விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் வழங்க உள்ளோம் - சித்தார்த் நாத் சிங்
jagran.com |
சித்தார்த் நாத் சிங்
உ.பி மாநில முதலீட்டுத்துறை மற்றும் சிறுகுறு தொழில்துறை
அமைச்சர்.
உ.பி அரசு சீனாவில்
முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வைக்க பிரம்ம்பிரயத்தனப்படுகிறதே?
நாங்கள் இதுவரை மூன்று வெபினார் மூலமாக 700 நிறுவனங்களிடம் எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யச்சொல்லி பேசியிருக்கிறோம்.
நிறுவனங்களுக்கு நிலவங்கி மூலமாக குறைந்த விலைக்கு நிலங்களை வழங்குகிறோம். அவர்களுக்கு
விதிக்கும் வரியும் குறைவுதான். அவர்கள் தங்கள் பொருட்களை விற்கவும் ஏதுவான ஏற்பாடுகளை
செய்யப்போகிறோம்.
தலைநகரைத்தை எங்கள் மாநிலத்திலிருந்து எளிதாக அடைய முடியும்.
புருவான்ச்சல் எக்ஸ்பிரஸ்வே, பந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே, கங்கா எக்ஸ்பிரஸ்வே ஆகிய சாலைகள்
போக்குவரத்திற்கு உதவும். மேலும் ஜேவார் விமானநிலையமும் வணிகத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
குஷிநகர், வாரணாசி, லக்னோ ஆகிய நகரங்களிலும் நாங்கள் விமானநிலையங்களை
தொடங்க உள்ளோம். பிரக்யாராஜ், சித்ராகூட், பரேலி ஆகிய பகுதிகளிலும் நாங்கள் விமானநிலையங்களை
நிறுவன உள்ளோம்.
உங்களது திட்டங்களுக்கு
நிறுவனங்களின் எதிர்வினை என்ன?
நல்ல வரவேற்பு இருக்கிறது. மைக்ரோசாப்ட் தங்களுடைய நிறுவனத்தை
நொய்டாவில் அமைக்க உள்ளனர். தென்கொரியாவைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சீனாவிலிருந்து
தங்களது தொழிற்சாலையை இங்கே இடம் மாற்ற உள்ளனர். இதன் மூலம் எங்கள் மாநிலத்திற்கு
6500 கோடி முதலீடு கிடைக்கவுள்ளது. மேலும் ஜெர்மனியைச் சேர்ந்த வோன் வெல்க்ஸ் நிறுவனம்,
ஆக்ரா நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்கவுள்ளது. இந்த நிறுவனம் கூட சீனாவிலிருந்து தன்னுடைய தொழிற்சாலையை
ஆக்ராவுக்கு மாற்றவுள்ளது.
மாநில அரசு,
விவசாய நிலங்களை கையகப்படுத்துவது பற்றி பேசுகிறார்களே?
தொழிற்சாலைகள் அமைப்பதற்கான விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான
சட்டத்தை மாநில அரசு தீட்டியுள்ளது. இதன்மூலம் தொழில்நிறுவனங்களுக்கு நிலங்களை குறைவான
விலைக்கு அளிக்கலாம். இந்த நிலங்களை தொழில்நிறுவனங்களுக்கு குறைவான விலையில் அளிப்பதன்
மூலம் தொழில் வளம் பெருகும்.
எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்பட்டுள்ள இருபுறங்களிலும் ஒரு கி.மீ.
தொலைவுக்கு உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்த வழி செய்யும் சட்டத்தையும் உருவாக்கியுள்ளோம். இந்த சட்டம் தற்போது உருவாகிவரும் சாலைகளுக்கு பொருந்தாது.
சிறுகுறு தொழிலகங்கள்
மூலம் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என உ.பி. முதல்வர்
யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தாரே?
இடம்பெயர்ந்து மாநிலத்திற்கு திரும்பியுள்ள தொழிலாளர்களை
இப்போதுதான் கணக்கிடத் தொடங்கியுள்ளோம். முதல்கட்டமாக அவர்களின் திறமைகளை அளவிட்டு
தகுந்த தொழில்துறைக்கு அவர்களை அனுப்பி வைப்போம். பதினொரு லட்சம் பேருக்கு முதலில்
வேலைவாய்ப்பை வழங்குவோம். அடுத்து சிறுகுறு தொழிலகங்கள் மாநிலத்தில் 90 ஆயிரம் என்ற
எண்ணிக்கையில் உள்ளன. அவை உபி மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம். இதில் 56.767 நிறுவனங்களுக்கு 2002 கோடி ரூபாயை
கடனாக வழங்க உள்ளோம். இதன்மூலம் தோராயமாக இரண்டரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக