இடுகைகள்

ஆயுதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூலிக்கொலைகாரன் தொன்மைக் காலத்திற்கு நகர்ந்து போர்வெறி கொண்ட வீரனாகும் கதை!

படம்
  டேங் யின்  மாங்கா காமிக்ஸ்  250 அத்தியாயங்கள்----- நகரத்தில் வாழும் கூலிக்கொலைகாரன். பாரில் உள்ள பெண்ணை ஒரு ரவுடிக்கூட்டம் போதைக்குள்ளாக்கி வல்லுறவு செய்ய முயல்கிறது. நாயகன் அதை தடுத்து அத்தனை பேர்களையும் கொல்கிறான். பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறான். பிறகு தனது அறைக்கு திரும்புகிறான். தூங்குபவனின் ஆன்மா தொன்மைக்காலத்திற்கு பயணிக்கிறது.  ஒரு காட்டில் இலையை கட்டிக்கொண்டு நிற்பதை உணர்கிறான். உண்மையா என்று பார்த்தால் உண்மைதான். அங்கே உள்ள விலங்கு ஒன்றிடமிருந்து சண்டை போட்டு சற்றுவெளியே சென்று பார்த்தால் அங்கு நிங், விண்ட் என்ற இரு நாட்டு ராணுவத்துக்கு இடையில் போர் நடக்கிறது. டேங் யின் என்பது நாயகன் பெயர். கதையில் திடீரென டோமின் மாறுகிறது. நாம் டோமின் என்றே கொள்வோம். நிங் பலம் பொருந்தியவர்கள். விண்ட் பலவீனமானவர்கள். அவர்கள் புறம் நின்று டோமின் நான்கு எதிரிப்படை வீரர்களைக் கொல்கிறான். எதிரிப்படையினர் இறந்துபோன விண்ட் வீரர்களின் பிணங்களை நெருப்பு வைத்து கொழுத்துகிறார்கள். டோமின் நெருப்புக்கு பயந்து குகையில் பதுங்குகிறான். அங்குள்ள டார்க் ஆர்ட்ஸ் மாவீரனின் ஆவி, டோமினுக்குள் ப

ராணுவத்தில் உள்ள சூது செய்யும் கொலைகாரர்களை பழிவாங்கும் வழக்குரைஞர்கள்!

படம்
  மிலிட்டரி பிராசிகியூட்டர் டாபர்மேன் - கே டிராமா   மிலிட்டரி பிராசிகியூட்டர் டாபர்மேன் கொரிய டிராமா தொடர் ராக்குட்டன் விக்கி ஆப்   கொரிய ராணுவத்தில் நடைபெறும் ஊழல்கள், அதற்கான சூத்திரதாரிகளை இரு ராணுவ வழக்குரைஞர்கள் சேர்ந்து சுளுக்கெடுப்பதுதான் பதினாறு எபிசோடுகளின் கதை. நாயகன் பெயர்தான் டாபர்மேன். அப்படியல்ல டோ பே மன். அவனது எதிரிகள் அவனது பணத்திற்கான விசுவாசத்தைப் பார்த்து அவனை டாபர்மேன் என்ற அழைத்து மகிழ்கிறார்கள். ஒருகட்டத்தில் நாயகன் , தன்னைப் போலவே உள்ள டாபர்மேன் நாயை வளர்க்கிறார். தொடரின் தலைப்பு வந்துவிட்டதல்லவா? பள்ளியில் படிக்கும் டோ பே மன்னின் பெற்றோர் ராணுவத்தில் வழக்குரைஞர்களாக இருந்து கார் விபத்தில் மர்மமாக இறந்துபோகிறார்கள். அதிலிருந்து ராணுவம் , சேவை என்றாலே கசப்பாக இருக்கிறது டோவுக்கு. எனவே, ராணுவ சேவை வயது வந்தாலே தன்னை ஏதாவது குற்றங்களில் ஈடுபடுத்திக்கொண்டு பள்ளியில் இருந்து வெளியே வந்துவிடுவான். ஆனாலும் கூட வழக்குரைஞர் தேர்வில் விரைவில் வெற்றி பெற்றுவிடுகிறான். ஆனால், பள்ளி சிறுவனான அவனை எந்த நிறுவனமும் வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. அப்போது அவனுக்க

ரஷ்ய கடத்தல் ஆயுதங்களை விற்கும் தேசத்துரோகியை துரத்தும் சிஐடி ராபின் - மார்வின் - வேதாள வேட்டை - முத்து காமிக்ஸ்

படம்
  # திருப்பூர் புத்தகத் திருவிழா 2023 # தமிழக அரசு - பின்னல் புக் ட்ரஸ்ட்  சிஐடி ராபின் ஆடும்  வேதாள வேட்டை  முத்து காமிக்ஸ்  ரூ. 50 கதை - மோரெட்டி மிக்னாகோ ஓவியம் - ஃபியோரென்டினி - பஸ்டிச்சி - பேசானி மூலக்கதை - செர்ஜியோ போனெல்லி நிறுவனம்  காமிக்ஸ் கதையின் தொடக்கம். அதில் ஒருவர் இன்னொருவரிடம் ஆயுதம் வாங்க வந்திருக்கிறார். போலிச்சரக்கு கொடுத்து தன்னை ஏமாற்ற வேண்டாம் என சொல்லுகிறார். ஒருவர் பெர்ரி, இவர்தான் ஆயுதத்தை ஸோம்பி என்பவருக்கு விற்கிறார். ஸோம்பி ஒரு கொலைகாரர் . அவரை ராபின், மார்வின் ஆகிய டிடெக்டிவ்கள் கைது செய்யத் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆயுதத்தை ஸோம்பி பெர்ரியிடம் பணம் கொடுத்து வாங்கும் தொலைவில் சற்றுத் தள்ளி அவர்களை ராபின் - மார்வின் இணை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறது.   இவர்களுக்கு இடையில் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் ஸோம்பி, நெற்றியில் தோட்டாவை வாங்கிக்கொண்டு சாகிறான். பெர்ரிக்கு தோட்டாக்காயம் பட்டு வாழ்வா சாவா என்ற நிலை. அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஆயுதங்களை ராபின் - மார்வின் இணை பெருமையாக பறிமுதல் செய்கிறது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் எப்படிப்பட்ட வ

அம்மாவின் நினைவுகளைக் காப்பாற்ற மகள் செய்யும் போராட்டம்! ஜங்க் இ - கொரியன்

படம்
  காலமான நடிகை கங் சூ இயோன் நடுவில் இயக்குநர் இயோன் சங் ஹோ ஜங் இ கொரிய படம் ஜங்க் இ கொரியப்படம் – நெட்பிளிக்ஸ் ட்ரெய்ன் டு பூசன் படம் எடுத்த இயோன் சங் ஹோ என்ற இயக்குநரின் அறிவியல் புனைகதைப் படம்.   பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், மனிதர்களை பாதிக்கிறது. எனவே, அவர்கள் விண்வெளிக்கு சென்று வசிக்கும் நிலை ஏற்படுகிறது. கூடவே, உள்நாட்டுப் போரும் உருவாகிறது. இதில் அரசு தரப்பு ஏஐ அறிவு கொண்ட வீரர்களை வைத்து போரை நடத்துகிறது. இதற்காக ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் ஒன்றில்தான் கதை நடைபெறுகிறது.   இந்த நிறுவனம் ஒருகாலத்தில் பூமியில் நடைபெற்ற போரில் சாதனை செய்த பெண்மணியான யூன் ஜங்கின் நினைவுகளை எடுத்து செயற்கை அறிவை குளோனிங் செய்கிறார்கள். அதை வைத்து அவரின் உருவத்தில் ராணுவ வீரர்களைத் தயாரிப்பதே நோக்கம். இதை குழு தலைவராக இருந்து செய்வது, சியோ ஹியூன். இவர்தான்   யூன் ஜங்கின் மகள்.   தாய் கோமா நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார். மகள் சியோ ஹியூனின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காகவே, அம்மா யூன் ஜங் போருக்கு போகிறார். போருக்கு சென்றால் அவரது மகளுக்கு சிகிச்சை இலவசமாக கிடைக்கும் என்பதுதான் டீல். ஆனால

இந்தியர்கள் என ஒவ்வொருமுறையும் நிரூபிக்கும் நிலையிலுள்ள வடகிழக்கு மக்கள்! அனெக் - அனுபவ் சின்கா

படம்
  அனெக்  ஆயுஷ்மான் குரானா இயக்கம் - அனுபவ் சின்கா பாடல்கள் -அனுராக் சைகியா வடகிழக்கு இந்தியாவில் நடைபெறும் ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான சண்டையும், அதில் தலையிட்டு ஆதாயம் தேடும் இந்திய அரசு பற்றியும் படம் தீவிரமாக விவாதிக்கிறது.  யார் இந்தியர், இந்தியராக இருக்க என்ன செய்யவேண்டும், இந்தியர் அல்லாதவர் யார் என பல்வேறு கேள்விகளை காட்சிரீதியாகவும், உரையாடல்களாகவும் படம் நெடுக இயக்குநர் கேட்கிறார். இறுதிக்காட்சியில், சிறுவர்களை எதற்கு கொல்ல உத்தரவிட்டீர்கள் என ஜோஸ்வா தனது உயரதிகாரியைக் கேட்கும் காட்சி முக்கியமானது.  வடகிழக்கு இந்தியாவை இந்தியாவுடன் இணைப்பது மேற்கு வங்கம்தான். அதற்கு பின்புறம்தான் வடகிழக்கு மாநிலங்கள் அமைந்துள்ளன. இவர்களின் உருவ அமைப்பு பிற பகுதியுள்ளவர்களை விட மாறுபட்டது. இதனால் இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் உள்ளவர்கள் இவர்கள் வேலைக்கு, கல்விக்காக வரும்போது சிங்கிஸ், நேபாளமாக, சீனா நாட்டுக்காரர்கள்  என கேலி கிண்டல் செய்கிறார்கள். எனவே,  வடகிழக்கினர் நாங்கள் இந்தியாவுடன் எதற்கு இணைய வேண்டும் என எதிர்ப்பு தெரிவிப்பதோடு அவர்கள் தங்களுக்கென தனி கொடி, அரசியலமைப்புச் சட்டம் கேட்

ஹைப்பர்சோனிக் ஆயுத பந்தயத்தில் முந்தும் சீனா!

படம்
  ஹைப்பர்சோனிக் ஆயுத பந்தயம்! கடந்த ஆண்டு ஆகஸ்டில் சீனா, ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதித்துப் பார்த்தது. இதைப்பற்றி ஃபினான்சியல் டைம்ஸில் கட்டுரை வெளியானது. அதில், இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களை கொண்டு செல்ல முடியும் என்று கூறப்பட்டது. இதுபற்றிய கேள்விக்கு சீனா மறுப்பு தெரிவித்தது. ஆனால் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஆராய்ச்சியில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈடுபாடு காட்டி வருகின்றன.  ஒலியை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் ஆற்றல் கொண்டவை ஹைப்பர் சோனிக் ஆயுதங்கள். மாக் (mach ) என்ற அலகில் இதனை அளவிடுகிறார்கள். மாக் 1  என்பது ஒலியின் வேகம், மாக் 1லிருந்து மாக் 5 வரை சூப்பர் சோனிக், மாக் 5க்கும் அதிகமான வேகம் கொண்டவை ஹைப்பர்சோனிக் என்று வல்லுநர்கள் வரையறுக்கின்றனர்.  கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைகளுக்கு குறிப்பிட்ட இலக்கு உண்டு. அதற்கான வழிமுறையில் பயணிக்கும். இதை ரேடார்களால் கண்டுபிடிக்க முடியும். தாக்கப்படும் நாட்டின் பாதுகாப்பு ரேடார்கள், ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் ஹைப்பர் சோனிக் ஆயுதங்களை அருகில் வந்தபிறகே கண்டுபிடிக்க முடியும். இவற்றில் இரு வகைகள்(HGV,HCM) உண்டு. ராக்கெட்

கொலை செய்ய சிறந்த ஆயுதம்! - சைக்கோ டைரி

படம்
  ஆயுதம் செய்வோம் சீரியல் கொலைகார ர்களின் டேவிட் பெர்கோவிட்ஸ், ஜான் ஆலன் முகமது, ஜான் லீ மால்வோ ஆகியோர்தான் துப்பாக்கியைப் பயன்படுத்தி இரையை போட்டுத்தள்ளியவர்கள். கத்தி, சுத்தியல், ரம்பம், இறைச்சிவெட்டும் கத்தி என வேறுபட்ட ஆயுதங்களை சீரியல் கொலைகாரர்கள் பயன்படுத்துகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை ஆயுதம் என்பது பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது.  மண்டையிலேயே போட்டு பிடிக்கும் பெண்களை, குழந்தைகளை, ஆன்டிகளை கையில் எடுக்கும் ஆயுதம் பயமுறுத்தவேண்டும். கொடூரமாக சித்திரவதை செய்யவேண்டும். ஆனால் அவர்கள் நெடுநேரம் உயிருடன் இருக்கவேண்டும். இதுதான் பொதுவான சீரியல் கொலைகார ர்களின் மனநிலை. துப்பாக்கியை எடுத்து டுபுக் என சைலன்ஸரை சொருகி போட்டுத்தள்ளினால் அதில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது? எனவே, இரும்பு கம்பி, கண்ணாடி பாட்டில், கத்தி, கபடா என தேடும் சீரியல் கொலைகார ர்கள் துப்பாக்கியை வேறு ஆயுதம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே எடுப்பார்கள். டேவிட் பெர்கோவிட்ஸ், துப்பாக்கியால் தான் எளிதாக ஒருவரை கொல்ல முடிகிறது என்பதால் அதனைத் தேர்ந்தெடுத்தார்.  ஆண்களைப் பொறுத்தவரை இதில் வேடிக்கை அதிகம் இருக்கவேண

அல்ட்ரா சோனிக் அலைகள் ஆயுதமா?

படம்
அல்ட்ரா சோனிக் அலைகள் ஆயுதமா? திருவிழாக்கள், மணவிழா ஆகியவற்றில் உங்களை டக்கென ஈர்ப்பது,  அந்த விழாவை ஊருக்குச் சொல்லும் பாடல்கள்தானே!  தூரத்தில் இருக்கும்போது ரசிக்க வைக்கும் பாடல்களின் இசையை, ஸ்பீக்கர்களின் அருகில் இருக்கும் போது எழும் அதிர்வுகளால் அதை ரசிக்க முடியாது. அதே காரணம்தான் இங்கு செய்தியாகி இருக்கிறது.  சீனா மற்றும் கியூபாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வினோதமான குற்றச்சாட்டை அந்நாட்டு அரசுகள் மீது வைத்தனர். சோனிக் அலை ஆயுதங்களால், எங்களைத் தாக்குகிறார்கள் என்பதுதான் அது. தற்போது ஜமா (Jama) என்ற ஆய்விதழ், பாதிக்கப்பட்டோரின் மூளைகளை ஆய்வு செய்து ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இந்தக் குற்றச்சாட்டுக்கு இல்லையென கியூபா அரசு, அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஒலி அலைகள்  ஒருவரைத் தாக்குமா? குறிப்பிட்ட அலைவரிசை வேகத்தில் செலுத்தினால் முடியும்தான். ஆனால் அவை மூளையிலுள்ள நியூரான்களை பாதித்து ஒருவரின் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் கிடையாது.  ஒலி அலைகளில் ஒன்றான அல்ட்ரா சோனிக் அலைகளை மனிதர்கள் 20 முதல்

உலகப்போரை தடுத்து நிறுத்தும் அசாதாரண படை! - டிசி காமிக்ஸின் கொஞ்சம் கிளாசிக் அவெஞ்சர்! லீக் ஆப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மேன்

படம்
              லீக் ஆஃப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்ஸ்மேன் 2003   Director: Stephen Norrington Produced by: Trevor Albert, Rick Benattar, Sean Connery, Mark Gordon, Don Murphy, Michael Nelson Screenplay by: James Dale Robinson Based on The League of Extraordinary Gentlemen by Alan Moore , Kevin O'Neill   Music by Trevor Jones Cinematography Dan Laustsen   1899 ஆம் ஆண்டு நடைபெறும் கதை . சீன் கானரிதான் படையின் தலைவர் . படம் இன்றைய மார்வெல்லின் அவெஞ்சர் படத்தின் கதைதான் . படத்தின் கதை , இங்கிலாந்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுகிறது . உளவுத்தகவல்களில் ஜெர்மனிதான் அத்தாக்குதல்களை நடத்தியது என தெரியவருகிறது . உண்மையில் இப்படி ஐரோப்பிய நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதால் ஜெர்மனி நாட்டுக்கு என்ன லாபம் ? இதனால் உலகப்போர் நடைபெறுமா என பலரும் பயந்து நடுங்குகிறார்கள் . இதனை செய்வது பேன்டம் என்ற முகமூடி அணிந்த மனிதர் . இவை அழித்தால் போதும் . போரைத் தடுத்துவிடலாம் என தெரிகிறது . இதனால் எம் என்ற பணக்கார பேராசிரியர் இதற்கென ஒரு படையை அமைக்க திட்டமிடுகிறார் . அத

நகரை தனது இதயம் போல பாதுகாக்கும் சிட்டி ஹன்டர் குழு! சிட்டி ஹன்டர் அனிமேஷன் தொடர்

படம்
      சிட்டி ஹன்டர்     சிட்டி ஹன்டர் written and illustrated by Tsukasa Hojo.   Directed by Kenji Kodama Studio Sunrise Licensed by NA Discotek Media Original network Yomiuri TV   ஜப்பானில் அதிநவீன நாகரிக நகரம். அங்கு எக்ஸ்ஒய்இசட் என்று ஒரு அமைப்பு. இந்த அமைப்புக்கு காவல்துறை சார்ந்த பெண் மூலமாகவும் பல்வேறு வழக்குகள் வருவது உண்டு. இவை எல்லாம் வழக்குகளாக பதிவு செய்யமுடியாத சிக்கல்களைக் கொண்டவை. அவற்றையெல்லாம் பட்டி டிங்கரிங் பார்த்து ஆட்களின் தாடையைப் பெயர்த்து முதுகுத்தோலை உரித்து பிரைவேட்டாக நீதியை நிலைநாட்டுபவன் ரியோ. அவன்தான் அந்த அமைப்பின் தூண். அவனுக்கு உதவியாக அவனை உயிருக்குயிராக காதலிக்கும் சுத்தியல் காதலி கோமாரா இருக்கிறாள். இவர்களின் அசைன்மென்டுகளை கவனித்து கொடுப்பது கேட்ஸ் ஐயிலுள்ள இருவர். இந்த நால்வரும் நகரில் ஆபத்தான தீவிரவாத தாக்குதல்கள் ஏற்படாதவண்ணம் காத்து வருகின்றனர். அப்போது அங்கு பல்வேறு தொழில்களை செய்யும் கெஞ்சி என்பவன் வருகிறான். அவன் கோமாராவின் பள்ளித்தோழன். அவன் தகுதிக்கு கீழே உள்ள கோமாராவை காதலிக்கிறான். அது எதற்கு என்பதுதான் கதை. ஜப்பானிய அனிமேவைப் பொறுத்தவ

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கான போராட்டம் நடந்ததா?

படம்
ஜம்மு காஷ்மீர் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களாக செயல்படவிருக்கிறது. சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தால் கட்டுப்படுத்தப்படும்படி மாநிலம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் வரவில்லையா? ஊடகங்கள் எதிலும் இத்தகைய காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது.  அரசு விசுவாசம்தான் இதற்குக் காரணம். ஆனால் பிபிசி, அல்ஜசீரா ஆகிய டிவி நிறுவனங்கள் உண்மையை வெளிக்காட்டி விட்டன. பத்தாயிரம் பேர்களுக்கு மேல் பங்கேற்ற பேரணியைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு, ரப்பர் மூடி கொண்ட தோட்டாக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். மேற்சொன்ன வீடியோக்கள் பொய் தேசபக்தி டிவி சேனலான ரிப ப்ளிக் டிவி கூறியது. கூடவே ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் இதற்கு சமூக வலைத்தளத்தில் போலிச்செய்தி என சப்பைக் கட்டு கட்டினர்.  உள்துறை அமைச்சகம் நடந்த போராட்டம் உண்மை. அதில் 20 பேர்தான் இருந்தனர் என விநோதமான காரணத்தைக் கூறியது. ஆனால் உண்மை என்ன என ஆல்ட் நியூஸ் வலைத்தளம் களமிறங்கி விளக்கியது. வீடியோவில் காணப்படும்  அங்கிருந்த விளம்பரப்பலகை, ஜீனப் சாயிப் பசூதி,  பேனரிலுள்ள போராட்ட வாச