ஏபிசி ஆப் அனார்சிசம் அலெக்சாண்டர் பெர்க்மன் ப.108 அனார்சிசம் என்பதை தலைவர் இன்மை, அல்லது அரசின்மை என்று கூறலாம். அந்த வகையில் அரசு இல்லாமல் நாடு எப்படி செயல்பட முடியும், அதன் சாத்தியங்கள் என்ன என்பதைப் பற்றி இந்நூல் ஆராய்கிறது. பொதுவாக, புரட்சி என்பதை முதலாளித்துவ ஊடகங்கள், குறிப்பாக ஆரியர்கள் நடத்துபவை, தவறாக சித்திரித்து வந்திருக்கின்றன. அப்படியான பல்வேறு பிரச்னைகளை முதல் இரண்டு அத்தியாயங்களில் நூல் எடுத்தாண்டு, பிறகு பேசும் மையப்பொருளுக்கு வேகமாக நகர்ந்துவிடுகிறது. நூலில், அரசின்மை கருத்துகளை விளக்கிய முக்கியமான தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை வாசகர்கள்தாம் தேடிப் படித்துக்கொள்ளவேண்டும். எடுத்துக்கொண்ட மையப்பொருளை விவரிக்க அதிக நேரம் தேவை என்பதால் எழுத்தாளர் அலெக்சாண்டர், முக்கிய சிந்தனையாளர்கள் பற்றி அதிகம் விளக்கவில்லை. கட்டற்ற ஆராய்ச்சி, ஆய்வு வலைத்தளங்களில் அனார்சிசம் பற்றி தேடினாலே ஏராளமான கட்டுரைகள், நூல்களின் சில பகுதிகள் இலவசமாக வாசிக்க கிடைக்கின்றன. அவற்றைப் படித்து ஒருவர் இத்தத்துவத்தை நன்றாக புரிந்துகொள்ள முடியும். நூலில் தொழிலாளர்கள் மீது அத...