மக்களின் நம்பிக்கையை பெறுவதே முக்கியம் - ஆனந்த் மகிந்திரா

 






மகிந்திரா நிறுவனம்






நேர்காணல்

ஆனந்த் மகிந்திரா


முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து பெரும்பாலான தொழில்கள் நடைபெறுகின்றன. இதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இதைப பற்றி தங்கள் கருத்து என்ன?

2007-2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. நிறைய பெரிய நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால் மக்களுக்கு பெரு நிறுவனங்கள் என்றாலே நம்பிக்கை வைக்க முடியாது என நம்பத் தொடங்கினர். பிறகுதான், மெல்ல நிலைமை மாறியது. கோவிட் -19 ஏற்பட்ட காலம் மீண்டும் நிறுவனங்களுக்கு சோதனையான காலகட்டம். பெரிய நிறுவனங்கள் நடப்பு நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவிப்பது சாத்தியமில்லை. இதில் சில நிறுவனங்களிடம்தான் டிவி சேனல் அல்லது பத்திரிகைகள் உள்ளன.  

 நிறுவனத்தின் தேவை, லட்சியம் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும். முதலீட்டாளர்களுக்கும் விளக்கி விடுவது நல்லது. இப்படி எதையும் கூறாதபோது மக்கள் நிறுவனங்களை நம்ப மாட்டார்கள். இதனால் தொழில் சரிவுக்கு உள்ளாகும். முதலீட்டாளர்களுக்கு செலவிட்ட பணம் திரும்ப கிடைக்காது. சில நிறுவனங்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் லாபம் பெற முயல்கிறார்கள். ஆனால் நீண்ட நோக்கில் அது மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் கூட  பயன் அளிப்பதாக இருக்காது.

அமெரிக்காவில் ஸ்பாட்டிஃபை நிறுவனத்தில் கூட ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள் அல்லவா?

 நிறுவனம் தனது இலக்கில் தெளிவாக இருந்தால் போதும். அப்போதுதான் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இப்படி செயல்படும்போதுதான்  நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு போட்ட பணம் திரும்ப கிடைக்கும். நோக்கம், தேவை ஆகியவற்றில் தெளிவாக இருந்தால் தினசரி வேலைக்கும் உங்கள் அலுவலக சகாவுக்கு கூட நம்பிக்கை  ஏற்படுத்தலாம்.அப்படியில்லாதபோது, அவர்களைக் கூட இலக்கை நோக்கி வேலை செய்ய வைக்க முடியாது.

மகிந்திரா  நிறுவனத்தின் தேவை திடீரென மாறியது ஏன்? புதிய மாற்றங்களை உருவாக்கியது ஏன்?

ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ இதழை படித்து வருகிறேன். அதில் நீங்கள்  எழுதிய தொழில் நிறுவனங்களின் கதை எனக்கு பிடித்தமானது. அதில்தான் சோனி என்ற நிறுவனம் எப்படி உருவானது, அதன் கதை, நோக்கம் ஆகியவற்றைப் படித்தேன். அந்த நிறுவனம் போல எங்களுக்கு குறிப்பிட்ட நோக்கம், இலக்கு, லட்சிய நோக்கு இல்லாததை உணர்ந்தேன். அப்போது எங்கள் நிறுவனத்திற்கு வந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர், நிறுவனத்தை பார்த்துவிட்டு செயல்பாடுகளை ஆராய்ந்தார். பிறகு, உங்கள்  நிறுவனம் பல்வேறு பொருட்களைத்  தயாரிக்கிறது. பணியாளர்கள் தனிப்பட்ட அளவில் திறமைசாலிகள்தான். ஆனால் அவர்கள் முழுமையாக ஒருங்கிணைப்பட்டு பணியாற்றவில்லை. அனைத்து விஷயங்களும் துண்டாக உள்ளன என்றார். அவர் சொன்னதை உள்வாங்கியபோது எனக்கு அது உண்மை என்று தோன்றியது. மகிந்திரா நிறுவனம் உருவானபோது, இருந்த நோக்கம் லட்சியம் வேறு. ஏறத்தாழ அதற்குப் பிறகு அதைப்போன்ற லட்சியம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அப்படித்தான் ரைஸ் என்ற சுலோகனை உருவாக்கினோம்.

அனைத்து  நிறுவனங்களும் தங்களின் நோக்கம், லட்சியம் ஆகியவற்றை சுவரில் ஒட்டி வைத்திருப்பார்கள். போட்டோவாக மாட்டியிருப்பார்கள். தங்களின்  நிறுவன ப்ரௌச்சரில் ஆண்டு  அறிக்கையில்  கூட அதை இணைத்திருப்பார்கள்.திடீரென சுலோகன் ஒன்றை உருவாக்கும் தேவை என்ன?

ரஞ்சய், இதற்கான பதிலை ஏற்கெனவே வேறு வடிவில் கூறியிருக்கிறேன். நாம் அனைவரும் தினசரி நிறுவனத்தின் வேலைக்கு சென்று வருகிறோம். நாம் மனிதர்கள் எளிதாக நோயுறலாம். இறந்து போகலாம். கோவிட் – 19 காலம் நமக்கு நம் வாழ்க்கை அந்தளவு நிலையானதில்லை என்பதை உணர்த்தி சென்றிருக்கிறது. கண்முன்னே  இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை சிதைந்து ஆவியாவதைப்  பார்த்தோம்.  ஒருவர் எதற்கு வேலைக்கு வரவேண்டும் என்பதற்கான பதிலையும், நிறுவனம இயங்குவதற்கான  தேவையையும்  நாம் கண்டுபிடிக்கவேண்டும். இல்லையென்றால் நிறுவனத்தை விட்டு பணியாளர்கள் விரைவிலேயே வெளியேறி சென்றுவிடுவார்கள்.

