இடுகைகள்

பயன்பாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பயன்பாடு இல்லாத கைவிடப்பட்ட சுரங்கத்திலிருந்து மின்சாரம்!

படம்
  பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம்! பிரான்சில் உள்ள நகரம், ஏவியன். இங்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற அதிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள். 50 அடி ஆழத்தில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் மீத்தேன் வாயுவை சேகரித்து பயன்படுத்துகிறார்கள்.  பொதுவாக பயன்பாடற்ற நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளியாகும். இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் சிலர் முயன்று வருகிறார்கள். மீத்தேனிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது புதிய முயற்சி அல்ல. 1950ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் பயன்பாடற்ற சுரங்கங்களிலிருந்து மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். ஜெர்மனியில் இப்படி பெறும் மின்சாரம் மூலம் 1,50,000 வீடுகள் பயன்பெறுகின்றன.  சுரங்கத்தில் வெளியாகும் மீத்தேனை தடுப்பது கடினம். இந்த வாயு, நீருடன் சேர்ந்தால் நச்சுத்தன்மையை உருவாக்கும். வாயுவை அப்படியே வளிமண்டலத்தில் சேருமாறு விட்டால், பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். பிரான்ஸில் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி என்ற அமைப்பு, மீத்தேனை சேகர

தற்போது புழக்கத்தில் உள்ள கொரானோ பெருந்தொற்றுக்கான மருந்துகள்!

படம்
  Baricitinib மேம்படுத்தியவர் எலி லில்லி - இன்சைட் கார்ப்பரேஷன் வகை  ஜானஸ் கைனாஸ் திறன் மக்கள் இறப்பதை 50 சதவீதம் குறைத்துள்ளது.  நிலை இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு தர நிர்ணய அமைப்பு  இதனை ஏற்றுள்ளது. சந்தையில் முழங்கால் வலிக்காக பயன்படும் மருந்து இது.  Sotrovimab மேம்படுத்தியவர் கிளாக்ஸ்கோஸ்மித் கிளைன் நிறுவனம் பிரிவு மோனோசினோல் ஆன்டிபாடி திறன் மக்களின் இறப்பு 85 சதவீதம் குறைந்துள்ளது.  நிலை இந்தியாவில் காத்திருப்புதான் பதில். இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம், மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.  Paxlovid மேம்படுத்தியவர் பைசர் பிரிவு ஆன்டி வைரல் திறன் இறப்பு எண்ணிக்கையை 88 சதவீதம் குறைக்கிறது. தடுப்பூசி போடாத மக்களை இறப்பிலிருந்து காக்கிறது.  நிலை இந்தியா ஒப்புதல் அளிக்கவில்லை. எப்டிஏ, அமெரிக்க அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.  Regncov மேம்படுத்தியவர் ரீஜெனரோன் பிரிவு  மோனோகுளோனல் ஆன்டிபாடி திறன் மக்களின் இறப்பை 81 சதவீதம் காக்கிறது. டெல்டா, ஓமிக்ரானுக