இடுகைகள்

மம்மூட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாலையில் வீசும் காற்று சற்று ஆறுதலாக உள்ளது!

படம்
  நரசிங்கபுரம் 28/3/2023 அன்பரசு சாருக்கு   அன்பு வணக்கம். நேற்று பேசிய உரையாடல் மகிழ்ச்சி தந்தது. அதில், கடிதமாக எழுதவேண்டியதை பேசிவிட்டேன். பேசத் தவறியதை கடிதத்தில் எழுதுகிறேன். சமீபத்தில் மெகா ஸ்டாரின் இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று, கிரிஸ்டோபர். காம எண்ணமே ஒருவனை அழிக்கிறது. சாதாரண மனிதன் தவறான ஆசைகளை வெளிப்படுத்தினால் மரணமே வழி என்பதாக கதை அமைந்துள்ளது. மம்மூட்டியின் தர்ம செயல் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருந்தது. கொடூரமான காட்சிகள் நெஞ்சை உலுக்கின. இரண்டாவது படம், ஒன். 2021இல் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சில காட்சிகளை யூட்யூபில் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். பார்க்க வேண்டிய படம். நான் ஃபேஸ்புக்கில் வங்கி மேலாளரைப் பற்றி புகார் எழுதியது நினைவுக்கு வந்தது. ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்டுக்கு எவ்வளவு மதிப்பு உள்ளதென வியந்தேன். இந்தப்படத்திலும் மம்மூட்டியின் நடிப்பு சிறப்பாகவே இருந்தது. நிதானமான பேச்சு, அதிரடி முடிவு என முதலமைச்சராக வலம் வந்து நம்மைத் தேர்ந்தெடுக்கும் மக்கள்தான் நம்பர் ஒன் என சொல்லி படத்தை முடிக்கிறார். முதலமைச்சர்கள் பார்க்க வேண்டிய படம். இன்று பிளாக்க

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்களால் நீதி வழங்கும் அதிகாரி- கிறிஸ்டோபர்

படம்
  கிறிஸ்டோபர் - மம்மூட்டி கிறிஸ்டோபர் இயக்கம் - பி உன்னிகிருஷ்ணன் மம்மூட்டி, அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி, வினய் ராய் இளம்பெண், அவளது தங்கை இருவரும் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் பதிவாகிறது. புகாரில் காணாமல் போன பெண், வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள். அவள் உணவுசேவை வழங்கும் வேலையை செய்து கொண்டு கல்லூரி படித்துகொண்டிருந்த பெண்.இந்த வல்லுறவு சம்பவம், கேரள மாநிலமெங்கும் உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்த, முதல்வரே கிறிஸ்டோபரை வழக்கு விசாரணைக்கு நியமிக்கிறார். இவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய வழக்குகளுக்கு மட்டும் எடுத்து விசாரிக்கும்   ஐபிஎஸ் அதிகாரி. விசாரணையில் பணக்கார தொழிலதிபரின் மகன் நண்பர்களுடன் சேர்ந்து வேனில் வைத்து இளம்பெண்ணை வல்லுறவு செய்ததாக வாக்குமூலம் கொடுக்கிறான். அந்த வழக்கு விசாரணையை கிறிஸ்டோபர் அமைதியாக தனியொரு அறையில் அமர்ந்துகேட்டுக்கொண்டிருக்கிறார். பிறகு காவலர்கள், குற்றவாளிகளை குற்றம் நடந்த இடத்திற்கு கூட்டிச்சென்று எப்படி குற்றம் செய்தனர் என்பதை நடித்துக் காட்டச் சொல்கின்றனர். அங்கு தப்பிச்செல்லும்படி காவல்துறையினர் கண்சாடை காட்ட பணக்க

தம்பி மனைவியின் அத்துமீறிய உறவால் தூக்குதண்டனைக்கு உள்ளாகும் அண்ணன் வாழ்க்கை! மௌனம் சம்மதம்

படம்
    மௌனம் சம்மதம்     மௌனம் சம்மதம் மது இளையராஜா தம்பி மனைவியை கொன்ற வழக்கில் தொழிலதிபர் ஜெய்சங்கர் மாட்டிக்கொள்கிறார். அவர் பேசுவதற்கு வாய்ப்புகளே வழங்கப்படாமல் தூக்குதண்டனை வழங்கப்படுகிறது. இதனை எப்படி உடைத்து, வழக்குரைஞர் மம்மூட்டி அவரை வெளியே கொண்டுவருகிறார் என்பதுதான் கதை. நிதானமாக நடைபெறும் படம். நடந்த விஷயங்களை தொழிலதிபரின் வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் சொல்லுகிறார்கள். இதைத்தான் நாம் பார்க்கிறோம். இதன் வழியாக நாம் நினைப்பதும், வழக்கை எப்படி மம்மூட்டி தீர்க்கிறார் என்பதையும் குறைந்த பட்ச சண்டைகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மம்மூட்டி, அமலா ஆகியோர் இடையிலான தொடக்க காட்சியே அசத்தலாக இருக்கிறது. பொதுவாக மோசமாக கண்ணில் தென்படும் ஒருவரை நல்லவராக காட்டுவது, அப்படி நினைப்பது கூட கடினம். அதனை இந்த கதாபாத்திரத்தில் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர். பாடல்கள் அனைத்தும் கேட்கும் பார்க்கும் ரகமாக உள்ளன. திரில்லர் படத்தில் பாடல்கள் ஹிட் ஆவது அவசியமில்லை என்று நினைக்கிற காலம் இது. நிதானமான படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் மீது சந்தேகப்பட வாய்ப்பு உள்ளது. இதில் தம்பி சர