இடுகைகள்

டெக் புதுசு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவீன பாதுகாப்பு அம்சங்கள் - 2019

படம்
நவீன பாதுகாப்பு அம்சங்கள் அவசியமா? முன்புபோல வங்கியை கிரில் கதவுகள் போட்டு காப்பாற்ற முடியாது. ஏனென்றால் இணைய வாசல் மூலம் தேட்டை போட்டுவிட்டு ஓடிவிடுகிறது தொழிலதிபர் கூட்டம். அதற்கு கமிஷன் வாங்கிக்கொண்டு அனுமதிக்கிறது மக்கள் பிரதிநிதிகளின் கும்பல். இந்த லட்சணத்தில் நாம் யாரை நம்புவது? ஆம் வேறு வழியே இல்லை. தொழில்நுட்பத்தைத்தான் நம்பியாக வேண்டும். அமேசான் இகோ இதுவும் பயனர் பற்றிய பல்வேறு தகவல்களை அசைபோட்டு அவருக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதுதான். ஆனால் தனிநபரின் தகவல்களை அரசே கேட்டாலும் தராது என்பதுதான் இதன் பிளஸ். கொலை குற்றம் தொடர்பான வழக்கில், குற்றவாளியைக் கண்டறிய இவர்கள் உதவியுள்ளது விதிவிலக்கானது. இதேபோல ஆப்பிள் தனது பாதுகாப்பு வசதிகளை உடைக்க முடியாது என எஃப்பிஐயிடம் போராடியது நினைவுக்கு வருகிறதா? பிலிப்ஸ் அவென்ட் - குழந்தைகளை கண்காணிக்கும் கருவி சில வக்கிரம் பிடித்தவர்கள் குழந்தைகளைக் கண்காணிக்கும் கருவியின் வீடியோவையும் இணையத்தில் வெளியிடத் தயங்குவதில்லை. வைஃபையில் இணைந்தாலும் இதனை எளிதாக ஹேக் செய்யமுடியாது என்கிறது பிலிப்ஸ் நிறுவனம்.

அறையைத் துடைக்கும் ஐரோபட்!

படம்
டெக் புதுசு! Shadow Ghost உலகமே இணையம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்று கேபிள், டிடிஹெச்சை விட இணையம் இருந்தாலே போதும் என்ற நிலைக்கு ஸ்மார்ட் டிவிக்கள் நம்மை மாற்றி விட்டன. ஷாடோ கோஸ்ட் அந்தவகையைச் சேர்ந்த சேவைதான். அமேசான், நெட்பிளிக்ஸ் சேவையில் படம், சீரியல்களைப் பார்ப்பது போல இதில் நீங்கள் விளையாட்டுகளை இணையத்திலேயே விளையாடி மகிழலாம்.  இதில் 12 ஜிபி ராம், என்விடியா கிராபிக்ஸ் கார்டு, 3.2 ஜிகாஹெர்ட்ஸ் புராசசர்  ஆகிய அம்சங்கள் இருக்கின்றன. எனவே தயங்காமல் வாங்கி கொண்டாடலாம். ப்ளூடூத், யுஎஸ்பி போர்ட் ஆகியவற்றில் இணைத்துக்கொள்ளலாம். நல்ல இன்டர்நெட் வசதி இருந்தால் இதனை தயங்காமல் வாங்கலாம்.  iRobot Braava jet 240 அனைத்தும் மெஷினாகிற உலகம். இங்கு போய் காமன்சென்ஸ் இல்லாமல் ஏய் ரமணம்மா என்ன வேலை பார்த்திருக்க, தரையை ஒழுங்கா துடைக்க தெரியலையே உனக்கு என கம்ப்ளைண்ட் பண்ணிக்கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா சொல்லுங்கள்.  அதற்காகத்தான் ஐரோபட் பிராவா.  உங்கள் வீட்டில் பளிச் பளிங்கு தரையை நறுவிசாக துடைத்து பளீரிட வைக்கும் ரோபட். போன் மூலமே இயக்க

கொரில்லா போட்டோகிராபி எடுக்க ரெடியா?