நிறுவனத்தின்  வேலை என்பது தனி, தனது தனிப்பட்ட வாழ்க்கை தனி என்ற பிரிவுகள் இருக்க கூடாது என நினைக்கிறீர்களா?

 பொதுவாக அனைவரும் அப்படித்தான் பிரிவினை செய்துகொண்டு அலுவலகம்  தனி, குடும்ப வாழ்க்கை  தனி என வாழ்கிறார்கள். மகிந்திராவில் நாங்கள் எளிய மக்களின் வாழ்க்கையை நேர்மறையாக மாற்றும் செயலைச் செய்ய நினைத்தோம். அலுவலகத்தில் வேலை செய்யும் பலரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பிறருக்கு உதவும் விஷயங்களை செய்துகொண்டிருந்தார்கள். ஏழை மக்களுக்கு மருத்துவ வசதிகள் செய்துதருவது, அடிப்படை வசதிகள் பெற உதவுவது, வாழ்க்கை மேம்பட பல்வேறு உதவிகளை வழங்குவது என இயங்கி வந்தனர். இப்போது மகிந்திரா நிறுவனமே இதுபோன்ற பல்வேற விஷயங்களை செய்வதால், பணியாளர்கள் எளிதாக இதில் இணைந்துகொள்ள முடியும்.

 எங்களது பணியாளர்  ஷாந்தனு,  ரைஸ் சுலோகனையொட்டி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியதால், மகிந்திரா  கிராம கடன் சேவை திட்டத்தை தொடங்கினார். அதில், அவர் கிராம மக்களுக்கு கடன்களைப் பெற்றுத் தந்து வீடுகளை கட்டும் திட்டத்தை சிறப்பாக செய்தார்.  அப்படி மக்களுக்கு அவர்  நிறுவனத்தின் வழியாக உதவுவது எங்களுக்கு பிடித்திருந்தது. 2002ஆம் ஆண்டு நாங்கள் வெற்றிகரமாக எஸ்யுவி மார்க்கெட்டில் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்திருந்தோம். 2002-2007ஆம் ஆண்டிற்குள்ளாக  நாங்கள் ஓரளவுக்கு நல்ல பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருந்தோம். பிறகுதான் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. எழுச்சி அல்லது உதயமாவது என நாங்கள் உருவாக்கிய செயல்பாடு முடிவில்லாத பயணம்.

வேலை, தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டும் ஒருவருக்கு சமநிலையாக இருப்பது முக்கியம். நீங்கள் வேலை செய்கிறீர்கள். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறீர்கள். அதற்கு நிறுவனம் உங்களுக்கு சம்பளம் தருகிறது. இது எப்போதும் நடக்கிற செயல்பாடு. ஆனால் நீங்கள் செய்யும் செயலால் எளிய மக்களின் வாழ்க்கை மாறுகிறது என்பது பலருக்கும் ஊக்கமூட்டும். தினசரி வேலைக்கு வருபவர்களை சலிப்புக்குள்ளாத பணியாக அவர்களை ஊக்கமூட்டுவதாக ரைஸ் திட்டத்தை வடிவமைத்து கொள்கைகளை உருவாக்கினோம். இந்த திட்டத்தை கூறியபோது, போர்டில் உள்ள உறுப்பினர்கள் எப்போதும் போல இன்னொரு புத்துயிர்ப்பு திட்டம் என கேள்விகள் கேட்காமல் ஏற்றார்கள்.  அவர்களுக்கும் மனதில் கேள்விகள் இருந்திருக்கும்.

மக்களின் தேவையை உணர்ந்துதான் செயல்பட வேண்டும். இதுபற்றி சந்தேகம் வந்தால் தொடக்க கால மகிந்திரா விளம்பரத்தை பார்த்துக்கொள்வேன். 1945ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது மகிந்திரா என்ற தனியார்  நிறுவனத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி என கூறப்பட்டிருந்தது.ஆனால் பிறகு காலம் நிறைய மாறியிருக்கிறது. அதற்கேற்ப மகிந்திராவும் மாற்றம் கண்டுள்ளது.

எழுச்சி – ரைஸ் என்பதை நிறுவனத்தில் எப்படி சாத்தியப்படுத்தினீர்கள்? ரைஸ் என்பதை நிறுவனத்தின்  செயல்பாடு, ஊழியர்களின்  குணம், இயல்பு என என்னென்ன விஷயங்கள் மேம்பட்டுள்ளன?

எழுச்சி என்ற மகிந்திராவின் கொள்கை  என்பதை  மனிதர்கள் தங்களுக்கு ஏற்றபடி கோணங்களுக்கு ஏற்றபடி புரிந்துகொள்வார்கள். மகிந்திரா நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவருக்கு எங்கள் வரலாறு, என்ன தேவைக்காக செயல்படுகிறோம் என்பதும் தெரிந்திருப்பதும் அவசியம். அப்படியல்லாதபோது,அவர்களால் மக்களிடம் மகிந்திராவின் வரலாறு பற்றியோ, அவர்களின் கதை பற்றியோ கூறமுடியாது. இதனால் மக்களிடம் நாம் நம்பிக்கையை உருவாக்க முடியாது. கொள்கை என்ற விஷயத்தில் இதுதான் நடைமுறை உண்மை.

வெறும் தகவல்கள் அறிக்கை என்று மகிந்திரா மட்டும செயல்பட்டிருந்தால் மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல் தோற்றிருக்கும் வாய்ப்பே அதிகம்.

நன்றி

பேராசிரியர் சஞ்சய் குலாத்தி

ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

கருத்துகள்