லித்தியத்தை இந்தியா பெறுமா?
லித்தியம் தேடுகிறது இந்தியா!
ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்களின் பேட்டரிகளுக்கான லித்தியம், கோபால்ட் கனிமங்களை எடுக்க வெளிநாட்டு சுரங்கங்களை இந்தியா நாடவுள்ளது. சீனா இந்த கனிம ரேஸில் ஏற்கனவே முந்தியுள்ளது.
நால்கோ, ஹெச்சிஎல், எம்இசிஎல் ஆகிய நிறுவனங்கள் தனியாரின் பங்களிப்புடன் கனிமங்களை பெற முயற்சித்து வருகின்றன. 2030 ஆம் ஆண்டிற்குள் மின் வாகனங்களை சந்தையில் கொண்டுவர இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உலகில் அர்ஜென்டினா, சிலி, பொலிவியா ஆகிய நாடுகளில் லித்தியம், ஆப்பிரிக்காவின் காங்கோவில் கோபால்டும் கிடைக்கிறது. தற்போது இந்தியாவில் 3.5 லட்சம் டன்கள் லித்தியம் தொழில்துறைக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இரும்புத்தாது எடுக்க ஆப்கானிஸ்தானில் அரசு முயற்சித்தும் பாதுகாப்பு பிரச்னைகளால் திட்டம் கைவிடப்பட்டது.
2017 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கோபால்ட் கனிமத்தை சீனா, காங்கோவிலிருந்து அகழ்ந்தெடுத்து உள்ளது. இந்தியா அறிவியல் லட்சியத்தில் கடக்கவேண்டிய சவால்கள் நிறையவே உள்ளன.