இடுகைகள்

ரென் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றச்சாட்டுகளை பூமாரி போல எதிர்கொண்ட ஹூவாய் நிறுவனர் ரென் - பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் மின்னூல் வெளியீடு

படம்
    அமெரிக்க அரசால் தேச துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனம்தான். ஆனால் அதன் வெற்றி என்பது எளிதாக வரவில்லை. அதன் நிர்வாக கொள்கைகளை வகுத்தவர், ரென். நிறுவனத்தின் ஆன்மிகத் தலைவரும் அவர்தான். எப்படி ஜெயித்தார் என்பதை பல்வேறு சம்பவங்களை விளக்கி சற்று எளிமையான முறையில் சுருக்கமாக சொல்லும் நூல்தான் இது. வளவளவென சுற்றி வளைக்காமல் என்ன விஷயமோ அதைப்பற்றி மட்டுமே கவனப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இதனால் போனில், டேபில் படித்தாலும் வேகமாக வாசிக்க முடியும். இது தொழில்நுட்ப ரீதியான சாதக அம்சம். இதைத்தாண்டி ரென் எப்படி ஹூவாவெய் நிறுவனத்தை கட்டமைத்தார். பன்னாட்டு உலக நிறுவனமாக அதை மாற்றினார் என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.  ஆசியாவில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு நிறுவனம் வெற்றி பெறுவது எளிதல்ல. இன்றும் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அதிக விலை கொண்ட ஆப்பிளுக்கு நிகரான தரத்தைக் கொண்டுள்ளன. இப்படியொரு வளர்ச்சி எப்படி சீனத்துக்கு சாத்தியமானது என்பதையும் ரென் நூலில் கூறியுள்ளார். இப்படி ஆசியாவில் உள்ள இந்தியாவுக்கு அண்டை நாடான சீனாவை புரிந்துகொள்வதன் மூலம் நான் முன்னேற வேண்டிய பாதை தெ

காப்புரிமைப் போர்!

படம்
    நிறுவனத்தை முதன்முதலில் ஸ்டார்ட்அப்பாக தொடங்குபவர், அதற்கான கொள்கை, லட்சியத்தை உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் சுமப்பார். மற்றவர்கள் இதை அப்படியே பின்பற்றுவார்கள். அந்த வகையில் ஹூவாவெய் நிறுவனத்தில் புகழ்ச்சிக்கு எந்த மரியாதையுமில்லை. உழைத்தே ஆகவேண்டும். தங்களை நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு உண்டு. நிறுவனத்தின் பங்குகளும் கூடுதலாக வழங்கப்படும்.   நிறுவனம் எதற்கு தொடங்கப்படுகிறது? அதன் லட்சியம் என்ன? நினைத்த லட்சியத்தை சாத்தியப்படுத்துமா என்பதற்கான பதில்களே தேடிக் கண்டுபிடிப்பது முக்கியம். அப்படி இல்லாதபோது நிறுவனம் விரைவில் டைட்டானிக்காக தொழில்துறையில் சவால்களை சந்திக்க முடியாமல் மூழ்கிவிடும். இந்த வகையில் ஹூவாவெய் தனது இலக்குகளை அறிந்தேயுள்ளது என்றார் ரென். அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கவேண்டும் என்பதுதான் ஹூவாவெய்யின் லட்சியம்.   அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு காரணமாக குவால்காம், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் மென்பொருள், வன்பொருள் சேவைகளை ஹூவாவெய்யிடமிருந்து விலக்கிக்கொண்டனர். இதனால் உங்களுக்கு நஷ்டம்தானே என சிஎன்பிசி சேனல் பேட்டியில்

வெளிநாட்டில் தேடிய வணிக வாய்ப்புகளும், சவால்களும்!

