இடுகைகள்

கலவரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்துத்துவா எனும் கருத்தியலை குறுகிய மனத்துடன் சுயநலனிற்கு பயன்படுத்துபவர்களைப் பற்றி விளக்கும் நூல்!

படம்
  நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர் கிழக்கு பதிப்பகம் 341 பக்கங்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் எழுதிய நூலை வலதுசாரி கருத்தியல் கொண்ட கிழக்கு பதிப்பகம் ஏன் வெளியிட்டுள்ளது என வாசகர்களுக்கு சந்தேகம் எழலாம். அதற்கான பதில் தலைப்பிலேயே உள்ளது.  இந்துமதம் எப்படிப்பட்டது, அதில் உள்ள தன்மைகள் என்ன, அதற்கு உழைத்த ஆதிசங்கரர்,ராமானுஜர் ஆகியோரின் பங்களிப்பு, சங்கரர் உருவாக்கிய மடங்கள், அதன் பணிகள், நிறுவன மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என முதல் பகுதி விளக்குகிறது. இதற்குப்பிறகு சசி தரூர் விளக்குவது இந்துத்துவா என்ற கொள்கையை உருவாக்கிய சாவர்க்கர், அதை மேம்படுத்திய கோல்வால்கர், ஹெட்கேவர் ஆகியோர் எப்படி அதை குறுகிய நோக்கத்தில் பார்த்து மக்களின் மத நம்பிக்கையை சுயநலனிற்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார்.  இங்குதான் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்பின் செயல்பாடு உள்ளே வருகிறது. கலாசார தேசியம் என்ற பெயரில் நிறுவன மதங்கள் போலவே இந்து மதத்தை எந்தெந்த வழிகளில் மாற்ற முயல்கிறார்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நூலை தொடக்கத்தில் படித்தது, இ

பால்புதுமையினரான மார்ஷா கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன?

படம்
  மார்ஷா பி ஜான்சன் கொல்லப்பட்டது ஏன்? 1992ஆம் ஆண்டு, ஜூலை ஆறாம்தேதி நாற்பத்து ஆறு வயதான மார்ஷா ஹட்சன் ஆற்றில் பிணமாக மிதந்தார். அப்போதுதான் பால்புதுமையினருக்கான நகர பேரணி நியூயார்க்கில் நடைபெற்று முடிந்திருந்தது. பால்புதுமையினரன மார்ஷாவின் இறப்பை காவல்துறை தற்கொலையாகவே கையாண்டது. ஒரு கும்பல், மார்ஷாவை அடிக்க துரத்திச் செல்வதை மக்கள் பார்த்து சாட்சி சொன்னபிறகே அவரின் தலையின் பின்புறம் அடிபட்டிருந்ததை போலீசார் கவனித்தனர். பிறகுதான் தற்கொலைக்கோண விசாரணை மாறி, கொலை என்ற ரீதியில் விசாரிக்கத் தொடங்கினர். ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணியான மார்ஷா, பால்புதுமையினரின் உரிமைக்காக போராடியவர். ஸ்டோன்வால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தோழி சில்வியா ரிவேராவுக்கு உதவியவர். சில்வியா 2002ஆம் ஆண்டு காலமானார். இவருடன் சேர்ந்து மார்ஷா ஸ்ட்ரீட் டிரான்ஸ்வெஸ்டைட் ரிவெல்யூஷனரிஸ்   - ஸ்டார் என்ற அமைப்பை   தொடங்கினார். இந்த அமைப்பு நியூயார்க் நகரில் வீடற்று தெருவில் திரியும் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்கானது. 2021ஆம் ஆண்டு மார்ஷாவின் நேர்காணல் பே இட்   நோ மைண்ட் என்ற ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டு வெளியானது. அதில், நீங்

பிரிவினை காயங்களை ஆற்ற முயன்ற காந்தி!

படம்
  காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியாகிரகத்தின் இந்திய முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார் . ஆனால் வெளிநாட்டில் பெற்ற வெற்றபோல உடனே இங்கு வெற்றி கிடைக்கவில்லை . 1930 ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராடியபோது மக்கள் ஆங்கிலேயர்களை அடித்து வன்முறையை உருவாக்கிய சம்பவங்கள் நடந்தன . இயக்கத்தைத் தொடங்கிவிட்டோம் எனவே , அப்படியே நடத்தி சுதந்திரத்தைப் பெறுவோம் என காந்தி நினைக்கவில்லை . போராட்ட அமைப்பைத் தொடங்கி திடீரென இடையில் போராட்டத்தை நிறுத்துவது தனக்கு அவமானம் என காந்தி நினைக்கவில்லை . தான் நினைத்த வடிவில் போராட்டம் நடைபெறவேண்டும் என பிடிவாதமாக இருந்தார் . இதன் விளைவாக சிலமுறை தான் தான் நடத்த்திட்டமிட்ட போராட்டங்களை நோக்கம் நிறைவேறும் முன்னரே நிறுத்தியிருக்கிறார் . பிறரைப் புரிந்துகொண்டு மக்களின் நலன்களை முன்னிறுத்த காந்தி முயன்றார் . அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் . தோல்வியும் அடைந்திருக்கிறார் . நீதிமன்றத்தில் வாதிட முடியாமல் தனது சக வழக்குரைஞர்களிடம் வழக்காடுவதற்கு கோரியவர்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி பேசினார் . அவர்களையும

காந்தியும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குமான முரண்பாடு!

