சூழல் மாசுபாடுகளால் புயல்களின் வலிமை அதிகரித்து வருகின்றன! - வானியலாளர் ரகு முர்டுகுடே








Twister, Tornado, Typhoon, Spiral, Blue, Weather, Storm








கடல் வெப்பமாவதால் புயல்கள் வலிமையாகின்றன

ரகு முர்டுகுடே, தட்பவெப்பநிலை வானியலாளர்(மேரிலேண்ட் பல்கலைக்கழகம்)

வரலாற்றுரீதியாக புயல்கள் அரபிக்கடலில்தான் உருவாகி வந்துள்ளன. வங்காள விரிகுடாவில் புயல்கள் அதிகம் உருவாகி வரவில்லை. இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

பருவகாலத்திற்கு முன்னர் நீங்கள் கூறியபடி வங்காள விரிகுடா, அரபிக்கடல்களில் புயல்கள் உருவாகின்றன. நவம்பரில் வங்காள விரிகுடாவில் மட்டும் 80  சதவீத புயல்கள் உருவாகின்றன. அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் சற்று குழப்பமானவை. நம்மிடம் ஆழமான தகவல்கள் இல்லை என்றாலும் மாசுபாடு, அரபிக்கடலில் ஏற்படும் புயல்களை தீவிரப்படுத்துவதாக தோன்றுகிறது.

இந்தியா புயல்களிலிருந்து எப்படி தப்பி பிழைப்பது?

பொதுவாக, பேரிடர் மேலாண்மைகளில் கவனம் செலுத்துவது அவசியம். இந்திய தட்பவெப்பநிலை நிறுவனத்தின் கருத்துகளை காதுகொடுத்து கேட்பது அவசியம். நகரத்திலுள்ள கழிவுநீர் அமைப்புகளை சீர்படுத்துவது முக்கியம. மாங்குரோவ் காடுகள் அழிவு, நகரிலுள்ள மரங்கள் தீவிரமாக அழிக்கப்படுவது அனைத்தும் புயல்கள் தீவிரமடைவதை ஊக்குவிக்கின்றன. அதற்கு முன்னரே அதனைத் தவிர்க்கும், பாதிப்புகளை கணக்கிட்டு தற்காத்துக்கொள்ளும் பணிகளை தொடங்குவது அவசியம்.

வெப்பமயமாதல் புயலின் வேகத்தை ஊக்குவிக்கிறதா?

பொதுவாகவே இந்தியக் கடல்களை நான் நாற்பது ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். புயல்களின் எண்ணிக்கை அங்கு அதிகரிக்கவில்லை என்றாலும், அவை வலுப்பெற்று வருவதைக் காண்கிறேன்.  

கடலில் ஏற்படும் வெப்பமயமாதல் பாதிப்புகள், புயல்களை தீவிரமாக உருவாக்க உதவுகின்றன. தட்பவெப்பநிலையின் வெப்பமும் அதிகரிக்கும். இந்த புயல்கள் சக்தி வாய்ந்தவையாகவும், ஈரப்பதம் கொண்டவையாகவும் உள்ளன. இந்த சீசனில் கோல்கட்டா, மும்பையை தீவிரமாக தாக்கியுள்ளது பற்றிய உண்மை இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். அரபிக்கடல் எந்த ஒரு கடலையும் விட வேகமாக வெப்பமடையக்கூடியது. வங்காள விரிகுடா ஏற்கெனவே வெப்பமாகத்தான் இருக்கிறது. நாம் வெப்பமயமாதல் மூலம் புயல்களை ஊக்குவிக்கத் தொடங்கியிருக்கிறோம் அவ்வளவுதான்.

இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சமூக பொருளாதார மாற்றங்கள் பற்றிய ஆய்வு ஒன்றில் பங்களித்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டோம்.

நாங்கள் மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை கையில் எடுத்துக்கொண்டோம். கூடுதலாக மக்களின் வேலைவாய்ப்பு, சாதி, மின்வசதி, வருமானம் ஆகியவற்றையும் கருத்தில்கொண்டோம். ஆச்சரியப்படத்தக்க வகையில் இயற்கைப் பேரிடர்களை கையாள்வதில் அரசு முன்னேற்றம் காட்டியுள்ளது. ஆனால் மக்கள் வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் இல்லை. பெண்கள் கல்வி கற்பதும், வேலைக்குச்செல்வதும் அதிகரித்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா

வைஷ்ணவி சந்திரசேகர்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்