ஹூவெய் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என இருப்பது ரென் கிடையாது. ரிலையன்ஸின் திருபாய் அம்பானி போன்ற டெக்னிக்தான். ஊழியர்கள் தான் உரிமையாளர்கள். மொத்தம் 1 லட்சம் பேர். அவர்களின் பெயர்களைக் கூட பொறித்து வைத்திருக்கிறார். 1987ஆம் ஆண்டு ஐந்து நண்பர்கள் ஹூவெய் நிறுவனத்திற்கு முதலீடு செய்தனர். பிறகு 2000ஆம் ஆண்டிற்குள் தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டனர்.    அமெரிக்காவில் முக்கியமான நிறுவனம் ஏடி அண்ட் டி. இந்த நிறுவனத்தின் பெல் லேப்ஸில் ஆய்வு செய்து ஏராளமான காப்புரிமைகளை பெற்று வந்தனர். இவர்களின் துணை நிறுவனமாக லூசென்ட் டெக்னாலஜி என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கப்ப்பட்டது. 1996ஆம் ஆண்டு தொடங்கிய  இந்த நிறுவனம், 2006ஆம் ஆண்டு தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. இத்தனைக்கும் எம்ஐடியின் சிறந்த நிறுவனத்திற்கான விருதை இரு ஆண்டுகள் தொடர்ச்சியாக பெற்ற நிறுவனம் தான் லூசென்ட் டெக்னாலஜி.   பின்னாளில் சரிவை தடுத்து நிறுத்த அல்காடெல்லுடன் லூசென்ட் டெக்னாலஜி சேர்க்கப்பட்டது. ஆனாலும் பயனில்லை. நஷ்டப்பட்டு திவாலாகும் வங்கியை, நன்றாக இயங்கும் வங்கியோடு சேர்த்தால் அது சிறந்த ராஜதந்திரமாகுமா என்ன? அப்ப

நோக்கத்தை தொலைத்தால் அவ்ளோதான்!

படம்
  ஐரோப்பிய பாணி ஹூவெய் அலுவலகம், டாங்குவான் நகரம், சீனா 2019 படி படம் - LA Times தொழிலைத் தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தொழில் முதலீடு என்பது பல்வேறு வாய்ப்புகளைக் காட்டும். இதில் சரியாக மனதை கட்டுப்படுத்தி செயல்படாதபோது சூதாட்டத்தில் இந்த முறை இந்தமுறை என அனைத்து பணத்தையும் சூதாடி தொலைப்பது போன்ற சூழல்தான் உருவாகும்.   இதைப்பற்றி ரென், நான் லாஸ் வேகாஸ் நகருக்கு செல்வேன். சூதாட்ட கிளப்புகளுக்கு சென்றால் கூட அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கவே செல்வேன். நான் சூதாடியது கிடையாது. அப்படி மனம் விரும்பினாலும் அதை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்று சொன்னார்.   சீனாவில் யூடிஸ்டார்காம் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் இருந்தது. அப்போது ஜப்பானில் நடைமுறையில் இருந்த பிஹெச்எஸ் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவை வழங்கியது.சீனாவில் பிஹெச்எஸ் தொழில்நுட்பம் புதிது, போட்டி  நிறுவனங்கள் இல்லை ஆகிய காரணங்களால் நன்றாக இயங்கியது. ஆனால் ஆராய்ச்சி, புதுமை இல்லாத காரணத்தால் கிடைத்த லாபம் காலப்போக்கில் குறைந்து பத்தாண்டுகளுக்குள் நிறுவனம் நஷ்டத்தில் வீழ்ந்து மூடப்பட

வாடிக்கையாளர்களை உருவாக்குவதே நிறுவனத்தின் சாமர்த்தியம்!

படம்
  வாடிக்கையாளர் தான் தெய்வம்!   அண்மையில் ஊடகவியலாளர் கோகுலவாச நவநீதன் ஒரு புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், மளிகை கடை ஒன்றில் வாடிக்கையாளர்களே தெய்வம். தெய்வத்திற்கு கடன் கொடுக்கும் தகுதி எனக்கில்லை எழுதியிருந்தது. இந்த வாசகத்தை எளிமையாக கடன் கிடையாது என்று எழுதலாம். ஆனால்  என மளிகை கடைக்காரர் கிரியேட்டிவாக யோசித்து வாடிக்கையாளரையும் உயர்த்திப்பிடித்து, தனது கடன் கிடையாது கொள்கையையும் சொல்லிவிட்டார்.   ஹூவெய்யின் வணிக சூத்திரமே இதுதான். ரென்  நடத்தும் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவை தொடர்பானது. தினசரி ஏராளமான கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் நடக்கும் துறை. இதில் எப்படி அவர் வாடிக்கையாளர்களை பொருட்படுத்தாமல் இருக்க முடியும். அப்படி செய்தால், அவரது நிறுவனம் விரைவில் வீழ்ந்துவிடும் அல்லவா? இந்த வணிக கொள்கைக்கு பெயர்தான் கஸ்டமர் சென்ட்ரிசிட்டி.   வாடிக்கையாளரின் சூழல், குணம், தேவை புரிந்து பொருட்களை தயாரித்து வழங்குவது. இதைத்தான் ஹூவெய் ரென் தனது ஊழியர்களுக்கு வகுப்பெடுத்து சொல்லித் தருகிறார். அதிக மாறுதல்களை சந்திக்காத அணுசக்தி துறையில் சில முதலீடுகளை ரென் செய்துள்ளார

தோல்வியைக் கண்டு பயப்படாத மனோபாவம்!

