அலுமினியம் எப்படி மறுசுழற்சி செய்யப்படுகிறது?
அலுமினியத்தின் மறுசுழற்சி!
தொழில்துறையில், அலுமினியம் மதிப்பு மிக்க பொருள். அதிகளவில் இதனை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை எளிதாக பல்வேறு வடிவங்களுக்கு மாற்ற முடியும். இதனால், அலுமினிய பாயில், டின்கள், கார் பாகங்கள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்கிறார்கள். சுரங்கத்திலிருந்து பெறும் பாக்சைட்டிலிருந்து, அலுமினியத்தைப் பிரித்தெடுக்கின்றனர். இப்படி புதிதாக அலுமினியத்தை எடுப்பதை விட, அலுமினிய பொருட்களை மறுசுழற்சி செய்யும்போது குறைந்தளவு ஆற்றலே செலவாகிறது.
நாம் பயன்படுத்தும் மூன்றில் இருபங்கு குளிர்பான கேன்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் உருவாக்கப்படுகின்றன. இவற்றை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகின்றன. மேற்கு நாடுகளில் அலுமினிய கேன்களின் மறுசுழற்சி செயல்பாடும் அதிகம்.
அலுமினியம் பிற உலோகங்களைப் போலவே மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்துகிறது. அவ்வளவு எளிதாக அரிக்கப்படாத காரணத்தால், அதிகளவு பயன்பாட்டில் உள்ளது.
அலுமினியத்தை எளிதாக வயர்களாக்க முடியும். இப்படி வடிவம் மாறினாலும் கூட அதன் வலிமை குறையாது. இதனை எளிதாக அறுக்க முடியாது.
அலுமினியத்தின் வடிவத்தை எளிதாக மாற்றி அதனை தகடாக (malleability)மாற்ற முடியும். எளிதாக இதனை உடைக்க முடியாதது, இதனை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணம்.
1.இரும்பு, பிளாஸ்டிக், காகித குவளைகளை தவிர்த்து அலுமினிய கேன்களை மட்டும் தனியாக பிரிக்கிறார்கள். இதுதான் அலுமினியத்தை மறுசுழற்சி செய்வதில் முதல் பணி.
2.கேன்களை அப்படியே இடத்திற்கு இடம் மாற்றினால் அதிக இடம் பிடிக்கும். எனவே, அதனை இயந்திரம் மூலம் அழுத்து குறிப்பிட்ட வடிவத்திற்கு மாற்றுகிறார்கள். இதன் மூலம் அதனை எளிதாக கையாள முடியும். குறைந்த இடத்தையே கேன்கள் எடுத்துக் கொள்ளும்.
3.கேன்களின் மீதுள்ள தூசுகளை வெப்பமான காற்று மூலம் நீக்குகிறார்கள். பிறகு, 750 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அதனை உருக்கி நீர் மூலம் குளிர்விக்கிறார்கள்.
4.குளிர்விக்கப்பட்ட அலுமினியத்தை சிறு பிளாக்குகள் போன்ற வடிவத்தில் மாற்றுகிறார்கள். இதற்கு, இங்கோட்ஸ் (Ingots) என்று பெயர். இதனை எடுத்து சூடுபடுத்தி மெல்லிய தகடுகளாக மாற்றுகிறார்கள். இத்தகடுகளை வைத்து கேன்கள் அல்லது வேறு பொருட்களாக மாற்றலாம்.
Super science encyclopedia
Pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக