இடுகைகள்

தட்பவெப்பநிலை. விமானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புயலின் தன்மையைக் கணிக்கும் புயல்வேட்டையர்கள்

படம்
தெரிஞ்சுக்கோ! புயல் வேட்டையர்கள் புயல் வருகிறது என்றால் நாம் காய வைத்து துணி முதற்கொண்டு எடுத்து வைத்துக்கொண்டு, இன்வெர்டரில் டீசல் ஊற்றிக்கொண்டு தயாராக இருப்போம். இதில் சிலர் மட்டும் மிக கவனமாக சிறியவகை ஹெலிகாப்டர்களை எடுத்துக்கொண்டு புயலில் செல்வார்கள். இதன்மூலம் புயலின் தன்மையைக் கணிக்க முயற்சிக்கிறார்கள். மணிக்கு 314 கி.மீ வேகத்தில் வீசும் புயலுக்கு ஈடுகொடுத்து பறப்பது சாதாரண காரியமா? புயல் வேட்டையர்கள் இதைத்தான் செய்கிறார்கள். புயலுக்குள் சென்று உயிரோடு திரும்புவது சிரமம்தான். அறிவியல் தகவல்களை துல்லியமாக சேகரிக்க இந்த விஷயத்தை செய்கிறார்கள். புயலுக்குள் செல்லும் புயல் வேட்டையர்கள் அதனை ஆய்வு செய்து முழுமையாக தகவல் திரட்ட தேவைப்படும் நேரம் 8-12 மணிநேரம். இவர்களின் விமானம் தோராயமாக 10 ஆயிரம் அடி தூரத்தில் பயணிக்கிறது. அமெரிக்காவில் உள்ள விமானப்படையில் புயல் வேட்டையாளர்களாக 70 பேர் பணிபுரிகிறார்கள். பருவநிலையைக் கணிப்பதற்காக 70 ட்யூப் வடிவிலான கருவிகள் விமானத்தில் பொருத்தப்பட்டு உள்ளன. நோவா எனும் புயல் வேட்டையர்கள் பயன்படுத்தும் விமானத்தில் 3 இஞ்சின்கள் உ