இடுகைகள்

எனது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான், எனது என்ற சொற்களே வாழ்பனுவத்தை அழிப்பன - ஜே கிருஷ்ணமூர்த்தி

  சரியான கல்வி ஜே கிருஷ்ணமூர்த்தி நான், எனது என்ற சொற்களை ஒருவர் பயன்படுத்தும்போது அவர் சுயத்துடன் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்கிறார். இந்த நிலையில் ஒருவரின் மனம் சுதந்திரமாக இயங்குதில்லை. அவர் பெறும் அனுபவங்களும் கூட வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள உதவுவதில்லை. தான், எனது எனும் தீவிர தன்முனைப்பு   முரண்பாடுகள், வேதனை, குழப்பங்களை ஏற்படுத்துகிறது.   இவர்களுக்கு அனுபவங்களும் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பியவையாக இருக்காது. குழந்தைகள் தங்கள் சுயத்திடமிருந்து தன்முனைப்பிடமிருந்து தப்பி விலகி இருக்க கற்றுக்கொடுப்பது சற்று வேதனை நிரம்பியதாகவே இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளின் உறவுமுறைகள், நடவடிக்கை என பலவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். பெற்றோர், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது தெளிவான கருத்துகளின் வழியே குழந்தைகளுக்கு உதவினால் அவர்களுக்குள் அன்பும் நல்ல விஷயங்களும் உருவாகும். கல்வி என்பது எப்போதும் நிகழ்காலத்திற்கானது. கற்றல் என்பது சூழல் தாக்கங்கள், வேறுவிதமான தன்மைகளைக் கொண்டிருக்காது. ஒருவரின் முரண்பாடுகள், துன்பங்களை நீக்கி அவரை கல்வியே முழுமையா