இடுகைகள்

கிரைம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓடிடியில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள்!

படம்
  தி ஃபேம் கேம் நெட்பிளிக்ஸ் இந்தி திரைப்பட உலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் மாதுரி திடீரென காணாமல் போகிறார். இதைத்தொடர்ந்து நமக்கு அவரைப் பற்றிய நிறைய ரகசியங்கள் தெரிய வருகின்றன. இதனை இயக்குநர் கரண் ஜோகர் சிக்கலான குடும்ப நிகழ்ச்சி என கூறியுள்ளார். இந்த  இந்த நிகழ்ச்சி இப்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி விட்டது.  பாரார், ஜீ 5 இது பெண்களைப் பற்றிய கதை. இப்போது பெண்களைப் பற்றிய கதைகள் ஓடிடியில் நிறைய வருகின்றன. அந்த வகையில் அதிக பார்வையாளர்களை இந்த நிகழ்ச்சி பெற வாய்ப்புள்ளது.  மாய் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவின் தயாரிப்பு. ஆனால் அதற்காக நீங்கள் இதனை பார்க்க வேண்டியதில்லை. 47 வயதான பெண், வாழ்க்கையோட்டத்தின் இடையே ஒரு குற்றத்தில் சிக்கிக்கொண்டு எப்படி மீள்கிறார் என்பதே கதை. வாமிகா காபி, ரைமான் சென் என நம்பிக்கைக்குரிய நடிகையர் நடித்துள்ளனர்.  ஃபோர் மோர் ஷாட்ஸ் ஃப்ளீஸ் அமேசான் பிரைம் பெண்களுக்கு இடையிலான பல்வேறு முரண்பாடான உணர்ச்சிகளின் தொகுப்புதான் கதை. தாராள மனது கொண்டவர்கள் மட்டும் பார்ப்பது இதயத்திற்கு நல்லது.  ஹஸ் ஹஸ் அமேசான் பிரைம் தொண்ணூறுகளில் நமது கனவுக்கன்னியாக இருந்த ஜூகி சாவ்லா, ஆயிஷ

இந்தியாவில் நடந்த முக்கியமான என்கவுன்டர் படுகொலைகள்! - அரசியல் வளர்த்த சமூகத்தீமையின் முடிவு!

படம்
என்கவுன்டர் வரலாறு ஸ்ரீபிரகாஷ் சுக்லா 1998 உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியைச்சேர்ந்த மாஃபியா தலைவர் இவர். செப்டம்பர் 22ஆம் தேதி காசியாபாத்தில் எஸ்டிஎஃப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படையினர் ஏப்ரல் மாதம் தொடங்கி சுக்லாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். அவர் தலைநகரான டில்லியில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். தனத் பெண்தோழியைச் சந்திக்க காசியாபாத் வந்தபோது கொல்லப்பட்டார். வீரப்பன் 2004 கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் காடுகளில் வலம் வந்த மனிதர் வீரப்பன். சந்தனமரங்களை கடத்துவதில் புகழ்பெற்று விளங்கினார். கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வந்து புகழ்பெற்றார். 120க்கு மேற்பட்ட படுகொலைகளைச் செய்தவர் வீரப்பன். அக்டோபர் 18ஆம் தேதி இவரும் இவருடைய இரு சகாக்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிறப்புப்படை இவரைக் கொல்வதற்கான திட்டத்தை இரு ஆண்டுகளாக தீட்டி வந்தது. இவரைப் பிடிப்பதற்காக இவர் பிறந்து வளர்ந்த ஊர்மக்களை இரு மாநில சிறப்பு படையினரும் கடுமையாக சித்திரவதை செய்தனர். வீரப்பன் மறைவு ஒருவகையில் அவர்களுக்கு நிம்மதியைத் தந்திருக்கலாம். இஷ்ரத் ஜகான் 2004 இதுவும் குஜராத்தி

