இடுகைகள்

தட்டுப்பாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட பால் தட்டுப்பாடு! - இந்தியா 75

படம்
  பால் பொருட்களில் மிட்டாய் செய்யத் தடை! இந்தியா 75 மற்றும் அமுல் 75 1970ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ஒரு சட்டம் நடைமுறையில் இருந்தது. காவல்துறை அதிகாரி அங்குள்ள எந்த வீட்டிலும் சென்று சோதனையிட அந்த சட்டம் அதிகாரம் வழங்கியது. அப்படி என்ன அங்கு ஊழல் நடந்துவிட்டது? திடீரென இப்படியொரு சட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என அனைவருக்குமே தோன்றும். அந்த காலகட்டத்தில் பாலின் தேவை அதிகமாக இருந்தது. அதனை பிற மாநிலங்களுக்கு விற்க அல்லது மிட்டாய்களை, இனிப்புகளை செய்ய தடுப்பதே அரசின் நோக்கம்.  சட்டம் அதற்கெனவே உருவாக்கப்பட்டது. கோடைக்காலத்தில் பால் தட்டுப்பாட்டு ஏற்பட பனீர் அல்லது வேறு வகை இனிப்பு பலகாரங்கள் செய்வதைக் கூட அரசு தடுத்திருந்தது. 1956ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசு மேற்கு வங்க சன்னா சட்டம் என்பதன் பேரில் பாலில் பலகாரங்களை தயாரிப்பதை தடுத்திருந்தது. 1956ஆம் ஆண்டு பஞ்சாப் அரசு, ஜூன் மாதம் பால் பொருட்களில் ஏதேனும் இனிப்புகளை தயாரிக்கிறார்களா என்பதைக் கண்காணித்து தடுத்த தொடங்கியது.  1969ஆம் ஆண்டு மத்திய அரசு டெல்லி, மீரட், புலந்த்சார் ஆகிய பகுதிகளில் நடைபெறும் திருமண விழாக்களில் பால் பொருட்களில