பசுக்கள் கொல்லப்பட்டது ஏன்? கசாப்பு கடைக்காரரை தேடும் போலீஸ்!







டிச. 3 அன்று உ.பியின் புலந்த்சாஹரில் நடந்த பசுப்படுகொலையில் இன்ஸ்பெக்டர் ஒருவரோடு இளைஞரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுபற்றி முதல்வர் யோகி எதுவும் பேசவில்லை. பசுவைக்கொன்றதை மட்டும் சாதுர்யமாக பேசி விலகிக் கொண்டுவிட்டார்.






நேர்காணல்
உத்தரப்பிரதேச டிஜிபி ஒபி சிங்.






வலதுசாரி குழுக்களின் கொலைவெறித்தாக்குதல் அது. வழக்கு விசாரணையில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா?

கலவர படுகொலை தொடர்பாக  எட்டு நபர்களை கைது செய்துள்ளோம். இது குறித்த விசாரணை இன்னும் நடந்து வருகிறது. கலவரத்திற்கு காரணமான ஒவ்வொரு வரும் கைது செய்யப்படுவது நிச்சயம.

காவல்துறை இதுவரை கலவரத்திற்கு காரணமான வலதுசாரி இயக்கங்களை சேர்ந்தவர்களை ஒருவரைக்கூட பெயரை கூறவில்லையே? பசுப்படுகொலை செய்தவர்களை தப்பிக்க வைக்கும் முயற்சியா இது?

ஏன் குறிப்பிட்ட அமைப்புகள்தான் காரணம் என முடிவு செய்து இப்படி கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக 27 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.  ஒவ்வொருவரையும் பற்றிய விஷயங்களை நாங்கள் பதிவு செய்து வருகிறோம். இப்போது ராணுவத்தைச் சேர்ந்த ஜீத்து என்பவரைப் பற்றி நாங்கள் எதையும் மறைக்கவில்லையே? இப்பொழுது மட்டுமல்ல இதற்கு முன்பும் குறிப்பிட்ட அமைப்பை தொடர்புபடுத்தி நாங்கள் ஊடகங்களிடம் பேசவில்லை. ஆனால் ஊடகங்கள் திரும்ப திரும்ப அமைப்பை தொடர்புபடுத்தி கேள்வி கேட்பதை புரிந்துகொள்வதில் நான் தோற்றுவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

இன்ஸ்பெக்டர் பகிரங்கமாக கொலைசெய்யப்பட்டுள்ளார். ஆனால் மீரட் ஐஜி பசுக்களை கொன்றது யார் என விசாரணை நடத்தி வருகிறார். உண்மையில் இந்த வன்முறைக்கு பின்னால் உள்ளவர்கள் யார்? 

இது நிச்சயம் அவசியமான கேள்விதான். கன்வார் யாத்திரையின்போது ஆறு இடங்களில் பசு வதை குறித்து பிரச்னைகள் எழுந்தன. குலாவதி, அரானியா, குர்ஜா, அவுரங்காபாத் ஆகிய இடங்களில் 21 பசுக்கள் இம்முறையில் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது எட்டு பசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. மத சடங்கிற்காக கொல்லப்பட்டனவா என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஐஜி கூறியதை நான் ஆதரிக்கிறேன்.

நன்றி: சந்தீப் ராய், தி டைம்ஸ் ஆப் இந்தியா



பிரபலமான இடுகைகள்