இடுகைகள்

வரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளைஞன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திருமணம் செய்ய பெண் தேடினால்....

படம்
      மேரேஜ் வைப்ஸ் சபரீஷ், மகிமா director - harish வைரலி தமிழ் யூட்யூப் சேனல் ஒரு மணி நேரத்தில் பார்த்துவிடக்கூடிய சிறிய வெப் படம். முதல் காட்சியில் சபரி, தன்னுடைய நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேலையை விட்டு நின்றுகொள்வதாக கடிதம் கொடுக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் அம்மா மட்டும்தான் இருக்கிறார். அவருக்கு மகன் மீது பிரியம். சபரிக்கு பள்ளி, கல்லூரி, அலுவலகம் என சக்கரம் போல சுற்றும் கடிகார வாழ்க்கை போரடிக்கிறது. எனவே, அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறான். பெண் பார்க்கும் சடங்கு எல்லா இடத்திலும் ஒன்றுபோல்தான். பையனது வேலை, சம்பளம், சொத்து என அனைத்தையும் கேட்கிறார்கள். இதில் சபரிக்கு வேலை இல்லை என்றதும் பெண் பார்க்கும் தரகர்கள் அனைவரும் போனை உடனே துண்டிக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு பெண் மட்டுமே அவனை சந்திக்க வருகிறாள். அவள்தான் மகிமா. உண்மையில் அவள் ஏன் சபரியை சந்திக்க விரும்பினாள் என்பதுதான் இறுதிக்காட்சி. தமடா மீடியாவின் யூட்யூப் சேனல்களில் ஒன்றுதான் வைரலி தமிழ். நடித்துள்ள நடிகர்கள் சபரி, மகிமா என இருவருமே சிறப்பாக நடித்த...

நிறம், உருவம் என பேதமற்ற கல்யாண வரன்கள்! - கனவா, லட்சியமா? பெய்டு நியூஸ் பரிதாபங்கள்

படம்
                மதர்மோனியல் - பாசாங்கு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. இதில், தாய்மார்கள் தங்களுடைய உருவம் சார்ந்த கேலி கிண்டல், திருமணத்தின்போது நிறத்தால், உருவத்தால் வரன்கள் தட்டிக்கழிந்த கதைகளை கூறியிருந்தனர். இப்போது அவர்களுக்கும் திருமணமாகி, பெண் பிள்ளைகள் உள்ளனர். தாய்மார்கள் தாங்கள் சந்தித்த உருவகேலி சார்ந்து அல்லது அக்கருத்துகளை புறக்கணித்து பெண்களுக்கு வரன்களைத் தேடுவார்களா என்று உண்மையாகவே யோசிப்போம். அவர்கள், எங்கள் பெண்களுக்கு நாங்கள் நிறம், உருவம், அழகு என்பதைத் தாண்டி அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் வெற்றிகரமாக உள்ளார்கள். அதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மணம் செய்து கொடுப்போம் என்று கூறியிருந்தனர். கேட்கவே புதுயுகப் புரட்சி போல தோன்றலாம். அவ்வளவு வேகமாக இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டுவிடுமா என்ன? ஆனால் உண்மை என்னவென்றால், அழகு மட்டுமே முக்கியம். அது இருந்தால் வாழ்க்கையில், தொழிலில், காதலில், சமூகத்தில் ஜெயித்து விடலாம் என விளம்பரம் செய்த பன்னாட்டு நிறுவனத்தின் விளம்ப...