இடுகைகள்

சீனா. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போராட்டங்களின் அடிப்படை- வெல்லுமா -தோற்குமா?

படம்
போராட்டங்கள் வெல்லுமா? ஹாங்காங்கில் ஜூன் பனிரெண்டாம் தேதி தொடங்கிய போராட்டம் ஹாங்காங் கடந்து உலகளவில் மக்களின் கவனத்தையும் ஊடகங்களையும் ஈர்த்தது. காரணம், சீனா வர்த்தக மையமான ஹாங்காங்கை எப்படி பல்வேறு சட்டங்கள் மூலமாக சீனாவின் துணை நாடாக மாற்ற முயல்கிறது என்பதை மக்கள் போராட்டம் உலகிற்கு காட்டியது. காவல்துறை மையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராடத் தொடங்கினர். கேரி லாம் என்ற ஹாங்காங்கின் நிர்வாகத்தலைவரை மாற்றக்கோரி போராட்டம் மாறியுள்ளது. முதலில் தொடங்கிய போராட்டம்  லாம் அமல்படுத்திய குற்றச்சட்டம் தொடர்பானது. சாதாரணமாக பேரணி, அமர்ந்து போராடி செய்திகளை உலகிற்கு கூறிய மக்கள் இன்று அதில் வன்முறை வழியாகவும் உணர்த்துவதற்கு தயங்குவதில்லை என்கிறார் டொரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்த மார்க் ஃபெய்ன்பெர்க். கடந்த ஏப்ரலில் இம்முறையில் சுற்றுச்சூழல் தொடர்பான போராட்டத்தை மத்திய லண்டனில் மக்கள் முன்னெடுத்தனர். மக்களின் கவனம் ஈர்ப்பது நமக்கொன்றும் புதிதல்ல. மரம் வெட்டி போடுவது, பஸ்களை எரிப்பது, கிடைத்தால் மனிதர்களை பஸ்ஸில் வைத்து எரிப்பது என பல்வேறு வழிகளில் போராட்டம் குறித்து இந்தியளவில்