குறைந்த வாடிக்கையாளர்கள் மூலம் அதிக வருமானம் பெறுவோம்! - நோயல் டாடா








Ratan Tata: In Tata he trusts: NA Soonawala said to be keen on ...





நோயல் டாடா

டிரெண்ட், வோல்டாஸ் நிறுவனத் தலைவர்

டிரெண்ட் நிறுவனத்தின் வருவாய் 85 சதவீத வருவாய், வெஸ்ட்சைட் மற்றும் பிற லேபிள்கள் மூலம்தான் கிடைக்கிறது அல்லவா?

நாங்கள் எங்களுடைய நிறுவனத்தின் பிராண்டுகளை அதிகம் காட்சிபடுத்தவிருக்கிறோம். இவை பிற நிறுவனங்களின் பொருட்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். பெருந்தொற்று பாதிப்பு முடிவுற்றபிறகு நிறைய கடைகள் டிரெண்ட் மெ

பெயரில் திறக்கவிருக்கிறோம்.

பெருந்தொற்று பாதிப்பால் விற்பனை மையங்களில் ஏதேனும் மாற்றங்களை செய்யவிருக்கிறீர்களா?

பலவீனமான பிராண்டுகளை இனி கடைகளில் விற்கவேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். பெருந்தொற்று காரணமாக நிறைய கடைகளை அடைக்க நேர்ந்துள்ளது. இந்தியாவில் இவணிக வலைத்தளங்களின் வளர்ச்சி 6 சதவீதம்தான் உள்ளது. எனவே, கோவிட் -19 க்கும்பிறகு கடைகளும், இவணிக நிறுவனங்களும் சேர்ந்து வளர வாய்ப்புள்ளது.

கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக வாடிக்கையாளர்கள் செலவு செய்வது குறைந்துள்ளது பற்றி உங்களது கருத்து என்ன?

இப்போது ஏற்பட்டுள்ள நிலை தற்காலிகமானதுதான். வேலையிழப்பு, எதிர்காலம் குறித்த கவலை ஆகியவை மக்களை குறைவாக செலவழிக்க வைத்துள்ளது. நாங்கள் இப்பிரச்னைக்கு பிறகு கடைகளை திறக்கும்போது, குறைந்த வாடிக்கையாளர்கள் எங்கள் கடைக்கு வந்தாலும், அதிகமாக பொருட்களை வாங்குவார்கள் என்று நம்புகிறேன்.

டிரெண்ட் நிறுவனத்தின் கீழ் ஹைபர் மார்க்கெட்டான ஸ்டார் பஜார் திட்டம் என்னவானது?

வாடிக்கையாளர்கள் வாங்கும் விலைக்கு ஏற்ப பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். இக்கடைகளில் ஃபேப்ஸ்டா, ஸ்கை, கிலா ஆகிய பிராண்டுகள் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன. பொருட்களை வைப்பதற்கான 250 இடங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அடுத்து 30 கடைகளை விரைவில் திறக்கவுள்ளோம்.

டாடாவின் சில்லறை விற்பனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விற்பனை திட்டங்களைப் பற்றி காகிதங்களில் பார்த்தால் நிறைய சாத்தியங்கள் தெரியும். ஆனால் நடைமுறையில் நிறைய தடைகள் பிரச்னைகள் உள்ளன. நாங்கள் சில்லறை கடைகளை டெஸ்கோ, ஸ்டார்பக்ஸ், டிட்கோ ஆகிய பல்வேறு நிறுவனங்களின் கூட்டணியுடன் உருவாக்கியுள்ளேன். சந்திரசேகர் தலைமையின் கீழ் அனைத்து பிராண்டுகளும் டாடாவின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சில்லறை விற்பனை நிலையங்கள் உட்பட எங்களது நிறுவனங்கள் டாடா கிளிக்கின் கீழ் வரும்.

டைட்டன் உங்கள் நிறுவனங்களிலே முத்திரை பதித்த நிறுவனங்களாக உள்ளது. கடிகாரங்களை தயாரிக்கும் நிறுவனம் இப்போது நகைகளை கூட தயாரித்து விற்கிறது அல்லவா?

கடிகார மார்க்கெட்டில், டைட்டனின் பங்கு 50 சதவீதமாகும். கடந்த இருபது ஆண்டுகளாக கடிகார சந்தையில் பெரிய வளர்ச்சி இல்லை. ஆனால் நகை சந்தை 3 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. 40 சதவீதமாக இத்துறை வளர்ந்துள்ளது. டைட்டன் ஐபிளஸ், விலை மதிப்பான சேலைகளை விற்கும் டனேரா ஆகிய நிறுவனங்கள் இப்போது வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன. அடுத்தும் நிறைய நிறுவனங்கள் இதே பிராண்டில் வரவிருக்கின்றன.

மால்களில் உள்ள கடைகளுக்கு வாடகை வசூலிப்பது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

மால்கள் முழுக்க அடைக்கப்பட்டிருப்பதால் கடைகளுக்கு வருமானம் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் கடைகளிடம் வருமானம் கேட்பது சரியல்ல. மேலும் கோவிட் -19 பாதிப்பு முடிந்தபிறகும், மக்கள் அங்கு அதிகம் வருவது கடினம். நோய் பற்றிய பயம்தான் இதற்கு காரணம். அடுத்து, இவணிக தளங்களின் ஆதிக்கத்தை வெல்ல மால் நிர்வாகத்தினர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இத்தகைய காலங்களில், குறைவான வாடகையை வாங்குவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

எகனாமிக் டைம்ஸ்

கலா விஜயராகவன், சதீஸ் ஜான்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்