ரவுடிகள் எப்படி அரசியல் சக்தியாக உருவாகி வளர்கிறார்கள்? - கிரைம் ரிப்போர்ட்

படம்
cc ரவுடிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்? அண்மையில் உ.பியைச் சேர்ந்த விகாஸ்துபே போலீசாரால் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டார். எப்போதும்போல போலீஸ் தரப்பில் சொல்லப்படும் புனைந்த கதை சிறப்பாக கூறப்பட்டது. இதை மையமாக வைத்து பின்னாளில் இந்தி திரைப்படங்கள் கூட உருவாகும். அதற்கான அத்தனை வாய்ப்புகளும் விகாஸ்துபே உருவான கதையில் உள்ளது. பொதுவாக ரவுடிகள் தானாக உருவாகின்றார்களா? உருவாக்கப்படுகிறார்களா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஒரே பாடலில் ஏழை பணக்காரர் ஆவதைப்போல ஐந்து ஸ்டெப்களில் இதனை சொல்லிவிடலாம். ஊரில், நகரில் உள்ள சிறிய ரவுடிகளை அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்குகளைப் பெற்றுத்தர வளர்த்துவிடுகின்றனர். அரசியல்வாதிகள், தங்களுக்கு தேவையான அனைத்து உருட்டல், மிரட்டல்களுக்கு ரவுடிகளைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். பதிலுக்கு அவர்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்குகிறார்கள். பிஸினஸ்மேன் படத்தில் மகேஷ்பாபு தன்னை ஷாயாஜி ஷிண்டே அவருடைய கீப் போல பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வார். ஆடம்பர வீடு, வங்கி இருப்பு, கார் என இவையும் இதில் அடங்கும். அரசியல்வாதிகளும், ரவுடிகளும் கைகோத்தபின் அவர்களுக்கு

கிளாசிக் நாவல்கள் - ஆங்கிலம் - புனைவு

படம்
நாம் படிக்க வேண்டிய நாவல்களை தமிழில் லிஸ்ட் போட்டால் இது ஏன் வரவில்லை? இது சிறந்த நாவல் இல்லையா என கூப்பாடுகள் எழும். எனவே நாம் ஆங்கில நூல்களை படிக்கவேண்டியதாக கூறிய நூலைப் பற்றி பேசுவோம். நாலைந்து பேர் சேர்ந்த பெரும்பான்மையாக நல்ல நாவல்தான் என இழுத்தாலே சிறந்த நூல் லிஸ்டில் நூல்களை எடுத்து வைத்துவிடலாம். மொபி டிக் ஹெர்மன் மெல்வில்லே கதையை விடுங்கள். இந்த நூல்தான் இலக்கியத்தில் பாப் கலாசாரத்தை உள்ளே கொண்டு நங்கூரம் அறைந்து நிறுத்தியது என்கிறார்கள். அடுத்து, நூலில் புதிதாக 17 ஆயிரம் வார்த்தைகளை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் என்பது வேறு சிறப்பு தருகிறது. கதை என்றால் திமிங்கலத்தை இளைஞன் ஒருவன் வேட்டையாடுவதுதான். ஆனால் அதனை தாண்டி  நூலில் பல்வேறு விஷயங்கள் பேசப்படுவதுதான் இதனை உலக கிளாசிக் நூலாக மாற்றி உள்ளது. பிரைட் அண்ட் ப்ரீஜூடிஸ் ஜேன் ஆஸ்டின் நவீன நாவல் என்பதற்கேற்ப உருவான காதல் கதை இது. இன்றுவரை இன்ஸ்பிரேஷன் என்று சொல்லி பல்வேறு நாட்டு எழுத்தாளர்களும் நாவலிலிருந்து சொற்களை, சூழலை திருடி வருகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாவலுக்கு இன்று கிளாசி

உளவியல்ரீதியில் பாதிக்கும் கதைகள - ஆல்பிரட் எழுதிய மர்மக்கதைகள்!

படம்
ஆல்பிரட் ஹிட்ச்சாக் மர்மக்கதைகள் விகடன் பிரசுரம் இவை எதுவும் ஆல்பிரட் எழுதிய கதைகள் கிடையாது. பிற எழுத்தாளர்களின் கதைகளை இயக்குநர் ஆல்பிரட் சிறிது மாற்றி அதனை தனக்கான கதைகளாக மாற்றியிருக்கிறார். எதற்கு சினிமாவாக எடுக்கத்தான். அனைத்து கதைகளுமே ஆல்பிரட்டின் கைவண்ணத்தில் கடும் திகிலை மனதில் ஊட்டுகின்றன. அதில் எந்த சந்தேகமும் வேண்டும். மொழிபெயர்ப்பு கதைகள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அதை நினைவில் கொண்டு படிக்கவேண்டியதில்லை. நடைபெறும் சூழல்கள், இடம் ஆகியவற்றை புரிந்துகொண்டால் எளிதாக நீங்கள் கதையை உள்வாங்க முடியும். அதற்காக சொன்னேன். இதில் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து பரம்பரை பற்றி கேள்விகளை ஒருவர் நிரப்புவார். பின்னர் அந்த நிறுவனத்தில் உயர் பதவிகளை எட்ட சாம, பேத, தண்ட முறைகளை பின்பற்றுவார். இக்கதை திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. கணவர் வர தாமதம் ஆகிறது. புயல் மழை, மனைவியின் மனதில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது என்று செல்லும் கதை முழுக்க அக உணர்வுகளை முன்னிலைப்படுத்துகிறது. இந்த வகையில் இதில் கைவிடப்பட்ட வீடு போன்ற தோற்றத்திலுள்ள வீட்டின் அருகில்