உறங்காத கண்கள்!






Image result for insomnia





உறங்காத கண்கள்!

ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட், இபுக்ரீடர் என தூக்கத்தை எப்படியாவது துரத்தி இரவும் பகலுமாக 24 மணிநேரத்தை பயன்படுத்த வணிக உலகம் துடிக்கிறது. உண்மையில் தூக்கமின்றி மனிதர்களால் உயிர்வாழ முடியுமா?

நினைவகம், திசுபழுதுபார்ப்பது, ஹார்மோன் உற்பத்தி ஆகியவற்றுக்கு தூக்கம் அவசியத்தேவை. தூக்க குறைவு(agrypnia) ஞாபகசக்தி பிரச்னை, கவனக்குறைவு, புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றை குலைக்கிறது. போர்வீரர்கள் மற்றும் நோயாளிகள் முழு விழிப்புணர்வுடன் நான்கு நாட்கள் தூங்காமல் இருந்துள்ளனர். 

ஆய்வுக்காக பத்து நபர்களை 8-10 நாட்கள் தூங்காமல் வைத்திருந்தபோது இயல்புக்கு மீள இரண்டு நாட்கள் தூக்கம் போதுமானதாக இருந்தது.1965 ஆம் ஆண்டு பள்ளி புராஜெக்டிற்காக ராண்டி கார்ட்னர் என்ற பள்ளி மாணவர் 11 நாட்கள்(264 மணிநேரம்) கண்விழித்திருந்ததே சாதனை. Morvan Syndrome பிரச்னை உள்ளவர்கள் பல மாதங்களுக்கு தூங்காமல் இருப்பார்கள். தூங்காமல் இருப்பது நோயாக இருந்தால் அவர்களின் உடல்நலனுக்கு என்ன பிரச்னைகள் ஏற்படும் என்பது ஆராய்ச்சிக்குரிய கேள்வி.


பிரபலமான இடுகைகள்