பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் தந்திர இளைஞர் கூட்டத்தை தேடும் போலீஸ்காரர்! 100 - சாம் ஆண்டன்
அதர்வா, ஹன்சிகா - 100 படத்தில் -இயக்கம் சாம் ஆண்டன் |
இயக்குநர் சாம் ஆண்டனின் 100 படத்தில் அதர்வா |
100
இயக்கம் சாம்
ஆண்டன்
அதர்வா, ஹன்சிகா,
ராதாரவி, ஆடுகளம் நரேன், யோகிபாபு
களத்தில்
வேலை செய்ய நினைக்கும் நாயகனை கட்டுப்பாட்டு அறையில் உட்கார வைத்தால் என்னாகும் என்பதுதான்
கதை.
காவல்துறையில்
வேலை பார்க்க நினைக்கும் நாயகனுக்கு கிடைக்கும் வேலை என்னமோ கட்டுப்பாட்டு அறையில்
அழைப்புகளை எடுத்து பேசுவதுதான். அந்த அழைப்புகளை வைத்து அவர் களத்தில் ரகசியமாக இறங்கி
பெண்களை விபச்சாரத்தில் இறக்கும் இளைஞர் கூட்டத்தை பிடித்து, குற்றவாளியை கொல்கிறார்.
படம் தொடக்கம்
முதலே ஆட்கள் காணாமல் போய் பிறகு கொலை செய்யப்பட்டு அந்த வழக்கு முடிந்ததாக காவல்நிலையத்தில்
முடித்துவைக்கப்படும் காட்சியோடு தொடங்குகிறது. இயக்குநர் சாம் ஆண்டன், படத்தில் பெண்களை
கடத்தி அதை காதல் போல நாடகமாடி அவர்களை விபச்சாரத்தில் தள்ளுவதை விரிவாக விளக்கியிருக்கிறார்.
இந்த கதையில்
கட்டுப்பாட்டு அறை, அதன் முக்கியத்துவத்தைப் பேசியிருக்கிறார்கள். அதுதானே படத்தின்
தலைப்பு. படத்தில் வரும் காதலை வெட்டி எடுத்துவிட்டால் எந்த சேதாரமும் இல்லை. படத்தின்
கதை அதுபாட்டிற்கு செல்கிறது.
படத்தில்
கவனம் கொடுத்து பார்த்து ரசிக்க வைப்பது எ ன்றால் விபச்சார தொழிலின் தலைவன் யார் என
நாயகன் அறிவதும், அவனை எப்படி பிடிக்கிறான் என்பதும்தான். இதற்கு சூப்பர் சுப்பராயனின்
சண்டைப் பயிற்சி நன்றாக உதவுகிறது. படத்தில் கட்டுப்பாட்டு அறை மேலாளரான வரும் ராதாரவி
நெகிழ்ச்சி தரும்படி நடித்திருக்கிறார். இறுதியில் அவர் கையில் துப்பாக்கி தருவது சரிதான்.
ஆனால் என்கவுண்டர்
கொலை எதற்கு என புரியவில்லை. சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். குற்றவாளி,
பாதிக்கப்பட்டவர்கள் என இருதரப்புக்கும் உரிமைகள் என்பதை சமமாக தருகிறது. இதில் பாகுபாடு
கிடையாது. சமகால அளவில் வலதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்தபிறகு பாலியல் வல்லுறவாளர்கள்
எளிதாக விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு இனிப்பு ஊட்டப்படுவது விரக்தியான காட்சிதான்.
ஆனால் அதற்கான திரைப்படத்தில் என்கவுன்டர் கொலையை நியாயப்படுத்துவது போல காட்டுவது
சரியான தன்மையாக இல்லை.
ஒருகட்டத்தில்
நாயகன், தான் காவல்துறை அமைப்பில் குற்றத்தை
தடுக்க இருப்பதை மறந்துவிட்டு தன் நண்பன் அன்வருக்காக பழிவாங்குவது போல காட்சிகள் நகர்கின்றன.
இறுதிக்காட்சி
சண்டையில் உரையாடல்கள் மிகவும் நீளமாக செல்கின்றன.
நம்பி வாங்க
நிச்சயம் ஏமாத்துவோங்க….
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக