சைக்கோபாத் வார்த்தை தோன்றிய வரலாறு

 












பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு உளவியலாளர் சைக்கோபாத் என்ற வார்த்தையை உருவாக்கி அதற்கான தற்போதைய பொருளைச் சொன்னார். அவரது பெயர் பிலிப்பெ பைனல். மனிதர்கள் செய்யும் தீய செயல் என சொல்லுவதிலிருந்து சற்று வேறுபட்டதாக பொருளைக் கூறினார்.

1941ஆம் ஆண்டு தி மாஸ்க் ஆப் சானிட்டி என்ற நூல் வெளியானது. இதை உளவியலாளர் ஹார்வி கிளெக்லி என்ற மருத்துவர் எழுதினார். இதில் அவர் தனது அம்மாவை  துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்று பிடிபட்ட சைக்கோபாத் பற்றி எழுதியிருந்தார். இவர் குறிப்பிட்ட நோயாளியின் பெயர் கிரிகோரி. இவர், ஏற்கெனவே பலமுறை தாக்குதல், கொலைமுயற்சி என சிறைக்கு சென்று வந்த குற்ற வரலாறு கொண்டவர்.  கிரிகோரிக்கு மருத்துவத்திலும் என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது என தெரியவில்லை. அப்படி சிகிச்சை அளித்தாலும் கிரிகோரிக்கு அது பயன்தருமா என்றும் தெளிவாகவில்லை. சமூக மதிப்புகளை புரிந்துகொள்ள முடியாதவர்களை சைக்கோபாத் என கூறலாம். அந்த வகையில் கிரிகோரி தனக்கு தெரிந்த விஷயங்களை புரிந்துகொண்டவற்றை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கு பிறரது வாழ்க்கை, உணர்ச்சிகள் பற்றி புரியுமா என்று எனக்கு தெரியவில்லை என எழுதியிருப்பார் மருத்துவர் ஹார்வி.

அமெரிக்கா, கனடா நாடுகளில் ஹார்வியின் நூலை உளவியல் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் வாங்கிப் படித்தனர். அதைப்பற்றி விவாதித்தனர். அன்று இந்த நூல் சைக்கோபாத்களைப் பற்றி அறிய உதவிய நூலாகும். சைக்கோபாத்களை வன்முறைக்கு தூண்டுவது எது என அறிய உளவியலாளர்கள் நினைத்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் ஹரே, 1960ஆம் ஆண்டு சைக்கோபாத் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினார். சிறையில் உள்ள கைதிகளைச் சந்தித்தால்தான் உண்மையான சைக்கோபாத் பற்றிய ஆய்வைச் செய்ய முடியும். ஆனால் கைதிகள் வெளியில் இருந்து வருபவர்களை நம்புவதில்லை. இந்த லட்சணத்தில் அவர்களின் கதையை எப்படி தெரிந்துகொள்வது?

ஆனால் அப்படியிருந்தாலும் ராபர்ட் வங்கி கொள்ளையர் ஒருவரை பேசி சம்மதிக்க வைத்து, பிற கைதிகளை அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றார். கைதிகள் தங்களது அனுபவங்களை ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுதிதக் கொள்வார்கள் என என ராபர்ட் நினைத்தார். உளவியல் சோதனைகளை மனநல குறைபாடு கொண்ட சைக்கோபாத்கள் எளிதாக மாற்றிவிட முடியும். இப்படி துணிச்சலாக அறிக்கைகளை மாற்றிய கைதிகளையும் ராபர்ட் ஹரே தனது அனுபவத்தில் பார்த்திருக்கிறார். தனது ஆராய்ச்சி மாணவர்களுன் பத்தாண்டுகள் உழைத்து சைக்கோபாத் பற்றிய ஆய்வைச் செய்தார். இதன் முடிவில்தான் சைக்கோபதி செக்லிஸ்ட்டை உருவாக்கினார். இந்த ஆய்வுமுறையை உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், சங்கங்கள் ஏற்றன. இன்றும் கூட இதை பயன்படுத்தி மனநல குறைபாடு உடையோரை அடையாளம் கண்டு, சிகிச்சை செய்து வருகின்றனர்.

இப்போது வழக்கு ஒன்றைப் பார்ப்போம்.

கால் என்பவர் வயதான பெண்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவர்களை ஏமாற்றுவார். ஏமாற்றுவார் என்பதை நான் இங்கு கூறுவது பொருளாதார அடிப்படையில்தான். இவர் பல்வேறு கிளப், பப்களுக்கு செல்வார். அங்கு உள்ள செழிப்பான ஆனால் சரியான துணை கிடைக்காத விதவையாக வாழும் பெண்களைக் குறிவைப்பார். அந்த பெண்களுடன் பழகி காதல் கொண்டு காமம் பழகி பிறகு அந்த பெண்ணின் செக் புக்கை குறிவைத்து காசை கொள்ளையடிப்பார். ஒரு பெண்ணுடன் எத்தனை நாட்கள்தான் இருப்பது என அடுத்தடுத்த பெண்களைத் தேடி சென்றுவிடுவார். இவரை அமெரிக்க காவல்துறை பிடித்து பத்தாண்டு சிறையில் அடைத்தது. நான் என்ன தவறு செய்தேன். தனிமையில் இருந்தவர்களுக்கு துணையாக இருந்தேன். அவர்களிடம் பேசினேன். சில சமயங்களில் காலையில் எழக்கூட மனம் வராதபடி படுக்கையில் பெண்களுடன் இருந்திருக்கேன் என்றார் கால். இப்படி அவர் இருந்த காரணத்தால் நிறைய பெண்கள் அவருக்கு கார், வீடு என நிறைய பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள்.


கருத்துகள்