படம்
டால்பி ஹெட்போன்கள்! பிற கம்பெனிகளை நம்பியது போதும் என தானாகவே களமிறங்கி இரைச்சல்களை குறைக்கும் வசதி கொண்ட வயர்லெஸ் ஹெட்போன்களை டால்பி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே சமயத்தில் மூன்று ப்ளூடூத் பொருட்களோடு ஹெட்போன்களை இணைக்கும் வசதியும் ஒலியும் கேட்க இனிமை. பதினைந்து மணிநேரம் தாக்குப்பிடிக்கும் டால்பியின் சார்ஜிங் அசத்தல். இரைச்சலை கட்டுப்படுத்தும் வசதியை போனில் இன்ஸ்டால் செய்துள்ள ஆப் மூலமே கட்டுப்படுத்துவதோடு, சிரி, கூகுள் அசிஸ்டெண்ட்டில் இணைக்க முடியும். விலை 599 டாலர்கள். Gorilla Pod கேமரா வைத்துள்ள அனைவருக்கும்   தேவைப்படும் டிரைபாட்டில் கொரில்லா பாட் புதுசு. 360 டிகிரியில் மரம், மாடிப்படி கம்பியில் கூட பயன்படுத்தலாம். விலை 116 டாலர்கள். Sony's Tough SD Cards மணலில் புதைத்து வைத்து, தண்ணீரில் ஊறவைத்து கூட கேமராவில் பயன்படுத்தலாம். எஸ்டி கார்ட்டை விற்கும் சோனி தரும் நம்பிக்கை அப்படி. விலை 75 டாலர்கள்.

ட்ரில்லியன் ப்ரேம் கேமரா!

படம்
தொழில்நுட்பம் புதுசு! அமெரிக்காவின் கலிஃபோர்னியா டெக்னாலஜி பல்கலைக்கழகம், ஒரு செகண்டுக்கு பத்து ட்ரில்லியன் பிரேம்களை பதிவு செய்யும் அதிவேக கேமராவை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். கடந்தாண்டு ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சிக்குழு ஐந்து ட்ரில்லியன் பிரேம்களை பதிவு செய்யும் கேமராவை கண்டபிடித்ததற்கு அடுத்தகட்ட வளர்ச்சி இது. CUP( with  compressed ultrafast photography   ) தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது இக்கேமரா.   அதிகரிக்கும் சிசேரியன்! 2000-15 காலகட்டத்தில் உலகமெங்கும் அறுவைசிகிச்சைகளின் எண்ணிக்கை 12-21% கூடியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 15 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவை. உலகளவில் வட அமெரிக்கா(32%), பிரேசில்(55%) ஆகிய நாடுகளில் அறுவை சிகிச்சை அதிகளவு நடைபெறுகிறது. அதிகரிக்கும் வெப்பம்! இமாலயத்தில் அதிகரிக்கும் வெப்பமயமாதலால் ஆப்பிள் விளைச்சல் குறைந்து வருகிறது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து 2022 ஆம் ஆண்டில் 1.5 டிகிரி செல்சியசாக அதிகரிக்கும் என பீதி கிளப்பியுள்ளது ஐ.நாவின் ப

டிஜிட்டல் நூலகம் வேண்டுமா?

படம்
டெக் புதுசு! Anker Soundcore Spirit Pro சிலிகான், பிளாஸ்டிக் பெரும்பாகம் உள்ளதால் எடை குறைவு. சைஸ் பெரியது போல தோன்றினாலும் காந்தத்தின் உதவியால் கீழே விழாமல் எளிதாக இணைகிறது. 10 மணிநேர பேட்டரி சக்தியுடன் கச்சிதமான மூன்று பட்டன் லேஅவுட்டால் ஒலி, அழைப்பு ஆகியவற்றை எளிதாக செய்யலாம். நல்ல ஒலியில் வியர்வை எதிர்க்கும் டெக் நுட்பத்துடன் கொடுக்கும் காசுக்கு மதிப்பான பொருள். ரூ.3,701 Kobo Clara HD Ebook  14 ஃபைல் பார்மெட், 11 ஃபாண்டுகள், 40 ஃபாண்ட் ஸ்டைல்கள் என கோபோ கிளாரா ஈர்க்கிறது. வைஃபையுடன் இணைத்தால் 8 ஜிபி மெமரி மூலம் 6 ஆயிரம் நூல்களை தரவிறக்கி சேமித்து வாசிக்கலாம். நுட்பமான தொடுதிரை, நூல் தகவல்களை துல்லியமாக காட்டுவது என ஈர்த்தாலும் 8 ஜிபியை விரிவாக்க முடியாதது மைனஸ். மற்றபடி தீவிர வாசகர்களுக்கு ஏற்ற டிஜிட்டல் நூலகம் இது. ரூ. 9,550   

கேம் விளையாட ரெடியா?

படம்
டெக் புதுசு! ACER PREDATOR HELIOS 300 கேம்துறையில் பட்ஜெட் கணினி தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏசர் தன் பிரிடேட்டர் லேப்டாப் மூலம் உருவாக்கியுள்ளது. 15.6 இன்ச் திரையில் ஐ7 சிப்செட்டில் பிற பொதுவான அம்சங்களுடன் 88,402 விலையில் கிடைக்கிறது. பிற   கணினிகளின் விலை 1,47,461 என இருக்கையில் இது புதுமைதானே! தரமான விளையாட்டு அனுபவத்தை அளிக்கும் ஏசரில் பெரும்பகுதி பிளாஸ்டிக் டிசைனும், திருப்தி தராத பேட்டரியும் பெரிய மைனஸ் பாய்ண்ட். 144Hz திரையளவு ஸ்க்ரீனை புதுப்பிப்பதால் கேம் விளையாடுவது அற்புதமாக உள்ளது. 16 ஜிபி ராம், 256 ஜிபி ஹார்ட் டிஸ்க், விண்டோஸ் 10 ஓஎஸ், எடை 3 கி.கி என அனைத்தும் பட்ஜெட்டிற்கேற்ற ஓகே அம்சங்கள். MASTER & DYNAMIC MW07 வயர்லெஸ் இயர்போன்களில் தரமான இசை, இயக்கம் என அசத்தினாலும் ரூ.22,273 என்ற அதீதவிலை, மோசமான பேட்டரி விஷயங்களில் தடுமாறுகிறது மாஸ்டர் டைனமிக் தயாரிப்பு.

குரோம்புக்கில் என்ன புதுசு?

படம்
டெக் புதுசு! HP CHROMEBOOK X2 மார்க்கெட்டிலுள்ள குரோம் கணினிகளில் இதுதான் காஸ்ட்லி. கீபோர்டை தனியாக கழற்றி டேப்லட்டாக பயன்படுத்தும் நவீன வசதி கொண்டது. குரோம் ஓஎஸ் பயன்படுத்த பவராக இருந்தாலும் கணினியின் 4 ஜிபி ராம், 32 ஜிபி நினைவக வசதி போதாது. ட்ராக்பேடு துல்லியமாக உள்ளது. கீபோர்டை மானிட்டருடன் காந்தம் இணைத்துள்ளது என்பதால் எளிதாக பிரித்து இணைக்கலாம். திரை 12.3 இன்ச். 10 மணிநேரம் தாங்கும் பேட்டரி. எடை 1.4 கி.கி ரூ. 43.557. V40 ThinQ எல்ஜியின் புதிய போன் V40   ஐந்து கேமிராக்களுடன் விரைவில் சந்தைக்கு வரவிருக்கிறது. 6.4 இன்ச் திரையுடன் ஸ்னாப்டிராகன் 845 புரோசசர், முன்புறம் இரண்டு கேமிரா, பின்புறம் மூன்று கேமராக்களுடன் வரும் கேமராவுக்கு எல்ஜி ஏற்கனவே விளம்பரம் வெளியிட்டு விட்டது. Amazon’s Fire TV Cube டிவிக்கு 4K தரத்தில் வீடியோக்களை பார்க்க நல்ல செட்டாப் பாக்ஸ் தேடினீர்கள் என்றால் அமேஸான் உதவும். இதனுடன் அலெக்ஸாவை இணைத்தால் குரல் மூலம் பொழுதுபோக்கையும் கட்டுப்படுத்தலாம். ரூ. 5,733