கல்லூரி இளைஞனுக்கும், தாதாவுக்குமான ஈகோ மோதலும், போரும்! - ரணம் -














Ranam (2006) - IMDb

ரணம் 2006

இயக்கம் அம்மா ராஜசேகர்

வசனம்: மருதூரி ராஜா

ஒளிப்பதிவு சி.ஹெச். ரமணா ராஜூ

இசை மணிசர்மா



Ranam (2006 film) - Wikipedia

 

கிராமத்தில் அடிதடி என பட்டையைக் கிளப்புகிறான் சின்னா. குடும்பத்தின் கடைக்குட்டி என்பதால் அவனை அப்பாவும் இரண்டு அண்ணன்களும் நல்ல புத்திமதி சொல்லி நகருக்கு படிக்க அனுப்புகிறார்கள். வந்த இடத்தில் சின்னா சும்மா இருந்தாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் சும்மா இல்லை. அவர் நகருக்குள் வரும்போது முஸ்லீம் ஒருவரை வெட்டிக்கொள்கின்றனர். அதைப் பார்த்தும் கூட அப்பா சொன்ன புத்திமதியை மனதில் வைத்துக்கொண்டு என்னை விட்டுடுங்க என்று சொல்லிவிட்டு நழுவுகிறான் சின்னா. ஆனாலும் அக்கொலை பற்றி போலீசில் புகார் செய்கிறார்கள். அது சின்னாதான் என்று அவனது கல்லூரிக்கு வரும் ரவுடிகள் அவனை அடித்து துவைக்கின்றனர். டென்ஷன் ஆகும் சின்னா, அவர்களது தலைவன் பகவதிக்கு டார்ச்சர் தர ரெடியாகிறான். அதேசமயம் பகவதியின் தங்கை மகேஷ்வரி சின்னாவை மெல்ல நோட்டம் விடத் தொடங்குகிறாள்.

இவர்களின் காதல் தெரிந்தவுடன் பகவதி கொந்தளிக்கிறான். எல்லோரும் என்னைப் பார்த்து பயப்பட இந்த காலேஜ் படிக்கிற பையன் என்னை அவமானப்படுத்துகிறான் என பிபி எகிற கத்துகிறான். அவன்  சின்னாவை பழிவாங்கினானா? தன் தங்கையின் காதலை ஒப்புக்கொண்டானா என்பதுதான் கதை.

ஆஹா

படத்தின் முக்கிய அம்சமே காமெடிதான். ஆக்சனும் காமெடியும் குருமாவும் தக்காளியுமாக மணக்க படம் அழகாக இருக்கிறது. படம் முழுக்க கோபிசந்தின் கொடிதான். காம்னா தொப்புளைக் காட்டி பாடலில் ஆட மட்டும்தான் பயன்பட்டிருக்கிறார். பிஜூமேனன் இறுதி விட்டுக்கொடுக்காத வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

ஐயையோ

தனக்கு எரிச்சல் ஊட்டுகிறான் என்றால் சடாரென போட்டுத்தள்ளினால் முடிந்தது. எதற்கு அவ்வளவு நாட்கள் ஒருவனை விட்டுவைக்கவேண்டும் என்ற லாஜிக் கேள்வி கேட்டால் படம் முடிந்துவிடும். எடுத்த பாடல்கள் வீணாகிவிடும் என்பதால், படத்தில் ஆவேசப்படும் கோபிசந்த் போல உட்கார்ந்து ஒரே மூச்சில் படத்தை பாருங்கள்.

தியேட்டரில் பார்க்க சுவாரசியமாக இருக்கும் படம்தான். இது. பாக்ஸ் ஆபீசிலும் சோடை போகாமல் சூப்பர் ஹிட்டாக வென்ற படம்.

சலிக்காத சண்டை

 

கோமாளிமேடை


கருத்துகள்