இடுகைகள்

சூழல் மாசுபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அலுமினியம் எப்படி மறுசுழற்சி செய்யப்படுகிறது?

படம்
  அலுமினியத்தின் மறுசுழற்சி! தொழில்துறையில், அலுமினியம் மதிப்பு மிக்க பொருள். அதிகளவில் இதனை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை எளிதாக பல்வேறு வடிவங்களுக்கு மாற்ற முடியும். இதனால், அலுமினிய பாயில், டின்கள், கார் பாகங்கள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்கிறார்கள். சுரங்கத்திலிருந்து பெறும் பாக்சைட்டிலிருந்து, அலுமினியத்தைப் பிரித்தெடுக்கின்றனர். இப்படி புதிதாக அலுமினியத்தை எடுப்பதை விட, அலுமினிய பொருட்களை மறுசுழற்சி செய்யும்போது குறைந்தளவு ஆற்றலே செலவாகிறது.  நாம் பயன்படுத்தும் மூன்றில் இருபங்கு குளிர்பான கேன்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் உருவாக்கப்படுகின்றன. இவற்றை அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகின்றன. மேற்கு நாடுகளில் அலுமினிய கேன்களின் மறுசுழற்சி செயல்பாடும் அதிகம்.  அலுமினியம் பிற உலோகங்களைப் போலவே மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்துகிறது.  அவ்வளவு எளிதாக அரிக்கப்படாத காரணத்தால், அதிகளவு பயன்பாட்டில் உள்ளது.  அலுமினியத்தை எளிதாக வயர்களாக்க முடியும். இப்படி வடிவம் மாறினாலும் கூட அதன் வலிமை குறையாது. இதனை எளிதாக அறுக்க முடியாது.  அலுமினியத்தின் வடி

இயற்கைக்கும் பெண்ணுக்கும் தொடர்பு உண்டு!

படம்
நேர்காணல் கிறிஸ் குவோமோ, சூழலியலாளர் பெண்கள் இயற்கையோடு இணைந்தவர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள் எப்படி? நீங்கள் பெண்ணை அவளின் பொறுமை, பாதுகாக்கும் குணம் ஆகியவற்றை வைத்து இயற்கையோடு இணைக்கிறீர்கள். நானோ மனிதர்கள் அனைவரும் இயற்கையை சார்ந்து அதிலிருந்து அறிவைப் பெற்று தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைக் காண்கிறேன். இதில் பெண்கள் அர்ப்பணிப்பாக பணிகளைச் செய்கிறார்கள் இங்கு நான் சொல்வது பெண்ணின் பணிகளை மட்டுமே. அவர்களை உடல்களாக கருதி, இயற்கையோடு இணைக்கவில்லை. பெண்கள் உலகை வேறுவிதமாக பார்க்கிறார்கள் என்கிறீர்களாழ ஆமாம். கடந்த இருநூறு ஆண்டுகளாக நாம் காலனியாதிக்கத்தால் அவதியுற்றோம். இன்று முதலாளித்துவத்தால் மறைமுகமாக பிரச்னைகளுக்கு உள்ளாகிறோம். பெண்கள் இக்காலகட்டங்களில் தங்களுக்கான பிரச்னைகளை தீர்க்க முனைந்திருந்தார்கள். அதாவது பாலின பாகுபாடு, சமூகப் பிரச்னைகள், சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த உழைத்து வந்தனர். ஆனால் இருநூறு ஆண்டுகளில் இவர்களை அமைப்புகளை உருவாக்க வைத்திருந்தால் பருவநிலை மாறுபாடுகளை நாம் சந்திக்கும் நிலை வந்திருக்காது. இப்படி உருவாக்கப்படும் தொழிற்சாலைகளை அவர்கள்