தோலில் உருவாகும் மோர்கன் ஸ்பாட்ஸ், ஆவண வகைப்பாட்டியலின் தந்தை! கேம்ப்பெல் டி மோர்கன், கார்ல் லின்னேயஸ்

 




கேம்பெல் டி  மோர்கன் (Campbell De Morgan 
1811-1876)

இங்கிலாந்தின் குளோவெல்லி நகரில் பிறந்தார். லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் மருத்துவம் படித்தார். பிறகு, மிடில்செக்ஸ் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்ட மருத்துவப் பள்ளிக்கு பல்வேறு உதவிகளைச் செய்ததோடு, பேராசிரியராக செயல்பட்டார். 

1861ஆம் ஆண்டு ராயல் சொசைட்டியில் உறுப்பினரானார்.புற்றுநோய் செல்கள், எப்படி பரவுகிறது என்பதில் ஈடுபட்டார். இதன் மூலமாக, செர்ரி ஆஞ்சியோமா எனும் சிவப்பு நிற தோல் வளர்ச்சி பிரச்னை பற்றி கண்டறிந்தார். மனிதர்களின் தோலில், வட்டமாக சிவப்பு நிறத்தில் சிறு கொப்புளம் போலத்தோன்றும். 30 அல்லது அதற்கு மேல் வயதுள்ளவர்களுக்கு இப்பிரச்னை ஏற்படுகிறது. இப்படி பாதிக்கப்பட்ட இடங்களை கேம்பெல்  டி மோர்கன் ஸ்பாட்ஸ் என்றும் மருத்துவர்கள் அழைக்கின்றனர்.தோலில் உருவான  சிறுகொப்புளம் பெரிதானால் அல்லது உடைந்து ரத்தம் வந்தால், மருத்துவரின் ஆலோசனை பெறுவது முக்கியம். 

  https://en.wikipedia.org/wiki/Campbell_De_Morgan


2







கார்ல் லினாயஸ் (Carl Linnaeus 
1707 1778)

பிறந்தது: ஸ்வீடன், ஸ்டென்புரோஹல்ட்

படித்தது: தாவரவியல், மருத்துவம்

வேலை: தாவரவியல் பேராசிரியர் 

ஆர்வம்: தாவரங்கள் (6000) மற்றும் விலங்கினங்களின் (4000) மாதிரிகளை சேகரித்தது 

சாதனை: சிஸ்டம் ஆஃப் நேச்சர் என்ற நூல்தொகுதிகளைத் தொகுத்தது (1735)

அடையாளம்: தொகுப்பு முறையியலின் தந்தை (Father of Taxonomy)  

உருவாக்கியது: ஹாமர்பை எஸ்டேட்டில் சிறிய அருங்காட்சியகம்

நம்பிக்கை : இறையியல் வழியாக இயற்கை மீது காதல் கொண்டவர்

அறியாத அம்சம்: உயிரினங்களுக்கும் சூழலுக்கும் உள்ள தொடர்பை விளக்கிய ஆளுமை

பெயர் சூட்டல்: மனிதர்களைக் குறிக்கும் ஹோமோசெபியன்ஸ் 





https://ucmp.berkeley.edu/history/linnaeus.html

https://www.linnean.org/learning/who-was-linnaeus



கருத்துகள்