பின்காலனித்துவ வரலாற்றை பதிவு செய்யும் எழுத்தாளர்! - மார்லன் ஜேம்ஸ்!
டைம் இளம் தலைவர்கள்
மாய எழுத்தாளர்
மார்லன் ஜேம்ஸ்
நான்
மார்லனை நியூயார்க் பொது நூலகத்தில் சந்தித்தேன். எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் செவன் கில்லிங்க்ஸ்(2014)
என்ற நாவலைப்பற்றிய நேர்காணலை நூலகத்தில் சந்தித்து எடுத்தேன். இவர் எழுதிய நாவலின்
தலைப்பு வசீகரமாக இருந்தது. நூலில், பாப் மார்லியை படுகொலை செய்வதற்கான முயற்சிகளையும்,
ஏராளமானோர் அப்படி கொலை செய்யப்ப்பட்டது பற்றியும் விரிவாகவே பேசிய நூல் இது.
2015ஆம்
ஆண்டு மேன்புக்கர் பரிசை வென்றவர் நம் தலைமுறையின் முக்கியமான எழுத்தாளராக உயர்ந்துள்ளனார்.
சாதி, இனம், ஒரினச்சேர்க்கையாளர்கள் உரிமை என தன் மூளையில் தோன்றும் பல்வேறு சிந்தனைகளை
அற்புதமான நூலாக மாற்றி வருகிறார் மார்லன் ஜேம்ஸ். இவரது முதல் நூலான ஜான் க்ரோஸ் டெவில்
என்ற நூல் 2005ஆம் ஆண்டு வெளியானது. இந்த நூல் பதிப்பாளர்களால் எழுபது முறை நிராகரிக்கப்பட்டது.
1970ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஜமைக்காவில் பிறந்த எழுத்தாளர் இவர். இவரது நாவல்கள்
பின்காலனியத்துவ காலத்தை அடிப்படையாக கொண்டவை. மாயத்துவம் செறிந்த இவரது எழுத்துகள்
நீங்கள் படிக்கவேண்டிய ஒன்று.
சல்மான்
ருஷ்டி
கருத்துகள்
கருத்துரையிடுக