தலைநகரில் தொடர்ச்சியாக தோன்றும் நிலநடுக்கங்கள்! - டில்லியில் அடுத்த பிரச்னை
தலைநகரை
மிரட்டும் நிலநடுக்கம்!
இந்தியத்
தலைநகரான டில்லியில் கடந்த இரு மாதங்களில் 13 முறை சிறிய அதிர்வுகளைக் கொண்ட நிலநடுக்கங்கள்
ஏற்பட்டிருக்கின்றன. இது முதல்முறையல்ல, கடந்த இருபது ஆண்டுகளாக 600 முறை நிலநடுக்கங்கள்
ஏற்படுள்ளதாக ஆவணங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தை
அளவிடும் கருவியான சீஸ்மோமீட்டர் நாடு முழுவதும் 115 என்ற எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளன.
அதில் 16 டில்லியில் உள்ளன. மொத்து ஆறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் அளவுகோலில் நான்கு
பதிவு செய்யப்படுகின்றன.
இத்தகைய
நிலநடுக்கத்திற்கு இந்திய தகட்டில் ஏற்பட்டுள்ள விரிசல்கள்தான் காரணம் என்று புவியியல்
ஆய்வாளர்கள் தகவல் சொல்லுகின்றனர். மகேந்திரகர் – டேராடூன் வழியில் நிறைய நிலநடுக்கங்கள்
ஏற்பட்டுள்ளன.
டில்லியில்
ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் அதிர்வு தன்மை 4.5 ஆகும்.
அடுத்து
பெரும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா? நிச்சயம் இதற்கு யாரும் பதில் சொல்ல முடியாது.
நிலநடுக்கம், புயல் ஆகியவற்றை எப்போது எப்படி வரும் என்று கூறமுடியாது.
ஒரு
சிலர் பெரும் நிலநடுக்கம் வருவதற்கு முன்பு, குறிப்பிட்ட இடத்தில் சிறிய நிலநடுக்கங்கள்
ஏற்படும் என்கின்றனர்.
இந்தியத்
தட்டில் ஏற்பட்டுள்ள ஆற்றல் தேக்கத்தை இந்த சிறிய நிலநடுக்கங்கள் வெளிப்படுத்துகின்றன
என்று சிலர் வாதிடுகின்றனர். ஆயிரம் சிறு நிலநடுக்கங்கள், 6 ரிக்டர் அளவில் ஏற்படும்
நிலநடுக்கத்தின் ஆற்றலை வெளியிடுமாம்.
இந்தியா
டுடே
சுப்ரியோ
மித்ரா
கருத்துகள்
கருத்துரையிடுக