கொரில்லா போட்டோகிராபி எடுக்க ரெடியா?








Image result for gorillapod


டால்பி ஹெட்போன்கள்!

பிற கம்பெனிகளை நம்பியது போதும் என தானாகவே களமிறங்கி இரைச்சல்களை குறைக்கும் வசதி கொண்ட வயர்லெஸ் ஹெட்போன்களை டால்பி அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரே சமயத்தில் மூன்று ப்ளூடூத் பொருட்களோடு ஹெட்போன்களை இணைக்கும் வசதியும் ஒலியும் கேட்க இனிமை. பதினைந்து மணிநேரம் தாக்குப்பிடிக்கும் டால்பியின் சார்ஜிங் அசத்தல். இரைச்சலை கட்டுப்படுத்தும் வசதியை போனில் இன்ஸ்டால் செய்துள்ள ஆப் மூலமே கட்டுப்படுத்துவதோடு, சிரி, கூகுள் அசிஸ்டெண்ட்டில் இணைக்க முடியும். விலை 599 டாலர்கள்.
Gorilla Pod
கேமரா வைத்துள்ள அனைவருக்கும்  தேவைப்படும் டிரைபாட்டில் கொரில்லா பாட் புதுசு. 360 டிகிரியில் மரம், மாடிப்படி கம்பியில் கூட பயன்படுத்தலாம். விலை 116 டாலர்கள்.
Sony's Tough SD Cards
மணலில் புதைத்து வைத்து, தண்ணீரில் ஊறவைத்து கூட கேமராவில் பயன்படுத்தலாம். எஸ்டி கார்ட்டை விற்கும் சோனி தரும் நம்பிக்கை அப்படி. விலை 75 டாலர்கள்.