மக்களைக் காக்க, தீயவர்களைக் கொல்ல லஷ்மி நரசிம்மராக உருவெடுக்கும் மருத்துவர்! - சிம்ஹா 2010
சிம்ஹா
2010
இயக்கம்:
போயபட்டி ஸ்ரீனு
இசை:
சக்ரி, சின்னா
ஒளிப்பதிவு:
ஆர்தர் வில்சன்
அநியாயம்
என்றால் ஆன் தி ஸ்பாட் எரிமலையாக பொங்கி, அநீதி செய்பவர்களை புத்தூர் கட்டுப்போட அனுப்பும்
ஆள் ஸ்ரீமன்நாராயணா. வசதியான ஆள். கல்லூரி பேராசிரியராகவும் வேலை பார்த்து வருகிறார்.
அவரது கல்லூரியே அவரை காவல்தெய்வமாக பார்க்கிறது. இந்த நேரத்தில் அங்கு புதிதாக படிக்க
வரும் மாணவி ஜானகிக்கு, போதைப்பொருட்களை விற்கும் மாணவர்களால் பிரச்னை ஏற்படுகிறது.
அதை தீர்த்து வைக்கிறார் நாராயணா. ஆனால் அதற்கடுத்த பிரச்னையின்போது, ஜானகி எங்கள்
அண்ணனின் மனைவி என ஒருவன் வந்து நிற்க, ஜானகி யார் என கதை செல்கிறது. இதில் முக்கியமானது,
பாட்டியால் வளர்க்கப்படும் ஸ்ரீமன் நாராயணா யார் என்பதுதான்.
ஆஹா
பாலய்யா
இந்த படத்தில் அடிக்கிற அடி எப்படிப்பட்டது என்றால், கோமாவில் 28 ஆண்டுகள் கிடந்தவர்
சடக்கென எழுந்தே விடுகிறார். ஆச்சரியமாக இருக்கிறதா? படம் முழுக்க பாலய்யாவின் ஆக்சன்
சரவெடிதான். சீரியசான கருத்துகளை சொல்லியபடி அடுத்தவர்களுக்கு உயிரைக்கொடுத்தாவது உதவ
வேண்டும், மாணவர்களை எப்படி வளர்ப்பது என இடையில் நிறைய பாசிட்டிவ்வான செய்திகளையும்
சொல்கிறார். நாராயணாவின் அப்பா பற்றி பிளாஷ்பேக்தான் படத்தின் உயிர்நாடி. கதை, கொரட்டலா
சிவா என்பதால் நம்பிக்கையுடன் பார்க்கலாம்.
ஐயையோ
அடிதடி
உதைதான். எதிர்மறை கதாபாத்திரங்களை வெட்டிக்கொல்லவேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும்போது
நாயகன் கோடரி எடுத்து தலையை வெட்டி வீசி விடுகிறார். காவல்துறையே வேண்டாம் நாங்களே
எங்கள் விஷயத்தை பார்த்துக்கொள்கிறோம் என வட்டார பெரும்புள்ளி சொல்ல போலீஸ் அமைதியாக
நிற்கிறது.
ஒன்பது
ஆண்டுகளுக்கு பிறகு பாலய்யாவுக்கு மாஸ் ஹிட் தந்த படம். மாநில அரசின் சிறந்த நடிகர்
விருதும் பெற்றார். படத்தை மனவாடுகள் கொண்டாடித் தீர்ததற்கு வேறென்ன சாட்சி வேண்டும்.
லஷ்மி
வெடி
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக