இடுகைகள்

இல்லம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பணம் சம்பாதிக்க முதியவர்களை திட்டம் தீட்டி கொன்ற பெண்மணி - ஏமி

படம்
  1873ஆம ஆண்டு பிறந்தவர், ஏமி. இருபது வயதில் ஜேம்ஸ் ஆர்ச்சர் என்பவருடன் திருமணமானது. இவருக்கு பிறந்த பெண்பிள்ளையின் பெயர் மேரி. இவருக்கு செவிலியர் படிப்பு படிக்க ஆசை, ஆனால் படிக்கவில்லை. ஆனாலும் தன்னம்பிக்கை இருந்தது. படிக்காவிட்டால் என்ன படித்ததாக கூறிக்கொள்வோம் தவறில்லை என நினைத்தார். எனவே, கனெக்டிகட்டில் வயதானவர்களுக்கான நர்சிங் ஹோமை தொடங்கி நடத்தினார். 1907ஆம் ஆண்டு ஏமி, தனது நர்சிங் ஹோமை விண்ட்சோர் எனுமிடத்திற்கு மாற்றிக்கொண்டார்.வயதானவர்களுக்கான இல்லமாக மாற்றி நடத்தினர்.   தொடங்கிய காலத்தில் இருந்து முதல் மூன்று ஆண்டுகளில் சேர்ந்த பத்து வயதானவர்கள் நோயாளிகளாக இருந்து காலமானார்கள். 1910ஆம் ஆண்டு கணவர் ஜேம்ஸ் ஆர்ச்சர் இயற்கையான முறையில் இறந்துபோனார். பிறகு மைக்கேல் கில்லிகன் என்பவரை ஏமி மணந்துகொண்டார். இவரது ஆயுள் அதற்குப் பிறகு பனிரெண்டு மாதங்களாக குறைந்துவிட்டது. 1911- 1916 வரையிலான காலகட்டத்தில் நர்சிங் ஹோமில் இருந்தவர்களில் 48 பேர் காலமானார்கள். மைக்கேல் கில்லிகனின் குடும்ப மருத்துவர் மருத்துவர் கிங். இவருக்கு, ஏமியின் செயல்பாடுகளில் நம்பிக்கை இருந்தது. அதனால் அவர், ஏமி நோயாள

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் முதியோர் இல்ல பெண்கள்!

படம்
  கோவையில் ஆர்எஸ் புரத்தில் உள்ளது ஆதரவற்றோர் இல்லம். அந்த இல்லத்தைச் சேர்ந்த முதியோர், தங்களுக்கு அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை உணவுகளை வழங்கி வருகின்றனர்.  கோவை கார்ப்பரேஷன், ஈர நெஞ்சம் என்ற தன்னார்வ அமைப்பு ஆகியவற்றின் ஆதரவு உதவியுடன் ஆதரவற்றோர் இல்லம், மாணவர்களுக்கு டீ, பிஸ்கெட், நீர்மோரை வழங்கிவருகிறது. தினசரி மாலை நான்கு மணிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் இங்கு வருகின்றனர். இல்லத்தில் வாழ்பவர்கள் அனைவருமே குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள்தான். அவர்கள் இன்று தாங்கள் வாழும் சமூகத்தையே குடும்பமாக நினைக்கிறார்கள் என்றார் ஈர நெஞ்சம் அமைப்பின் தலைவரான மகேந்திரன்.  முதியோர் அமைப்பினர் முதலில் பள்ளிக்கே சென்று டீ, பிஸ்கெட், சுண்டல், ஆகியவற்றை வழங்கி வந்திருக்கின்றனர். பிறகுதான் மாணவர்களே முதியோரை தேடி வரத் தொடங்கியிருக்கின்றனர். காலை உணவு கூட நாங்கள் வழங்க நினைத்தோம். ஆனால் அதற்கான நிதி உதவிகளைப் பெற்றால்தான் சாத்தியம் என்கிறார் ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் லஷ்மி அம்மாள். அண்மையில் தெருவில் ஆதரவற்று கிடந்த பெண்ணை மீட்டு இல்லத்தில் சேர்த்தனர். பிறகு அந்த பெண்ணின் உறவினர்களைத் தேடியப

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான கூடு!

படம்
  பொள்ளாச்சியில் சரணாலயம் ஜோதி என்ற தன்னார்வ அமைப்பு தொண்டாற்றி வருகிறது. இதைத் தொடங்கிய வனிதா ரங்கராஜூக்கு இப்போது 67 வயதாகிறது. மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்த அமைப்பின் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.  வனிதாவுக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் பிறந்தன. அப்போதுதான் நடந்தது முக்கியமான நிகழ்ச்சி. காந்தி நகரிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு நலத்திட்டங்கள் தொடர்பாக சென்றிருந்தார். அங்கு மூளை தொடர்பான குறைபாடு உள்ள சிறுவனைப் பார்த்தார். அவனுக்கு உள்ள பிரச்னையை மருத்துவர்கள் செரிபெரல் பால்சி என்று அழைத்தனர்.  பையனை முழுக்க வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்ள முடியாதபடி அவனது அம்மாவுக்கு பொருளாதார நிலைமை இருந்தது. காலையில் வேலைக்கு போய்விட்டு வந்து பார்த்தால் தரையில் அப்படியே விழுந்து கிடப்பான் குழந்தை. பதறிப்போய் பார்த்தால், உடலில் பல்வேறு இடங்களில் பூனையின் நக கீறல்கள். அவனுக்கு வனிதா வைத்த பெயர் சக்தி. ஆனால் அங்குள்ளவர்கள் அவன் எப்போது தரையில் விழுந்து கிடப்பதால், அவனை பூச்சி என பட்டப்பெயர் வைத்து அழைத்தனர்.  அவனைக் கவனித்துக்கொள்ள ஏதாவது செய்யத் தோன்றியது. உடனே வனிதா தனது தந்தையிடம் சிறிது பணம் பெ