இடுகைகள்

உண்ணாநோன்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியை மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் - சோபன் ஜோஷி

படம்
                 மாணவர்களிடத்தில் காந்தியை கொண்டு போய் சேர்ப்பது எப்படி?   சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி இன்றுவரை காந்தி இந்தியாவில் பேசுபொருளாகவே இருக்கிறார் . அவரை நேரடியாக வாழும் மனிதராக பார்க்க முடியாவிட்டாலும் தினசரி வாழ்க்கையி ல் எளிதாக சந்தித்து விடலாம் . அவரை ரூபாய் நோட்டுகளில் , சாலைகளின் பெயராக , குப்பைகளை அள்ளும் திட்டத்தில் காந்தி இருப்பார் . அவரின் வட்டமான கண்ணாடி இருக்கும் ., நேர்மை , உண்மை என்று பேசப்படும்போதும் காந்தியை தவிர்த்து வேறு யாரை நாம் கூறிவிடமுடியும் . இன்று வாட்ஸ் அப் மூலம்தான் பலரும் செய்திகளை அறிகிறார்கள் . அதை வைத்தே அனைத்தையும் தெரிந்துகொண்டதாக நினைக்கிறார்கள் . இந்தியாவைக் கட்டமைத்தவர்களை நாக்கு வளைந்த வரை அவதூறு பேசுகிறார்கள் . குற்ற உணர்வேயின்றி , சுய லாபத்தை முன்னிறுத்தி செயல்படுகிறார்கள் . மனிதர்கள் பலவகை . அப்படித்தான் இருப்பார்கள் . இன்று வலது சாரிகள் தங்களது ஆட்சியில் காந்தியை பல்வேறுவிதமாக விவாதப் பொருளாக்கி அவரை ஓரங்கட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள் . அது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை . அவர் எழுதிய பேசிய எழுத்துகளே நூற

கருத்துகளால் வேறுபட்டாலும் இந்தியாவுக்கான முன்நின்ற நேரு, காந்தி! - ஜவகரும் காந்தியும் - வெ.சாமிநாதசர்மா

படம்
  நேரு, காந்தி ஜவகரும் காந்தியும் வெ.சாமிநாதசர்மா இந்த நூல் கொஞ்சம் பழமையானதுதான். இதை இப்போது படிப்பதற்கு முக்கியமான காரணம், பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவர்கள் கருத்தியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அவர்கள் ஒற்றுமையாக இல்லை என்று சில மதவாத கூட்டங்கள் பிரசாரம் செய்து வருகின்றன.  இதில் பாதி மட்டுமே உண்மை. ஒருவரின் சிந்தனை இன்னொருவருடன் ஒத்து வரலாம். ஆனால் அப்படியே பிரதி எடுத்தது போலவா இருக்கும்?சாமிநாத சர்மா இந்த நூலில் காந்தி, நேரு ஆகிய இருவரின் ஒற்றுமை, வேற்றுமைகளை அழகாக பிரித்து எழுதி இருவரின் லட்சியம் எதை நோக்கியது என்பதையும் எழுதியுள்ளார்.  சுதந்திர இந்தியா என்பதுதான் காந்தி, நேரு ஆகிய இருவரின் லட்சியம். ஆனால் அதை நோக்கிய பயணத்தில் இருவரின் கருத்துகளும் எப்படி இருந்தன என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மதம், அரசியல், வளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கை ஆகியவற்றைப் பொறுத்தவரை காந்தி, நேரு ஆகியோரின் வாழ்க்கைப் பார்வை வேறுபட்டது. இதனை நேரு காந்தியின் காலத்திலேயே அவரிடமே கூறியுள்ளார்.  ஒருவகையில் காந்தி, தனது கருத்துகளை அனுபவங்கள் வழியாக மேம்படுத்திக்கொண்டே இருந்தார். ந