படம்
  வைரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் . அறிவியல் அடிப்படையில் அது சிக்கலான கார்பன் அணுக்களைக் கொண்டது . பல்வேறு அழுத்தங்களைத் தாங்கி உருவாகிறது . அதனை பட்டை தீட்டும்போது வைரமாக மாறுகிறது . காந்தியும் கூட அப்படிப்பட்ட இயல்புகளைக் கொண்டவர்தான் . அவரும் வைரத்தை ஒத்தவர்தான் . காந்தியும் பல்வேறு வாழ்க்கைச் சூழல்களை சந்தித்து நெருக்கடியில்தான் சிறந்த மனிதராக தலைவராக மாறினார் . தனது கொள்கை , செயல்பாடுகள் , செயல்பாடுகளை செய்யும்போது நேர்ந்த தவறுகள் என அனைத்தையுமே நூலாக பதிவு செய்துள்ளார் . பழமையான இந்தியாவில் இருந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து காந்திக்கு கருத்துகள் இருந்தன . அவற்றை எதிர்தரப்பிடமும் , மக்களிடமும் முன்வைத்துக்கொண்டே இருந்தார் . இதற்காக இந்தியன் ஒப்பீனியன் , யங் இந்தியா , நவஜீவன் , ஹரிஜன் ஆகிய பத்திரிகைகளைப் பயன்படுத்திக்கொண்டார் . இதைத் தாண்டியும் அவர் உலகிற்கு கூறும் செய்தி என்ன என்று கேட்டபோது , என்னுடைய வாழ்க்கை தான் என்று பதில் சொன்னார் . பிரிவினைவாதத்தை பல்வேறு வடிவங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படுத்தி வருகிறது . ஆனால் வெளிப்படையான செய்திகளில் பார்த்தால் , இந்த அமைப்பு கல

இந்தியாவில் பரவும் வெறுப்பெனும் நச்சு! - நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்

படம்
  வெறுப்பு மதவாத பேச்சு வாக்குவங்கி அரசியலுக்காக வெறுப்பு அரசியல் மக்களின் மனதில் செலுத்தப்பட்டு வருகிறது. மதவாத வெறுப்பு இந்தியாவை இதுவரை யாரும் பார்த்திராத முறையில் மாற்றி வருகிறது.  என்னை இந்தியா டுடே ஆசிரியர், பிரிவினை அந்தளவு ஆழமாக இருக்கிறதா என்று கேட்டார். மதவாத வன்முறை, படுகொலைகள், பசு பாதுகாப்பு தாக்குதல்கள் ஆகியவற்றை நான் உடனே நினைவுபடுத்தவில்லை. இப்போது கர்நாடகத்தில் நடைபெறும் ஹிஜாப், ஒலிப்பெருக்கி பிரார்த்தனைகள், ஹலால் முறை இறைச்சி ஆகியவற்றையும் கூட நான் நினைக்கவில்லை. பிரிவினை பாதிப்பை நேரடியாக எனது அனுபவத்தில் உணர்ந்த மூன்று சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.  சசிதரூர் 1 ஜெய்ப்பூரில் நான் தங்கநிற முடிக்கற்றை கொண்ட லெபனான் நாட்டுப் பெண்ணை சந்தித்தேன். அவர் இந்தியாவுக்கு கைவினைப் பொருட்கள் வணிகத்திற்காக 15  ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கிறார். வெளிநாட்டினராக இருந்தாலும் அவரை மக்கள் வரவேற்று பேசுவது வழக்கம். அவரது பெயர் நூர், இதற்கு வெளிச்சம் என்று பொருள். என்ன அழகான பெயர் என்று கூறி பேசியிருக்கின்றனர். ஆனால் இப்போது நூர் என்றால், நீங்கள் முஸ்லீமா என்று முதல் உரையாடலிலேயே வார்த்தையிலே

