இடுகைகள்

ட்ரம்ப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய புத்தகம் பேசுது! - தேசியவாதம் நல்லது!

படம்
தி கேஸ் ஃபார்  நேஷனலிசம் ரிச் லோரி உலகெங்கும் தேசியவாதம் வளர்ந்து வருகிறது. இதை வைத்து பல்வேறு வலதுசாரி வாத கட்சிகள் தேர்தலில் வென்று வருகின்றன. அதற்கு காரணம் என்ற என்று ஆசிரியர் லோரி ஆராய்ந்திருக்கிறார். ஏறத்தாழ ட்ரம்பிசம் முதற்கொண்டு அனைத்து தேசியவாதங்களும் நல்லதுதான் என முடிவு செய்து எழுதியுள்ளார் ரிச் லோரி. ஃபீமேல்ஸ் ஆண்ட்ரூ லாங் சூ அதிகம் விரும்பப்படுவதும், வெறுக்கப்படுவதும் பெண்கள்தான். அந்த பெண்களைப் பற்றியதுதான் இந்த புத்தகம். அனைவரும் பெண்கள்தான் என ஆசிரியர் சொல்லுகிறார். எதை வைத்து என்பதை புத்தகம் படித்து புரிந்துகொள்ளுங்கள். ஆபாச படங்களுக்கு எதிரான பெண்கள், பெண்ணியவாதிகள் என பல்வேறு துறை சார்ந்த பெண்களைப் பற்றியும் ஆசிரியர் கவலைப்பட்டு எழுதியிருக்கிறார். இன் டிஃபன்ஸ் ஆஃப் எலைட்டிசம் ட்ரம்ப் 2016 ஆம் ஆண்டு பாப்புலிச சிந்தனைகளைச் சொல்லி அடித்தட்டு அமெரிக்கர்களின் நம்பிக்கையைப் பெற்றார். அதன்பிறகு பேசியே மக்களின் மனதில் நின்றார். அடுத்த தேர்தலிலும் அவர் வெல்ல வாய்ப்புகள் உள்ளன. எப்படி தன்னை தற்காத்துகொள்கிறது மேல்தட்டு வர்க்கம் என ஜோயல் ஸ்டெய்ன் வ...

ஆப்பிள் மூலம் சீனா லாபம் ஈட்டுகிறதா?

படம்
ஆம், இல்லை என்று கூற முடியாது. ஆனால் சீனா இதில் ஈட்டும் லாபம் குறைவுதான். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு உள்ள கோபம், அமெரிக்காவிற்கும் சீனாவுக்குமான வர்த்தக இடைவெளிதான். கடந்த ஆண்டில் மட்டும் 420 பில்லியன் டாலர்கள் இடைவெளி உருவாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் இதுகுறித்து, நாங்கள் சீனாவில் காசு குறைவு என்பதற்காக தயாரிக்கவில்லை. அங்கு தயாரிப்பதற்கான திறன்கள் உள்ளது என்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இதை ட்ரம்ப் காது கொடுத்து கேட்க வாய்ப்பில்லை. அடிப்படையில் ஒரு முதலாளி உற்பத்திச்செலவு குறைவான இடத்தில்தானே கொடுத்து தன் பொருளை உற்பத்தி செய்வார். அதுதான் அவருக்கு அதிக லாபத்தைக் கொடுக்கும். வியாபாரத்தை சேவையாக யாராவது செய்வார்களா? குறைந்த முதலீடு அதிக லாபம் என்பதுதான் பெரும்பாலான வியாபாரிகளின் வணிக தந்திரம். ஐபோனின்(ஐபோன் எக்ஸ் ) தயாரிப்புச்செலவு ஒரு போனுக்கு 370 டாலர்கள். இந்த செலவு அமெரிக்காவில் செய்தால் சரி என்கிறார் ட்ரம்ப். இங்கு வரி அதிகம் என்பதால் பெரும்பாலும் சீனாவில் தயாரித்து அசெம்பிள் செய்து விற்பனைக்கான விஷயங்களை மட்டும் அமெரிக்க ஸ்டோர்களில், இணையத்தில் செய்...

வணிகத்தையும் அரசியலையும் கலக்காதீர்கள் ட்ரம்ப்!

