இடுகைகள்

மு.க.ஸ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் திமுக என்ற கட்சிக்கான முதல்வர் அல்ல; தமிழ்நாட்டிற்கான முதல்வர்! - மு.க. ஸ்டாலின்

படம்
  மு.க. ஸ்டாலின்  தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியாகிய நான் என்று உறுதிமொழி ஏற்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? எனது உறுதிமொழி ஏற்பு என்பது 150 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. திருக்குவளை தமிழ்நாட்டிற்கு மகத்தான தலைவரை தந்துள்ளது.  முத்துவேலர் கவிஞர், பாடல்களை எழுதுபவராக இருந்தார். அவர்தான் கலைஞரின் தந்தை. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து சாதித்தவர். நான் வரலாற்றின் தொடர்ச்சியாகவே உணர்கிறேன். நான் மட்டுமல்ல. என்னோடு சேர்ந்து உறுதிமொழி எடுத்த திமுக தொண்டர்கள் அனைவருமே இப்படிப்பட்ட உணர்வை மனதில் கொண்டிருப்பார்கள். லட்சியம் உயர்வாக இருந்தால் பெரிய உயரங்களைத் தொட முடியும் என கலைஞர் கூறுவார். அந்த வாக்கியத்தை நினைத்துப் பார்க்கிறேன்.  அதிமுக பலவீனமாவது திமுகவிற்கு அல்லது பாஜகவிற்கு ஆதாயமாகுமா? திமுக என்பது இயக்கம். அது தமிழ்நாட்டில் அதற்கென தனி பலத்தைக் கொண்டுள்ளது. இங்கு மதவாத சக்திகள் கால்பதிக்க வாய்ப்பே கிடையாது.  திமுக ஆதரவாளர்கள் மட்டுமன்றி பிறருக்கும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் பயன் அளிக்குமா? நான் திமுகவிற்கான முதலமைச்சர் அல்ல. தமிழ்நாட்டிற்கான முதல் அம