மதம் சார்ந்து மக்களை புறக்கணித்தால் பொருளாதார வளர்ச்சி கிடைக்காது! ப.சிதம்பரம்

படம்
  ப.சிதம்பரம் எம்.பி. ராஜ்ய சபா காங்கிரஸ் அரசு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார சீர்திருத்தங்களை அமல் செய்தது. இப்போது அதன் நிலை பற்றி தங்கள் கருத்து என்ன? கடந்த முப்பது ஆண்டுகளாக பொருளாதார சீர்த்திருத்தங்களால் நிறைய ஏற்ற இறக்கங்கள் நடைபெற்றுள்ளன. முக்கியமான சீர்திருத்தங்கள் வந்துள்ளன. சில மோசமான முடிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2004-2010 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக ஏற்பட்டுள்ளது. 2018-2021 வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி தடைபட்டுள்ளது. நான் சீர்த்திருத்தங்கள் பற்றிய கலவையான எண்ணங்களைக் கொண்டுள்ளேன். அரசு இப்போது பொருளாதார வளர்ச்சி மீது கவனம் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.  இப்போதுள்ள மத்திய அரசு தேர்தலுக்காக மக்களை பிரிப்பது, பிரிவினைவாத த்தை ஆதரிப்பது என செயல்பட்டு வருகிறது. மக்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் அரசு பொருளாதார சீர்திருத்தங்களை செய்யவேண்டாம் என நினைக்கிறார்கள். முழு நாட்டில் உள்ள மக்களுமே வறுமை சூழலில் பயத்துடன் புறக்கணிப்பட்டவர்களாக  வாழ்ந்து வருகிறார்கள்.  கடந்த முப்பது ஆண்டுகளில் வருமானம் அதிகரித்துள்ளது. அதேசமயம் குவிகிற செல்வத்தினால் பாகுப

ஏழு ஆண்டுகளில் நொறுங்கிப்போன குடியரசு நாடும், அதன் அமைப்புகளும்!

படம்
              தேசிய ஜனநாயக கூட்டணி ஏழு ஆண்டுகளை ஆட்சியில் கடந்துள்ளது . அதில் நிறைய விஷயங்களை சாதித்துள்ளதாக பெருமையாக பிரசாரம் செய்து வருகிறது . ஆனால் பணமதிப்புநீக்க செயல்பாட்டிற்கு பிறகு பொருளாதாரம் தடுமாறி வருகிறது . ஆத்மாநிர்பார் எனும் சுயசார்பு திட்டம் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளின் இறக்குமதியை சார்ந்து நிற்பது தடுக்கப்படும் என அரசு கூறியது . ஆனால் இதில் இந்தியா வெல்லவில்லை . வென்றது கொரோனாதான் . இந்தியப் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் நிற்கிறது . கடந்த ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி நான்கு சதவீதத்தில் இருக்கிறது . 2013-14 காலகட்டத்தில் பொருளாதாரம் 1.85 டிரில்லியன் டாலர்களாக இருந்தது . சீனாவை ஒப்பிட்டால் அவர்கள் 16.64 டிரில்லியன் டாலர்களாக இருந்தது . சேமிப்பு , செலவு செய்யும் அளவு வேலைவாய்ப்பு என அனைத்துமே பாதிக்கப்பட்டிருந்தது . வேலையின்மை அளவு கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருந்தது . தனிநபர் வருமான அளவும் கூட 5.4 சதவீதமாக குறைந்துவிட்டது . பொதுநிறுவனங்களை விற்கத் தொடங்கியதால் பட்ஜெட்டில் பற்றாக்குறை சதவீதம் அதிகரித்து வருகிறது . இதன

தேச பாதுகாப்பு சட்டம் என்பது பசுக்கொலைகளை உள்ளடக்கியது அல்ல! முன்னாள் நீதிபதி கோவிந்த் மாத்தூர்

படம்
            கோவிந்த் மாத்தூர் , முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் , தேர்தல் ஆணையத்தின் மீது கொரோனாவை பரப்பிய காரணத்திற்காக வழக்கு பதியவேண்டும் என்று கூறியுள்ளதே ? நீங்கள் நீதிமன்றம் இயங்கும் விதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் . நீதிமன்றம் சொல்லும் ஒவ்வொரு வாக்கியங்களையும் ஆராய்ந்தால் கடினமாகவே இருக்கும் . நீதிமன்றங்கள் இப்படி கூறுவது இயல்பானதுதான் . இதனை தலைப்புசெய்தியாக ஊடகங்கள் மாற்றுகின்றன . ஆனால் இதனால் முக்கியமான விஷயங்கள் மக்களின் கவனத்திற்கு வராமல் போகின்றன . நீதிபதிகள் தங்கள் வரையறைகளைத் தாண்டி நடந்துகொள்கிறார்கள் என்று புகார்கள் கூறப்படுகின்றனவே ? உயர்நீதிமன்றம் இப்படி நடந்துகொள்வதாக தெரிந்தால் உடனே உச்சநீதிமன்றத்தை அணுகலாம் . அதில் எந்த தவறும் இல்லை . நீதிமன்றங்கள் நடந்துகொள்வதற்கான விதிமுறைகள் உள்ளன . தவறுகள் கண்டறியப்பட்டால் அவை மெல்ல சரிசெய்யப்படுவது உறுதி . பெருந்தொற்று காலத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடு எப்படியிருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் ? அவர்களின் பணி என்ன ? அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளைக் காப்பதுதான