ஜின்பிங்கின் ஆட்சியில் திட்டமிட்டு எல்லைமீறல்கள் நடத்தப்படுகின்றன!







Hand drawn traditional chinese dragon Free Vector







மொழிபெயர்ப்பு நேர்காணல்

ஜெயதேவ் ரானடே

முன்னாள் கூடுதல் செயல், அமைச்சரவை செயலர், சீன உறவு ஆய்வு மையத் தலைவர்

சீனா தற்போதுள்ள பொருளாதார சிக்கலில் தைவான், இந்தியா ஆகியவற்றை தாக்கி வருகிறது என்கிறார் ஜெயதேவ் ரானடே.

சீனா – இந்தியா எல்லைப்பகுதியில் என்ன நடந்து வருகிறது. எதற்கான படைகளை நிறுத்தியபடி இருநாடுகளும் சண்டையிட்டு வருகின்றன?

சிக்கிமின் நாகு லா, வடகிழக்கு எல்லைப்பகுதிகள், நேபாளத்தின் எல்லை ஆகிய இடங்களில் சீனா முதலிலிருந்தே அத்துமீறி வருகிறது. ஜின்பிங் பதவியேற்றபிறகு இந்த அத்துமீறல்கள் கவனமாக, வேகமாகவும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றன.

எல்லைப்பகுதி தொடர்பான அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் கருத்துகளை நீங்கள் ஏற்கிறீர்களா?

அவர் கூறும் கருத்துகளை நான் மறுக்கிறேன். குறிப்பிட்ட இடங்களில் இத்தனை முறை அத்துமீறல்களை நடத்துவது இயல்பான விஷயமாக பார்க்கவே முடியாது. கால்வான் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எந்த அத்துமீறல்களும் நிகழவில்லை என்று யோசித்தாலே எனது சிந்தனைக்கோணம் உங்களுக்குப் புரிந்துவிடும்.

சீனா காலவான் பகுதியை கவனிப்பது எதற்காக?

அங்கு சீனா – பாகிஸ்தான் பொருளாதார திட்டங்கள் நடைபெறப்போகின்றன. இதன்காரணமாக இந்திய அரசு அங்கு அமைக்கும் அடிப்படை சாலைப்பணிகளை சீன அரசு தடுக்க நினைக்கிறது. தார்புக், சியோக், தாலட் பெக் ஓல்டி எனும் சாலை பணி நிறைவடைந்தால் இந்திய நாட்டு ராணுவம் அப்பகுதியில் வலிமை பெற்றுவிடும். இதனை தடுக்க சீனா நினைக்கிறது. இந்த நேரத்தில் இந்திய அரசு 370 சட்டத்திருத்தத்தை கையில் எடுக்க சீனா அதனை ஐ.நா சபையில் பேசுவதற்கு திட்டமிடுகிறது. இதில் பாகிஸ்தானை தூண்டிவிட்டு, தனக்கான காரியங்களை செய்துகொள்ள திட்டமிடுகிறது.

இப்போதுள்ள சிக்கலை எப்படி தீர்ப்பது?

சீனாவின் மீது அழுத்தம் கொடுத்துத்தான் பேச்சுவார்த்தையை தொடங்கி கொண்டு செல்ல வேண்டும். அவ்வளவு சீக்கிரம் சீனா, தனது பிடியை எதிலும் விட்டுக்கொடுத்துவிடாது. உள்நாட்டில் பல்வேறு பிரச்னைகளை சரி செய்யமுடியாத சூழலில் சீனா எதற்கு இப்படி நடந்துகொள்கிறது என்பதை நீங்கள் யோசிக்கவேண்டும்? டோக்லாம் பகுதியில் 2017ஆம் ஆண்டு சீன அரசு நடந்துகொண்டதை நினைவுகூருங்கள். நான் சொல்லும் உண்மை புரியும்.

சீன அதிபர் ஜின்பிங்கின் நிலை பற்றி கூறுங்கள்.

சீனாவில் உள்நாட்டில் பலத்த பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏற்பட்ட பல்வேறு விமர்சனங்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். ஒரு மனிதர் சீனாவை ஆள்வதை கல்வியாளர்கள், அறிஞர்கள், மாணவர்கள் என பலரும் விரும்பவில்லை என்பதே உண்மை.

இந்து ஆங்கிலம்

அனந்த் கிருஷ்ணன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்