இடுகைகள்

அரசு பணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குரோம்புக்கால் எந்த பயனும் இல்லை - காலாவதி தேதியால் குப்பைக்குச் செல்லும் கணினி

படம்
  குரோம்புக் இ குப்பையாகும் குரோம் புக் அமெரிக்க பள்ளிகளில் குறைந்த விலை காரணமாக வாங்கப்பட்ட குரோம்புக், தற்போது இ குப்பையாக மாறத் தொடங்கிவிட்டன. இதற்கு காரணம், கூகுளின் காலாவதி அறிவிப்புதான். குரோம் புக் மடிக்கணினி வன்பொருட்கள் நன்றாக இயங்கி வந்தாலும் கூட அதற்கு வழங்கும் ஆதரவை நிறுத்திக்கொண்டால் அதை மாணவர்கள் பயன்படுத்த முடியாது. குறைந்த விலை, எளிதாக பயன்படுத்துவது காரணமாகவே   பள்ளிகள் கூகுளின் குரோம் புக் கணினியை வாங்கின. நடப்பு ஆண்டில் பதிமூன்று மாடல்கள், அடுத்த ஆண்டு 51 மாடல்களுக்கான   காலாவதி தேதியை கூகுள் அறிவித்துவிட்டது. அமெரிக்க அரசு, கூகுள் குரோம் புக் மடிக்கணியை வாங்குவதற்கு மட்டும் 1.8 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. ஆனால், இக்கணினிகளுக்கான பயன்பாடு குறைந்த கால வரம்பே கொண்டிருந்தால், செலவழித்த பணத்திற்கான மதிப்பே இருக்காது. இதற்கு எதிர்மறையாக விண்டோஸ், மேக் ஆகிய நிறுவனங்களின் ஆதரவு நிறுத்தப்பட்டாலும் அதை ஒருவர் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம். உடனே தூக்கி குப்பைத்தொட்டியில் எறிய வேண்டியதில்லை. ஆனால் குரோம்புக்கில் இந்த வசதி இல்லை.   பெருந்தொற்று காலத்தில் குரோம்