முகமறியும் சோதனை - இந்திய அரசின் புதிய முயற்சி!
முகமறியும் சோதனையை ஆதரிக்கலாமா? இந்தியாவில் முகமறியும் சோதனை ஆந்திரத்திலுள்ள ஹைதராபாத் நகரில் அறிமுகமாகி உள்ளது. விமானநிலைய பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜூலை 1 முதல் ராஜீவ்காந்தி சர்வதேச விமானநிலையத்தில் முகமறியும் சோதனை பரிசோதனை முறையில் தொடங்கியுள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்துவதில் தன்னார்வமாக 250 பேர் இணைந்துள்ளனர். பெங்களூருவிலுள்ள கெம்பகௌடா விமானநிலையம், போர்ச்சுகீசிய நிறுவனமான விஷன் பாக்ஸூடன் முகமறியும் சோதனை தொழில்நுட்பத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அரசின் டிஜி யாத்ரா கொள்கைக்கேற்ப இப்புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. 2018ஆம் ஆண்டு உருவான இச்சட்டப்படி, இவ்வசதியைப் பயன்படுத்த பாஸ்போர்ட், பான் கார்டு அல்லது பயோமெட்ரிக் வசதிகளைக் கொண்ட ஆதார் இருந்தால் கூட போதும். காவல்துறை, தேசிய குற்றப்பதிவு ஆணையம் முகமறியும் சோதனைகளைப் பயன்படுத்த ஒப்பந்தங்களைக் கோரியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், மக்களின் பாதுகாப்புக்காக முகமறியும் சோதனைகளை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். வேலை செய்யும் விதம...