறப்பது சாத்தியம் இல்லை என்று
புரிந்தது. படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் இதனை நம்பியே உள்ளனர். எனவே நாங்கள் ஓடிடி
வழியே ஜூன் 12 ஆம் தேதி வெளியிட்டு விட்டோம். அமேஸான் வழியாக இருநூறு நாடுகளுக்கு மேல்
வெளியிடப்படுகிறது. இதுதான் எதிர்காலம் என்றால், இதனை பயன்படுத்திக்கொள்வது பிரச்னையாக
இருக்காது. இது நடைமுறைக்கான முடிவுதான். இதனைத் தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சிதான்.
படத்தின் புரமோஷன்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் படத்திற்கான புரமோஷன்களை
வெறுக்கிறேன். முடிந்தளவு அவற்றை குறைவாக இருக்கவேண்டுமென நினைக்கிறேன். அதுவும் இப்போது
பொதுமுடக்கம் வேறு உள்ளது. ஓடிடி தளத்தில் ஏராளமான படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
எனவே இந்த விஷயத்தில் எதுவும் பெரிதாக மாறவில்லை.
பொதுமுடக்க காலத்தில் என்ன பணிகளைச் செய்துகொண்டிருந்தீர்கள்?
வீட்டில் வேலைகள் அதிகமாக
இருந்தன. முதுகுவலி வேறு. இவற்றை சமாளித்துக்கொண்டு சில ஆவணப்படங்களைப் பார்தேன்.
பெருந்தொற்றுக்கு பிறகு நிலைமை எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?
படத்தின் படப்பிடிப்புகள்
இருநூறு பேர்களை மட்டுமே கொண்டு நடைபெறும். பாதுகாப்பு நடைமுறைகளை தினமும் கடைபிடிக்கவேண்டியிருக்கும்.
முன்பை போல நடைமுறைகள் எளிதாக இருக்காது. அதற்கு ஏற்ப நாமும் வைரஸை ஏற்றுக்கொண்டு வாழ
வேண்டியதுதான்.
உங்கள் நண்பர் இர்பான்
மறைவு செய்தியை எப்படி எதிர்கொண்டீர்கள்?
உண்மையில் எனக்கு அவரின்
இழப்பு பெரியதுதான். எனக்கு மட்டுமல்ல அவருடன் பழகியவர்கள் அனைவருக்குமே அவரின் இழப்பு
தனிப்பட்ட ரீதியில் துன்பத்தை தரக்கூடியதுதான். நான் டிவி சேனல்கள் படங்களைப் பார்க்கும்போதெல்லாம்
இர்பானின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஃபோர்ப்ஸ் இந்தியா
குணால் புரந்தரே
கருத்துகள்
கருத்துரையிடுக