பொது முடக்கத்தால் நோய்த்தொற்று குறையாது! - மருத்துவர் ஜெயப்பிரகாஷ் முலியில்
ஜெயப்பிரகாஷ்
முலியில், தேசிய நோய்த்தொற்று தடுப்பியல் கழக தலைவர்
கமிட்டி ஒன்றை அமைத்தால் கோவிட் -19 கட்டுக்குள் வரும் என்று
அரசு தீர்மானித்துள்ளது. இதுபற்றிய உங்களது கருத்து?
அறிவியல்
படி ஒரு நாட்டில் வைரஸ் தொற்று பரவத்தொடங்கிவிட்டால், அதனை பொதுமுடக்கம் மூலம் மட்டும்
கட்டுப்படுத்துவது கடினம். நாட்டிலுள்ள 65 சதவீதப் பேருக்கு நோய்த்தொற்று இருந்தாலும்
அறிகுறிகள் இல்லை. அறிகுறிகள் தெரிய வரும் வரையில் அவர் பல்வேறு பொருட்களை வாங்க கடைகளுக்கு
சென்று வந்தால் எளிதாக நோய் பரவும். நம் நாட்டிலுள்ள மக்கள்தொகை பெருக்கத்தால் நோய்த்தொற்றை
பூஜ்ஜியமாக்குவது மிகவும் கடினமான முடியாத செயல் கூட.
சோதனைகளைப்
பற்றிய கொள்கைகளை ஆதரிக்கிறீர்களா?
ஆர்டி
பிசிஆர் சோதனைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் நோயுற்றவர்கள்
அறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். நெகட்டிவ் என்று சோதனையில் வந்தாலும் கூட
அவர்களையும் கண்காணிக்கவேண்டியது அவசியம். காரணம், அறிகுறிகள் இல்லாமல் நோய்த்தொற்று
பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நோய்த்தொற்று குடும்ப அங்கத்தினரை
அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது.
உடலிலுள்ள
இம்யூனோகுளோபின் ஜி என்ற சோதனையைச் செய்து அதில் பாசிட்டிவ் வந்தால் உங்களுக்கு நோய்
இல்லை என்று கூறலாம். பிசிஆர் சோதனை என்பதையும் இதனையும் செய்து உடலின் தன்மையை சரிபார்த்துக்கொள்ளலாம்.
பொதுமுடக்க
காலத்திலும் கூட நோய்த்தொற்று பாதிப்பு குறையாமல் கூடுகிறதே?
பொதுமுடக்க
காலகட்டம் என்பது நோய்த்தொற்று பரவலைக் குறைக்கும். அதற்கு முன்பே மக்கள் நோய்த்தொற்றுக்கு
ஆட்பட்டால், அந்த எண்ணிக்கை எப்படி குறையும்? அவர்கள் பலருக்கும் நோய்த்தொற்றை பரப்புவார்கள்.
அதனை தடுப்பது கடினம். ஆறுமாதங்கள், ஒன்பது
மாதங்கள் என பொதுமுடக்கம் நீண்டாலும் நோயுற்றவர்களின் எண்ணிக்கை குறையாது.
மக்கள்
பலியாகாமல் நம்மால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாதா?
அறுபது
வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்தியா மட்டுமல்ல
உலக நாடுகள் பலவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இளைஞர்கள் மட்டும் வேலைக்கு செல்லவேண்டும்.
வயதானவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதே நல்லது. இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி
அதிகம் என்பதால் அவர்களுக்கு பாதிப்பும் மரணமும் குறைவாகவே ஏற்படும். அப்படி பாதிப்பு
ஏற்பட்டால் மருத்துவமனைகளுக்கு சென்று குணப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் வயதானவர்கள்
பாதிக்கப்பட்டால் மருத்துவமனைகளில் கூட்டம் குவியும். அது தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும்.
பிளாஸ்மா
தெரபியை பல்வேறு தனியார் மருத்துவமனைகள் சோதித்தன. ஆனால் அரசு அதனை ஊக்குவிக்கவில்லையே?
வைரஸ்
நோய்களுக்கு ஒரேவிதமாக சிகிச்சை பயன் அளிக்காது. ஆன்டிபாடிகளை உடலில் உருவாக்குவதுதான்
பிளாஸ்மா தெரபி. ஆனால் இந்த சிகிச்சை பற்றிய விவரங்களை நான் தாளில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
இதன் வெற்றியை இதுவரை பார்க்கவில்லை.
நோய்த்தொற்றை
கண்காணிப்பு என்பது பலன் தருமா?
உலக
நாடுகளின் உதவியோடு அப்படியொரு கண்காணிப்பை உருவாக்கலாம். குறிப்பிட்ட நாட்டில் உருவானது
என்ற விமர்சனம் செய்து பேசுவது இவ்விவகாரத்தில் சரிவராது. வெளிப்படைத்தன்மையோடு இந்த
கண்காணிப்பு அமைப்பு உருவானால் நோய்த்தொற்றை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
ஃபிரன்ட்லைன்
டி.கே.
ராஜலட்சுமி
கருத்துகள்
கருத்துரையிடுக