இடுகைகள்

யுவன் சந்திரசேகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்ஐசி முகவரின் ஆன்மிகத்தேடல் பயணம் - வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்

படம்
  வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்  கிழக்கு பதிப்பகம்  நாவல்  சந்தானம் என்ற எல்ஐசி ஏஜெண்ட், திருவண்ணாமலையில் கணபதி என்பவரைச் சந்திக்கிறார். அதன் வழியாக வேதமூர்த்தி என்ற சாமியாரைப் பற்றி அறிவதோடு அவரது சீடர்களையும் சென்று சந்திக்க செல்கிறார். இதன் வழியாக அவர் பெறும் அனுபவங்கள்தான் கதை.  ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத ஒரு சம்பவம், அவர்களது சாதாரண வாழ்க்கையை அசாதாரணமாக்குகிறது. மாதச்சம்பள வேலைக்குப் போகவேண்டும் என நினைத்த பால்பாண்டி, சிலம்பம் கற்றுக்கொடுப்பவராக மாறுகிறார். கண்பார்வை இல்லாத ஹரி, குருவின் தீட்சை பெற்று அடுத்த குருவாக மாறுகிறார். இறந்துபோன அம்மாவின் நினைவில் இருந்து மீளாத வைரவன், நகரத்தார் விடுதிக்கு பொறுப்பாளராகிறார். மடத்தின் விடுதியில் வளர்ந்த கோவர்த்தனம் பத்து ஆண்டுகள் அலைந்து திரிந்தபிறகு, ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். மகன் அகாலமாக இறந்துபோக, தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து அதன் வழியாக துக்கத்திலிருந்து மீள முயல்கிறார் கட்டுமானக் கலைஞர் சிவராமன். ஒட்டுமொத்த குடும்பமே தற்கொலை செய்து இறக்க, மடத்தில் துறவியாகி வாழ்கி

விதிகளில் சிக்கிக்கொண்டு தடுமாறும் மனித மனங்களின் போராட்டம்! - பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்

படம்
  பகடையாட்டம் தத்துவ சாகச நூல் யுவன் சந்திரசேகர் 375 பக்கங்கள் தத்துவநூல் போல தொடங்கி வளர்ந்து திடீரென திகில் திருப்பத்தோடு சாகச நாவலாக மாறி நிறைவடைகிறது. தொடக்கத்தில் படிக்க தடுமாற்றம் இருந்தாலும்  யுவன் சந்திரசேகரின் மாயத்தன்மை கொண்ட எழுத்துகள் நம்மை வாசிப்பிற்குள் இழுக்கின்றன. மூன்று ஆங்கில நூல்களை வாசித்து, அதன் அடிப்படையில் பாத்திரத்தின் தன்மைகளை வடிவமைத்து நாவலாக்கியிருக்கிறார். அதை ஆசிரியர் சொல்லாமல் கூட மறைத்திருக்க முடியும். ஆனால் நேர்மையாக அதை கூறிவிட்டார். நூலின் பின்னுரை முக்கியமானது. தவிர்க்காமல் வாசியுங்கள்.  சீனா, நேபாளத்தின் எல்லையில் உள்ள படைப்பிரிவின் ராணுவ அதிகாரி மேஜர் க்ருஷ்தான் கதையை தொடங்குகிறார். பாதுகாப்பு பணியில் இருப்பவருக்கு சண்டையில் கால்களை இழந்த நண்பன் நானாவதி நினைவுக்கு வருகிறான். இதில் இருந்தே நூலின் தத்துவப்பகுதி தொடங்கிவிடுகிறது. போரின் அபத்தம், அதன் காரணமாக ராணுவம் அறிமுகமில்லாதவர்களை கொலை செய்வது, குழப்பம், உடல் அங்கங்கள் ஹீனமாவது என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் பேசப்பேச நமது மனமும் அதே திக்கில் மெல்ல நகர்கிறது.  க்ருஷ் எதையும் பிறரிடம் சொல்லாத ஆள். ர