படம்
  தோல்வியை நோக்கி திட்டமிடுவோம்!   தலைப்பிலுள்ளதைப் போல ஒருவர் கலந்துரையாடலில் பேச முடியுமா? ரென் அப்படித்தான் பேசினார். எதிர்காலத்தில் ஒருநாள் நாம் தோல்வியை சந்திக்கப் போகிறோம். எனவே, முன்கூட்டியே நாம் அதற்கு தயாராக இருப்போம் என்று பணியாளர்களிடம் பேசினார்.   நடிகர்களைப் பற்றி உலகத்தமிழர்  தேசிய நாளிதழ்களில் என்ன எழுதுவார்கள்? அவரே தன் கையால் தானே சொகுசு கார் கதவைத் திறந்தார். அவரே சோடாவை தன் கையில் வாங்கிக் குடித்தார். பிரியாணி லெக்பீசை தன் வாயால் தானே மென்றார் என எழுதுவார்கள். ரென்னைப் பொறுத்தவரை இப்படி யாராவது நிறுவனரை அல்லது அதிகாரிகளை புகழ்ந்தால் வீட்டுக்குச் சென்று வேறு வேலையைத் தேடுங்கள் என அனுப்பிவிடுவார்.   ரென்னைப் பொறுத்தவரை தனது வேலைகளை தானே செய்வதுதான் அவருக்குப் பிடித்தமானது. மூன்றுமணிநேர விமானப் பயணம் என்றால் கூட அவருக்கு புத்தகம் ஏதாவது இருந்தால் போதும். அதைப்படிப்பார். இடையில் ஒரு முக்கல் முனகல் கூட இருக்காது. ஏதாவது சந்திப்பு இருந்தால், நகரிலுள்ள ஹூவெய் அலுவலகத்திற்கு கூட சொல்ல மாட்டார். நேரடியாக யாரை சந்திக்கவேண்டுமோ அங்கேயே வாடகை டாக்சியைப் பிடித்துப் போய்விடுவார்

இடர்பாடுகளை தகர்த்தெறிந்த ஹூவெய் - நிறுவனம் வளர்ந்த கதை!

படம்
The Huawei Story Book by Tian Tao and Wu Chunbo ஹூவெய் அமெரிக்காவில் ஏராளமான இடையூறுகளை சந்தித்து வருகிற நேரம். எங்களுக்கு ஆச்சரியம். எப்படி இத்தனை பிரச்னைகளையும் சமாளித்து இந்த நிறுவனம், சந்தையின் தேவைகளையும் பூர்த்தி செயகிறது என கேள்விக்கான விடைகளைத் தேடியபடி இருந்தோம். அப்போதுதான் ஹூவெய் ஸ்டோரி நூல் எங்களுக்கு கிடைத்தது.  உண்மையில் ஹூவெய் நிறுவனரே எழுதிய நூல் போல உருவாக்கப்பட்டுள்ளது. காரணம், அவரின் தனிப்பட்ட ஆளுமை, தொடக்க கால ஹூவெயின் கஷ்டங்கள், ஊழியர்கள் ராஜினாமா, சீர்திருத்தங்கள், ஊடகங்களின் பாரபட்ச போக்கு என அத்தனையையும் வெளிப்படையாக பேசியுள்ளனர்.  நிறுவனர் ரென், ஹூவெய் நிறுவனம் இன்று தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. ஏறத்தாழ பெல் லேப்ஸ் முன்னர் செய்தது போல.அதில் 23 ஆயிரம் கண்டுபிடிப்புகள் உலகமெங்கும் விருதுகளைப் பெற்றவை.  ஆனால் என்ன வித்தியாசம் என்றால், ரென் தன் நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்துவிடலாம் என கவனமாக இருக்கிறார். அதனால் அதனை முன்கூட்டியே தன் குழுவினரிடம் கூறியும் விடுகிறார். இப்படி தொலைநோக்கான