இந்தியா - சீனா ஒப்பீடு
இந்தியா - சீனா ஒப்பீடு இரு நாடுகளுக்கும் எந்த பொருத்தமும் இல்லை. அனேகமாக மக்கள்தொகையில் மட்டுமே இந்தியா சற்று முன்னிலை பெறுகிறது. ஆசியாவில் மிகப்பெரும் சக்தியாக வளர்ந்துள்ள வல்லரசு நாடான சீனாவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இரு நாடுகளிலும் 1.4 பில்லியனுக்கும் அதிக மக்கள் உள்ளனர். இப்போதைக்கு இந்தியாவே பந்தயத்தில் முன்னிலையில் உள்ளது. ஐ.நா மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, சீனாவில் 116 ஆண்களுக்கு 100 பெண்கள் உள்ளனர். இந்தியாவில் 100 பெண்களுக்கு 110 ஆண்கள் உள்ளனர். உலக வங்கி அறிக்கைப்படி, 2022ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள மக்களின் தோராய ஆயுள் எழுபத்தொன்பதாக உள்ளது. இந்தியாவில் மக்களின் ஆயுள் அறுபத்தெட்டாக உள்ளது. சீனாவின் பொருளாதாரம் 18 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு. இந்தியா பொருளாதார வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பொருளாதார அளவு 3.7 ட்ரில்லியன் டாலர்கள். சீனாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள் உண்டு. இந்தியாவில் 820 மில்லியன் இணையப் பயனர்கள் உள்ளனர்...