படம்
ஹூவெய் நிறுவனத்தை அமெரிக்க தற்போது கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்க டெக் நிறுவனங்கள் சந்தையில் முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது. சீன அரசின் உளவு நிறுவனமாக ஹூவெய் செயல்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்ய, சீனாவின் மீது வர்த்தக தடை நடவடிக்கைகள் தீவிரமாயின. கூடுதலாக அந்நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவெய் மீதும் நடவடிக்கைகள் பாய்ந்தன. அதன் உச்சமாக அந்நிறுவன தலைவரின் மகளை கனடாவில்  கைது செய்யும் அளவு பிரச்னை முற்றியது. குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவரின் மீதான தீவிரமான கைது நடவடிக்கை என்பது குறியீடாக தொடர்புடைய நாடு குறித்தும் என்பதை யாரும் அறியாதவர்களல்ல. இதுகுறித்து ஹூவெய் நிறுவனம், இது அரசியல்ரீதியான நடவடிக்கை என்று கூறியதோடு பேச்சை இறுதிக்கு கொண்டுவந்தது. ஹூவெய் நிறுவனத்திற்கு சீன அரசின் ஆதரவு இல்லை என மறுக்க முடியாது. ஏன் ட்ரம்ப் கூட அந்நாட்டு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் பைக் நிறுவனத்திற்கு இறக்குமதி வரி விதிக்கக்கூடாது என இந்தியாவை எச்சரிக்க வில்லையா என்ன? இன்று உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் 2 வது...

பத்து ஆண்டுகள் கைகழுவாத ஆசாமி

படம்
பீட்டே ஹெக்செத் நன்றி: தி கார்டியன் கிருமிகள் என்பதே பொய்.. ஏறத்தாழ ஓராண்டு அல்ல. பத்து ஆண்டுகள் ஒருவர் கை கழுவ வில்லை என்று கூறியிருக்கிறார். நாம் பாத்ரூம் போனால் கை கழுவுகிறோம். சாப்பிடும்போது கைகழுவுகிறோம். அப்படியானால் கிருமிகள் நம்மை பாதிக்கிறதா இல்லையா? ஃபாக்ஸ் டிவியில் அதிபர் ட்ரம்புக்கு பிடித்த ஷோ, ஃபாக்ஸ் அண்ட் ஃபிரெண்ட்ஸ். ஏன் பிடிக்கும்? வெள்ளை மாளிகையின் அஜெண்டாவுக்கேற்ப நிகழ்ச்சியை நடத்துவார்கள். பேசுவார்கள். அதன் தொகுப்பாளர் பீட்டே ஹெக்செத், மேற்சொன்ன பத்து ஆண்டுகள் கை கழுவாத ஆசாமி. இதைச்சொல்லி ஒட்டுமொத்த உலகையே பீதிக்கு உள்ளாக்கி உள்ளார். கிருமிகள் என்பது உலகில் கிடையாது என்றவர், ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுவது பைப்பில் மது அருந்துவது என கலவையான வினோத விஷயங்களை செய்துவருகிறவர் என அவரது ட்விட்டர் கணக்கு பதிவுகள் நமக்கு சொல்லுகின்றன. உடனே பஞ்சாயத்து தேசிய நோய்த்தடுப்பு மையத்திற்கு வந்தது. அவர்களே வயிற்றுப்போக்கு 40 சதவீதம் வருவதே கை கழுவாத தால்தான் என சத்தியம் செய்திருக்கிறது. ட்ரம்பின் ஆதரவாளர் கூட அறிவியலுக்கு புறம்பாக எப்படி பேசுகிறார் பாருங்கள்...

நெருப்புச்சொற்களில் அனல் கவிதைகள்- தடை செய்யப்பட்ட புத்தகம்

படம்
தடை செய்யப்பட்ட புத்தகம் வசுமித்ர சிந்தன் புக்ஸ் ரூ.140 சமூகத்தை பிளவுபடுத்தும் அத்தனை சக்திகளுக்கும் தன் சொற்களாலேயே தண்டனையை அறிவித்துவிட்டார் வசுமித்ர. அதற்கான முன்கூட்டிய அறிவிப்பு, தடை செய்யப்பட்ட புத்தகம். மனிதர்களை அடிமையாக்கி சுரண்டியவர்கள், சுரண்டுபவர்கள், சர்வாதிகாரிகள் ஏன் உங்கள் மேலதிகாரி என  யார் படித்தாலும் நூலிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் முட்களாக குத்தும். கவிதைக்கான அத்தனை சொற்களிலும் அவ்வளவு கோபம். எரிமலையின் லாவாவாக நம் மனதை கொந்தளிக்கச் செய்கிறது. அதுவும் கிறிஸ்துவர்கள் படித்தால் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வார்கள். அவ்வளவு தூரம் வரலாற்றை குடைந்து கவிதை செதுக்கியுள்ளார் வசுமித்ர. உலக அரசியல், ராஜபக்ச, ட்ரம்ப், கிறிஸ்தவம், ஏசு, பைபிள், ராமன் என அனைத்தும்  தமிழ் மொழியை நாயாக ஏவி கடிக்க வைத்திருக்கிறார் கவிஞர். படிக்கும் அனைவருக்கும் அவரின் இனப்படுகொலை குறித்த கவிதைகள் கனவிலும் துரத்தும் என்பது உறுதி. அமெரிக்காவுக்கு என்று வரும் கவிதைகளில் லாவாவின் வீச்சு அதிகம். அதிலும் என்ன செய்துகொண்டிருந்தாய் ஜூசஸ்? என்பதை எப்படி கிறிஸ்தவர்கள் படிக்கப்...