சக்தி வாய்ந்த பழக்கங்கள் வாழ்க்கையை கூட மாற்றும்! - இதோ சில எடுத்துக்காட்டுகள்
சக்தி
வாய்ந்த பழக்கங்கள்
நாம்
அறிந்தோ அறியாமலோ சில விஷயங்களை இயல்பாக செய்வோம். குறிப்பாக சூரிய ஆற்றல் கொண்ட காலை
நேரங்களை செலவழிப்பது, பயம் ஏற்பட்டால் எதிர்ப்பது அல்லது ஓடுவது, தேவைகளுக்காக போராடுவது
என்பனவற்றை சொல்லலாம். அவற்றில் சில....
அழும்
குழந்தை
வீல்
என்ற குழந்தையின் அலறலை யாருமே பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. கோவில், திருமணம்,
அலுவலக சந்திப்பு, உணவு விடுதி என எங்குமே குழந்தைகளின் வீறிடல் பலரின் கவனத்தை ஈர்க்கும்.
பின்னே சீர்காழி கோவிந்தராஜன் போல ஹைபிட்சில் முழங்கினால்... ஆனால் குழந்தைக்கு அது
அத்தியாவசியம். குழந்தைகள் உலகில் பிறக்கும்போது, அவர்களுக்கு உடல் முழு வளர்ச்சி பெற்றிருக்காது.
நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்காது. அளவு வேறு தம்மாத்துண்டு. வலி, பசி ஏற்பட்டால்
சொல்ல வார்த்தைகள், மொழி எல்லாமே அழுகைதான். ஏதோ சரியில்லை குழந்தை அழுதுதான் பெற்றோருக்கு
உணர்த்துகிறது. குழந்தைகள் தம்மைதாமே காப்பாற்றிக்கொள்ள அழுகை சக்திவாய்ந்த ஆயுதமாக
பயன்படுகிறது.
இனிப்பு
எனக்கு பிடிக்கும்
உடல்
இப்படித்தான் சொல்லி இனிப்பு பலகாரங்களை தொண்டைக்குழி வரை நிரப்புகிறது. உடலுக்கு சரியில்லை
என்று ஏதாவது தோன்றினால், இனிப்பு சாப்பிடத்தோன்றும். அதேசமயம், வயிற்று பொருமலின்போது
எண்ணெய்யில் செய்த இனிப்புகளை சாப்பிடுவது ஆபத்தானது. ஏன் ஒருவரை இடுகாட்டில் கூட படுக்கவைத்துவிடும்.
கசப்பான, மோசமான உணவுகளை சாப்பிட்டால் கண்டிப்பாக இனிப்பு சாப்பிடுவதற்கான உணர்வை உடல்
தூண்டும் என்பது தவிர்க்க முடியாது.
தூக்கம்
கண்களைத் தழுவட்டுமே?
வயது
வந்தோர் அனைவரும் தினசரி ஏழு மணி நேரத்திற்கு அதிகமாக தூங்கவேண்டும். இல்லையெனில் தினசரி
பணிகளில் கவனச்சிதறல் ஏற்படும். யோசிப்பதில் தடுமாற்றம், நினைவுத்திறன் குறைவு ஆகிய
பிரச்னைகள் தோன்றும். அலாரம் வைக்காமல் உடல் அலுப்பு நீங்க தூங்கி எழுந்தால்தான் உடல்
சோர்வு நீங்கும். மேலும், புத்துணர்ச்சி ஏற்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தி உத்வேகமாக
இயங்கும்.
உடல்,
உள்ள நலம், இதய நலம் ஆகியவற்றுக்கு தூக்கம் அவசியமான ஒன்று.
ஹவ்
இட் வொர்க்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக