அம்மாவின் நினைவுகளைக் காப்பாற்ற மகள் செய்யும் போராட்டம்! ஜங்க் இ - கொரியன்
காலமான நடிகை கங் சூ இயோன் |
நடுவில் இயக்குநர் இயோன் சங் ஹோ |
ஜங் இ கொரிய படம் |
ஜங்க் இ
கொரியப்படம்
– நெட்பிளிக்ஸ்
ட்ரெய்ன்
டு பூசன் படம் எடுத்த இயோன் சங் ஹோ என்ற இயக்குநரின் அறிவியல் புனைகதைப் படம். பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், மனிதர்களை பாதிக்கிறது.
எனவே, அவர்கள் விண்வெளிக்கு சென்று வசிக்கும் நிலை ஏற்படுகிறது. கூடவே, உள்நாட்டுப்
போரும் உருவாகிறது. இதில் அரசு தரப்பு ஏஐ அறிவு கொண்ட வீரர்களை வைத்து போரை நடத்துகிறது.
இதற்காக ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் ஒன்றில்தான் கதை நடைபெறுகிறது.
இந்த நிறுவனம்
ஒருகாலத்தில் பூமியில் நடைபெற்ற போரில் சாதனை செய்த பெண்மணியான யூன் ஜங்கின் நினைவுகளை
எடுத்து செயற்கை அறிவை குளோனிங் செய்கிறார்கள். அதை வைத்து அவரின் உருவத்தில் ராணுவ
வீரர்களைத் தயாரிப்பதே நோக்கம். இதை குழு தலைவராக இருந்து செய்வது, சியோ ஹியூன். இவர்தான் யூன் ஜங்கின் மகள்.
தாய் கோமா
நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார். மகள் சியோ ஹியூனின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காகவே,
அம்மா யூன் ஜங் போருக்கு போகிறார். போருக்கு சென்றால் அவரது மகளுக்கு சிகிச்சை இலவசமாக
கிடைக்கும் என்பதுதான் டீல். ஆனால் போரில் யூன் ஜங் தாக்கப்படுகிறார். கோமாவில் வீழ்கிறார்.
அதோடு சியோ ஹியூனும் புற்றுநோயால் முழுமையாக விடுபட முடிவதில்லை. இந்த உண்மை அம்மா
யூன் ஜங்கிற்கு தெரியாது.
சியோன் ஹியூனின்
நிறுவனம், கிரோடாய்ட், போர் பிரபலமான யூன் ஜங்கின் அறிவை தற்காப்புக்கலை, போர் நுட்பங்களைப்
பயன்படுத்தி வீர ர்களை வடிவமைக்கிறது. ஆனாலும் கூட ஏதோ ஒரு இடத்தில் அவரின் சிந்தனை
தேங்குகிறது. இதன் விளைவாக அவர் சண்டையின் ஓரிடத்தில் தோட்டா பட்டு உயிரிழக்கிறார்.
இப்படி ஆவதற்கான காரணத்தை அறிய சியோன் ஹியூன் முயற்சிக்கிறார். அதில் வெற்றி பெற்றாரா
என்பது முக்கியமான காட்சி. அடுத்து, போர் செய்யும் செயல்பாட்டை நிறுத்தி யூன் ஜங்கின்
உருவத்தில் செக்ஸ் பொம்மைகள், வீட்டு வேலைகளை செய்யும் பொம்மையை உருவாக்க கிரோடாய்ட்
எனும் சியோன் ஹியூனின் நிறுவனத்தலைவர் முடிவெடுக்கிறார்.
கிரியேட்டிவ்
காமன்ஸ் போல ஒருவர் மூளையின் தகவல்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்
என டைப் சி உரிமத்தில் யூன் ஜங்கின் மூளை உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் நொந்து
போகும் சியோன் ஹியூன், அம்மாவின் மூளையிலுள்ள தகவல்களை கணினியில் அழித்துவிட்டு அவரைக்
காப்பாற்ற நினைக்கிறார்.
இதைத்தடுக்க
நிறுவனத்தில் உள்ள நிறுவனத் தலைவரின் ரோபோ கையாள் முனைகிறார். இந்த முயற்சியில் சியோன்
ஹியூன் வெற்றி பெற்றாரா என்பதுதான் படத்தின் இறுதிக் காட்சி.
ட்ரெய்ன்
டு பூசன் படத்தில் அப்பா, மகள் ஆகிய இருவருக்கும் இடையே ரத்தபாசம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
இதை செயற்கை அறிவை மையமாக கொண்ட இந்த படத்திலும் பார்க்கலாம். படத்தில் விசுவல் எபெக்ட்ஸ்
சிறப்பாக உள்ளன. அதைத்தாண்டி படத்தை பார்க்க வைப்பது அம்மா - மகளுக்கு இடையிலான பாச உணர்வுகளைத்தான். படத்தின்
இறுதியில் நடைபெறும் ரயில் சண்டைக்காட்சி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின்
இறுதிப்பகுதியைப் பார்த்தால் அடுத்த பகுதிகள் உருவாக்கப்படும் என்று தோன்றுகிறது.
படத்தில்
மகளாக நடித்துள்ள கங் சூ இயோன் கடந்த ஆண்டு
காலமாகிவிட்டார். அவர் நடிப்பில வெளிவந்த கடைசி திரைப்படம் இதுவே. எனவே, கொரிய மக்கள்
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் படத்தைப் பார்த்து வருகிறார்கள்.
அஞ்சலிக்காக
என்றில்லை. படம் அதனளவில் சிறப்பாகவே இருக்கிறது. மனிதர்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்கிறோம்
என்ற பெயரில் வணிகம் எப்படி சீர்குலைந்து நடைபெறுகிறது என்பதை காட்டியிருக்கிறார் இயக்குநர்.
படம் நெடுக
வரும் பாத்திரமான சியோன் ஹியூங், தனது அம்மாவை ஏதோ ஒருவகையில் மீட்டெடுக்க நினைக்கிறார்.
இதன் காரணமாக எப்போதும் யோசனையில் இறுக்கமாகவே இருக்கிறார். பாத்திரத்தின் தன்மைக்கு
இறுக்கம் சிறப்பாக பொருந்திப் போகிறது. தன் உணர்ச்சி எல்லைகளை அவர் கடந்து செயல்படுவது,
அம்மாவின் உருவத்தில் செக்ஸ் பொம்மைகளை நிறுவனம் தயாரித்து சோதிக்கும்போது, உச்சகட்ட
கோபம் கொண்டு சோதிக்கும் அதிகாரியை கழுத்தை
நெரிப்பது, அம்மாவைக் காப்பாற்ற நினைவுகளை
அழித்து அவரை வெளியே கொண்டு செல்லும் காட்சி… இதற்கு முன்னதாக, யூன் ஜங்கை சியோனின்
ஹியூனின் மேலதிகாரி கையை அறுத்து காலில் சுடும்போது அந்த முயற்சியை கண்ணீர் பெருக பார்த்து உடனே தடுத்து
நிறுத்தி அமைதியாக நிற்பது…
அன்னை மடி…
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக