பெல்ஜியத்தில் நேரும் போர் அவலக் காட்சிகள்!
எனது சிறிய யுத்தம் லூயிஸ் பால் பூன் ஆங்கிலத்தில் பால் வின்சென்ட் தமிழில் பெர்னார்ட்சந்திரா காலச்சுவடு மொத்தம் 136 பக்கங்களைக் கொண்ட பிளெமிஷ் நாவல். பெல்ஜியத்தில் பேசப்படும் மொழி பிளெமிஷ். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஜெர்மனி நாட்டு ராணுவம் பெல்ஜியம் நாட்டை போரிட்டு கைப்பற்றுகிறது. அந்த சமயத்தில் அங்குள்ள நகரத்தில் வாழும் எழுத்தாளர், அங்குள்ள வாழ்க்கை, மக்களின் மனநிலை, சுயநலம், ஆவேசம், கோபம், கையறுநிலை, வறுமை, அபத்தம்,பேராசை என பல்வேறு உணர்வு நிலைகளை காட்சிபடுத்தியது போல எழுதியிருக்கிறார். நூலை ஆழமாக புரிந்துகொள்ள பெல்ஜியம் நாட்டின் நிலப்பரப்பு அரசியலை அறிந்துகொள்வது முக்கியம். இதன் வழியாக, எழுத்தாளர் கூற விரும்பும் விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். இந்த நாவலில் தொடர்ந்து வரும் பாத்திரங்கள் ஏதும் இல்லை. அத்தியாயங்கள் தோறும் புதிய பாத்திரங்கள் சிறுகதை போல தோன்றி மறைகிறார்கள். மரபான நூல்களைப் படித்தவர்களுக்கு நிறுத்தற்புள்ளியே இல்லாமல் விவரிப்புகள் செல்கிறதே என வாசிக்கையில் பதற்றம் கூடும். அதை தவிர்க்க முடியாது. நூல் முழுக்கவ...