மண்ணிலுள்ள நச்சு உலோகங்களை சுத்திகரிக்கும் தாவர இனங்கள்!

 










நச்சு உலோகங்களை உறிஞ்சும் தாவரம்!

பெருநகரங்களில் எலெக்ட்ரானிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. ஆனால், கழிவுகளிலிருந்து நிலம், நீரில் தேங்கும் நச்சு உலோகங்களை மறுசுழற்சி செய்வது கடினமானது. இதன் விளைவாக, நிலமும், நீரும் மாசுபடுகிறது. இதற்கு அறிவியலாளர்கள், தனித்துவமான தாவரங்களை வளர்த்து, நச்சு உலோக பாதிப்பை குறைக்கத் திட்டமிட்டு வருகின்றனர். 

உலோகங்கள் மாசுபடுத்தியுள்ள மண்ணைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்ட 700க்கும் அதிகமான  தாவரங்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக தாவரவியலாளர் ஆன்டனி வான்டர் என்ட் இதுபற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  அவர், புதிய கடலோனியா தீவிலுள்ள மழைக்காட்டிற்கு சென்றது கூட உலோகத்தை உறிஞ்சுகிற  தாவரங்களைத்  தேடித்தான். அவர் கண்டறிந்த தாவரத்தின் பெயர் பைக்னாண்ட்ரா அக்குமினாட்டா (Pycnandra acuminata).  இதன் தாவர சாற்றில், 25 சதவீத நிக்கலைக் கொண்டிருந்தது.  இப்படி மண்ணிலுள்ள உலோகங்களை உறிஞ்சக்கூடிய தாவர இனங்களுக்கு,  ஹைபர்அக்குமுலேட்டர் (Hyperaccumulator)என்று பெயர். 

எதிர்காலத்தில் உலோகச் சுரங்கங்களில் அக்குமினியாட்டா போன்ற தாவரங்களை மண்ணின் மாசு நீக்க நடுவார்கள் அல்லது விலை மதிப்பான உலோகங்களைப் பெறவும் இத்தாவரங்கள் பணப்பயிராக உதவலாம். தாவரத்திலிருந்து உலோகங்களைப் பெறும் முறைக்கு, பைட்டோமைனிங் (Phytomining) என்று பெயர்.

 1970ஆம் ஆண்டில் தாவரவியலாளர் டாங்கய் ஜாஃப்ரே( Tanguy Jaffre) , அக்குமினியாட்டாவைக் கண்டுபிடித்தார். ஆன்டனி, 700 உலோகம் உண்ணும் தாவரங்களில் 400 தாவரங்களை அடையாளம் கண்டுவிட்டார். இத்தாவரங்கள், உறிஞ்சும் உலோக அணுக்களை இலையின் மேற்பரப்பில் சேமித்து வைக்கின்றன. ஆராய்ச்சியாளர் ஆன்டனி, அக்குமினியட்டா வகை தாவரங்களில் மாதிரிகளை எடுத்து அதை திரவ நைட்ரஜனில் வைத்து பதப்படுத்துகிறார். பிறகு, மாதிரிகளை மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கிறார் ஆன்டனி. 

மண்ணிலுள்ள துத்தநாகம், கோபால்ட், செலினியம் ஆகிய உலோகங்களை உறிஞ்சி வாழும் தாவரங்கள் உள்ளன.  நிலத்தில் சுரங்கம் தோண்டி உலோகங்களைப் பெறுவது பெரும் சூழல் மாசுபாடுகளை ஏற்படுத்துகிறது. இங்கு குறிப்பிட்ட உலோகங்களை உறிஞ்சும் இயல்பு கொண்ட தாவரங்களை பயிரிட்டு, மாசைக் குறைக்கலாம். இது புதிய முயற்சியல்ல. இந்த ஐடியாவை  1983ஆம் ஆண்டில் ரூபஸ் சானே (Rufus L. Chaney) என்ற விஞ்ஞானி அமெரிக்க அரசுக்கு இதுபற்றி கூறியிருக்கிறார்.. “பைடோமைனிங் முறையில் மலேஷியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உலோகங்களைப் பெற வாய்ப்புள்ளது ” என்றார் ஆன்டனி. 





Could mines be replaces by plants?

science illustrated australia 2022

https://grist.org/science/phytomining-nickel-kinabalu-park-malaysia/

https://www.mining.com/web/can-plants-that-suck-metal-from-soil-replace-mining/

https://www.sciencedirect.com/science/article/abs/pii/S089268750900106X

கருத்துகள்